priya pandees
Moderator
அத்தியாயம் 11
'இதற்குமேல் இவர்களிடம் பேசி ஒன்றும் ஆகபோவதில்லை' என முடிவெடுத்தவன், அழைப்பை நிறுத்திவிட்டு அடுத்ததாக அழைத்தது அவன் மாமானாருக்கு தான். நிச்சயமாக ஏதோ தவறாக புரிந்து கொண்டு உளறுகின்றனர் என்று மட்டும் அவனுக்கு நன்கு புரிந்தது.
அவர் எடுத்ததுமே, "மாப்ள அவ ஸ்கூல் விஷயமா தான் ஜட்ஜ பார்க்க போயிருக்கா. உங்க மாமாவும் அத்தையும் சொன்னா நம்பாம எல்லாருக்கும் ஃபோன் பண்ணி பேசி பிரச்சனை ஆக்கிட்ருக்காங்க" என அவரும் அவசரமாக பேச, தன்மையாக செல்லும் அவரே எரிச்சல் கொள்ளும்படி தான் இருந்தது அவர்கள் நடவடிக்கை எல்லாம். சொல்வது எதையும் காதில் ஏற்காமல், அந்த ஜட்ஜ் வீட்டிற்கு சென்று கொண்டிருந்தனர்.
"நா பேசுறேன் மாமா" என்றவன், மீண்டும் அவன் மாமாவிற்கே அழைக்க,
"இந்நா வந்துட்டோம் மாரா. மனோட்ட பேசிட்டு உனக்கு பேச சொல்றேன் இரு" என அவரே பேசி வைத்துவிட்டார். இங்கு இவன் வெளிப்படையாகவே தலையில் அடித்துக் கொண்டான். அவர் இவ்வளவு தெளிவில்லாத ஆளும் இல்லை. அவன் அம்மா படுத்தும்பாட்டில் இப்படி அவசரப்பட்டிருக்கிறார் என புரிய அடுத்து யாருக்கு அழைப்பது என பார்த்திருக்க, சுரேந்தரிடமிருந்து அழைப்பு வந்தது.
"அத்தான்"
"உன் அக்கா ஃபோன போட்டு நசநசங்குறா, உங்கம்மா வேற அழுறாங்க. நா ஆபிஸ்ல இருக்கேன். உடனே கிளம்பி வான்னு நிக்றாங்க. என்ன நடக்குதுன்னு தெரியல, உன் மாமானார் நம்பர் நா வச்சுருக்குறது ஃபோன் போகல, நீ எனக்கு அனுப்பு நா என்னன்னு கேட்கிறேன்" என்றான் அவன்.
"அத்தான் அவ ஸ்கூல் விஷயமா ஜட்ஜ பார்க்க போயிருக்கா. இவங்க அவ டிவோர்ஸ் வாங்க நேரா ஜட்ஜுட்ட போயிட்டான்னு நினச்சு குதிச்சுட்ருக்காங்க. அது என்ன கடலமிட்டாயா? அவ வாங்க போயிருக்கா நாங்க தடுத்து நிறுத்திடுறோம்னு போயிட்ருக்காங்க. டிவோர்ஸ்கு எதுக்கு ஜட்ஜ் வீட்டுக்கு போகணும்னு யோசிக்க மாட்டாங்களா? மாமாவும் ஏன் இப்டி யோசிக்காம பண்றாங்கன்னு தான் தெரியல" என பேச,
"நல்ல குடும்பம்" என்ற சுரேந்தர், "அப்ப சரி, நா மீட்டிங் போறேன் பை" என மொபைலை நிசப்தத்தில் போட்டுவிட்டு வேலையை பார்க்க சென்றுவிட்டான் அவன்.
அங்கு, மனோ குழம்பி நிற்க, "உங்கள தேடி உங்க குடும்பமே வந்து நிக்குதுமா" என வந்து நின்றார் அதே காவல் அதிகாரி.
நீதிபதியும், கணினியில் இருந்து கண்ணை நிமிர்த்தி அவளை பார்க்க, "இதோ பேசிட்டு வரேன் மேடம்" என வெளியேற போக,
"வாசல் வச்சு பேச போறீங்களா?" என்றவர், "அவங்கள உள்ள அனுப்புங்க" என அவரிடம் சொல்லி அனுப்ப, அவர் சென்று உள்ளே அனுப்ப, மார்கண்டேயனின் மாமா, அத்தை, ஞானம், பாலா, சுரேந்தரின் அம்மா, அப்பா, அவரின் துணையாக மார்கண்டேயன் மனோவிற்கு திருமணம் செய்து வைத்தவர்கள் இருவர் என ஒரு பெரிய கூட்டமே உள்ளே வந்தது. திகைத்து தான் நின்றாள் மனோ!
விஷயம் காது மாத்தி காது செல்கையில், "மனோ விவகாரத்து கேட்டு நேரா ஜட்ஜுட்டயே பெட்டீஷன் குடுக்க போய்ட்டா" என பரவி விட்டிருக்க, "பொம்பள பிள்ள என்னப்பா இப்படி பண்ணுது, நாம பார்த்து கல்யாணம் பண்ணி வச்சுருக்கோம், பேசி முடிக்காம விட்ருவோமா? நாமலாம் இல்லையா என்ன? இந்த ஞானம் கூட ஒரு வார்த்தை சொல்லலையே? அவருக்கும் தெரியாம போயிருக்குமோ? இந்த காலத்து பிள்ளைக எங்கப்பா பெரியவங்கள மதிக்குதுங்க?" என கருத்துக்களை பறிமாறியபடி நீதிபதி வீட்டின் முன் கூடிவிட, அவர் உள்ளே அழைத்துவிட, பெருமிதமாக பஞ்சாயத்து தீர்க்க சென்று அமர்ந்து விட்டனர்.
"நானே பேசி அனுப்பிடுறேன் மேடம்" என மனோ கையை பிசைய, அவளையும் வந்திருப்பவர்களையும் ஒரு பார்வை பார்த்தவர்,
"எதாவது பெரிய இஷ்யூவா?" என பொதுவாக கேட்க,
"இல்ல மேடம்" என மனோவும், ஞானமும் சொல்ல,
"ஆமா மேடம்" என்றனர் மற்றவர்கள்,
இரு புருவமும் உயர்த்தி இருபக்கமும் பார்த்தவர், கணினியை விட்டு சாய்ந்து அமர்ந்து கதை கேட்க தயாரானார்.
"மேடம் உங்க டைம்ம வேஸ்ட் பண்ண மாதிரி ஆகிடும். இது நா எங்க வீட்டுக்கு கூட்டிட்டு போய் பேசிக்கிறேன். நா பாத்துக்குறேன்" என மனோவே சொல்ல,
"அப்றம் எதுக்கு இங்க வர கிளம்பி வந்த நீ? நாங்களாம் இல்லையா? பொறுத்தவ இன்னும் நாலு நாள் பொறுத்திருந்தா உன் புருஷனே வந்துருப்பான், நேர்ல பேசி முடிச்சுருக்கலாம். இங்க வர கொண்டு வந்துட்டியே நீ?" என அந்த அத்தையாகபட்டவர் சாட,
"யாரு நானா இங்க வர கொண்டு வந்தேன்?" என முறைக்கவும் முடியாமல் தான் முறைத்து வைத்தாள் மனோ.
"நீதான். நல்லவேளை நாங்க இங்க இன்னைக்கு வர போய் சரியா போச்சு, இல்லனா வக்கீல் நோட்டீஸ் அவன் வர்ற அன்னைக்கு கைக்கு கிடைக்கணும்னு தான ப்ளான் பண்ணிருக்க?" என்றார் சுரேந்தரின் அம்மா.
"இவங்க வக்கீல் இல்ல, ஜட்ஜ்" என்றாள் அழுத்தமாக.
"எங்களுக்கு தெரியாமையா வந்துருக்கோம்? நீ விவாகரத்து இல்லாம வேற எதுக்காக ஜட்ஜம்மாவ பாக்க வந்துருக்க போற?"
"எங்க ஸ்கூல் அன்வல் டேக்கு இன்வைட் பண்ணிட்டு இன்விடேஷன் மாடல் காமிச்சு கரெக்ட் பண்ணிட்டு போக வந்தேன்" என்றாள் இப்போது வெளிப்படையாகவே முறைத்து.
"ஹான்!" என வந்த அனைவரும் அதிர்ந்து விழிக்க, "நிசமாவா?" என்றார் மார்க்கின் தாய்மாமா.
"நீங்க எதுக்கு இவ்ளோ அவசரப்பட்டீங்க? எங்க ஸ்கூல் ப்ரின்ஸி காரணம் சொல்லிருப்பாங்க தானே? அப்றமு எதுக்கு இப்படி கிளம்பி வந்தீங்க? அதும் இத்தனபேர கூட்டிட்டு?" என நீதிபதியை ஒரு பார்வை பார்த்துவிட்டு பொறுமையாகவே கேட்க,
"இல்லம்மா ஏற்கனவே நீ அப்படி பண்ணபோறதா எல்லாரும் சொல்லுதாங்க. ஊர்லயே பேச்சாகி போச்சு. அன்னைக்கு அக்கா வந்தன்னைக்கும் நீ பாக்க முடியாதுன்னு திருப்பி அனுப்பிட்டியாம். அக்கா அங்க வந்து இங்க உள்ளவங்க பேசுனதையும் சொல்லி ரொம்ப அழுகை. அதான் இன்னைக்கு இப்படி கேள்விபடவும் யோசிக்க முடியல, சட்டுன்னு இதான் தோணுச்சு"
குனிந்து கண்ணை மூடி திறந்தவள், "சாரி மேடம் நா இவங்கள கிளம்ப சொல்லிடுறேன். இது உங்களுக்கு ஓகேவா இல்ல வேற மாதிரி போடணுமான்னு இப்ப சொல்றீங்களா இல்ல நா இன்னொரு நாள் வரட்டுமா?" என கேட்க,
"ஓகே தான் மனோ. அஃப்சியல் இன்விடேஷன் பவானிக்கு(அவரின் அசிஸ்டன்ட்) ஃபேக்ஸ் அனுப்பிடுங்க. அப்புறம் இதுல குவாலிஃபிகேஷன் போடணும்னு இல்ல. ஹானரபில் ஜட்ஜ், ஃபேமிலி கோர்ட்னு மட்டும் போட்டா போதும். எனக்கு டேட் அண்ட் டைம் மறுபடியும் நீங்க தான் ரிமைன்ட் பண்ணனும்" என்க,
"கண்டிப்பா மேடம். பவானி மேடத்துட்டயே சொல்லிடுறேன்"
"குட்"
"ஓகே மேடம். அப்ப நா கிளம்புறேன், இன்விடேஷன் கவர் மாடல்?" என கொண்டு வந்த இரண்டை எடுத்து நீட்ட,
"அது உங்க விஷ் தான் மனோ" என சிரித்தவர், இப்போது மற்றவர்களிடம் திரும்ப, 'ஙே!' என விழித்து இருவரையும் பார்த்திருந்தனர். பாலா முறைத்தபடி நிற்க, ஞானம் ஒருவித சங்கடத்துடன் நின்றிருந்தார்.
நீதிபதி பார்வையில், "சாரி ஃபார் த ட்ரபிள் மேடம்" என அவரே சொல்ல,
"இட்ஸ் ஓகே. ஏதோ கன்ஃப்யூஷன்னு தெரியுது. பார்த்துக்கோங்க" என்றுவிட, ஞானம் அனைவரையும் கிளப்பிக்கொண்டு வெளியே செல்ல, மற்றவர்களும் ஒருவித மன்னிப்பு பார்வையுடன் வெளியேறினர்.
"அகைன் சாரி மேடம். நானும் கிளம்பட்டுமா?" என மனோ வந்து நிற்க,
"டிவோர்ஸ் அப்ளை பண்ண போறீங்களா மனோ?" என்றார் அவள் மட்டும் இருப்பதை உறுதிபடுத்திக்கொண்டு.
"நோ மேடம்!" என அவள் உடனே மறுத்து தலையசைத்ததில் அவரும் சிரித்து, "ஹஸ்பண்ட் என்ன செய்றாங்க?" என கேட்க,
"அமெரிக்கால ஐடி ஃபீல்டுல இருக்காங்க"
"ஓ! பசங்க?"
"ரெண்டு பசங்க, இங்க தான் நம்ம ஸ்கூல்ல தான் படிக்கிறாங்க. லஞ்ச் டைமாச்சு இப்ப என்ன தேடவும் செய்வாங்க" என்க,
"ஓகே மனோ கிளம்புங்க. எதுவும் தேவைனாலும் தயங்காம காண்டாக்ட் பண்ணுங்க. டிவோர்ஸ் ஆப்ஷன் போகும் முன்ன, லைஃப் ரொம்ப ஷார்ட், அதுக்குள்ள பிடிச்ச மாதிரி பிடிச்சவங்க கூட அந்த உறவ இறுக்கி பிடிச்சு வாழ்ந்துட்டு போயிடறது பெட்டர். திரும்பி பார்க்கவோ திரும்ப வாழ்ந்துக்கவோ ஆப்ஷன் கிடைக்காமலே போய்டும். டேக் கேர்" என்க,
திக்கென்று அதிர்ந்தாலும், தலையசைத்து, "தேங்க்ஸ் மேடம்" என வேகமாக சொல்லி, வெளியே வந்துவிட்டாள்.
வாசலுக்கு வந்த நொடி, "இந்தா பேசு" என மார்க்கின் மாமா வந்து ஃபோனை அவள் கையில் கொடுத்துவிட்டார். அனைவரின் பார்வையும் அவள் மேலிருக்க வேறு வழியின்றி காதில் வைத்தாள்.
"ஒன்னுமே பண்ணாமலே எல்லாரையும் அலற விடுறல்ல எப்புட்றி?" என்றான் அங்கிருந்து மார்க், அவன் வீட்டாட்களை நினைத்து சற்று சிரிப்பாகவும் இருந்தது அவனுக்கு.
"ம்ச்!"
"முத்தமா தர்ற? ஃபோன்ல வேணாம் நேர்ல வந்து வாங்கிக்குறேன்" என சாதரணமாக சொல்ல, இப்படித்தானே அவளை பேச வைப்பான். அதனால் அடுத்து அவள் எந்த சத்தமும் எழுப்பாதிருக்க,
"ஓவர் ஸ்மார்ட் ஆகிட்ட? திட்டவாது பேசலாம் மனோ தப்பில்ல. நா சண்டே வந்துருவேன். வந்து பேசுறேன் அப்றம் சண்டை தீர்த்துப்போம்" என சொல்லிமுடிக்கும் முன்,
"இந்தாங்க" என அவள் மாமாவிடம் கொண்டு நீட்டியவள், "நா ஸ்கூல் போறேன். கண்ணனுக்கு லஞ்ச் குடுக்கணும். நீங்க வீட்டுக்கு போங்க. அப்பா கூட்டிட்டு போங்க" என்றுவிட்டாள்.
"உனக்கு பத்திரிகை வைக்க தான்மா வந்தோம்" என மார்க்கின் அத்தை சொல்ல,
"அப்பாக்கு வச்சுடீட்ங்களே அதே போதும். எங்க வீட்டுக்கு வர்றவங்க எல்லாரும் நா கல்யாணம் ஆனவனாலும், அப்பா வீட்லயே தான இருக்கான்னு, கல்யாணத்துக்கு முன்ன எப்படியோ அப்படித்தான் இப்பவும், சொல்லாம கூட போயிருவாங்க. எனக்கும் அதே பழகிடுச்சு. அதனால பரவால்ல தனி மரியாதைலாம் நா எதிர்பாக்குறதில்ல. நீங்க சொன்னதே போதும், இப்ப நா கிளம்புறேன்" என்றவள், அப்பாவிடமும், அண்ணாவிடமும் தலையை ஆட்டிவிட்டு கிளம்பிவிட, அவள் பேச்சை மாமாவின் கைபேசி வழி அமெரிக்காவில் இருந்தவனும் கேட்டு கொண்டுதானிருந்தான்.
"ரொம்ப மாறிட்டா!" அவனுக்கு அவனே சொல்லிக்கொண்டான். மற்றவர்களை பேசி ஞானமும் பாலாவும் தான் அனுப்பி வைத்தனர்.
அடுத்த மூன்று நாட்களும் மார்கண்டையன், அவன் பிள்ளைகளுக்கும், அவளுக்கும் என ஒரு பெட்டியையே நிறைத்துக்கொண்டு, அக்கா குடும்பம், மாமா குடும்பம், நண்பர்கள் என மற்றவர்களையும் மறக்காமல் அவர்களுக்கும் ஒரு பெட்டியை நிறைத்துக்கொண்டு சொன்னதுபோல் ஞாயிறு காலை பழூர் வந்திறங்கிவிட்டான்.
திருவள்ளுவன் கூட, "எப்படியோ இப்பவாது உன் வீட்ட உனக்கு தேடுச்சே? ஒரு மாசம் நா நிம்மதியா இருப்பேன். இந்தா இது உன் பசங்களுக்கு என்னோட கிஃப்ட்" என அவன் பங்கிற்கு அவனும் இரண்டு பார்சலை கொடுத்தனுப்பியிருந்தான்.
அவன் வந்திறங்கியதுமே முதலில் அழைத்தது மனோவிற்கு தான்.
இந்திய எண்ணிலிருந்து அவன் அழைத்ததுமே கண்டு கொண்டாள், அவன் வந்து சேர்ந்துவிட்டான் என்பதை. எங்கோ தொலைவில் இருந்தவன் இப்போது இதோ மூன்று மணிநேர தூரத்திற்கு வந்துவிட்டான், மிக அருகில் இருக்கிறான். உள்ளுக்குள் சிலிர்த்தாலும், 'வேணாம்! இந்த சிலிர்ப்பு ஆர்ப்பரிப்பு எதுவும் வேண்டாம்' என அந்த நினைப்பையே தடுத்தாள்.
அவளறையில் அனைத்தையும் எடுத்து ஒதுங்க வைத்துக்கொண்டிருந்தாள். அப்போது மீனம்மா, "என்ன ஃபாரீன் சாரு, இந்தபக்கம்?" என்றதும் பகீரென்றது அவளுக்கு.
'நேரிலேயே வந்துவிட்டானா?' என்று. மூச்சை இழுத்து தான் பிடித்தாள், 'அவ்வளவு தானா உன் தைரியம்?' என்றது அவள் மனசாட்சியே!
அறை கதவை வேகமாக இழுத்து சாற்றிவிட்டாள், கை, கால்கள் கூட நடுக்கம் எடுத்தது, எதற்கு என்றே தெரியாத பயம், பதட்டம் அவளை ஆட்படுத்த, திணறிகொண்டு வந்தாள்.
"நோ மனோ! எதுக்கு டென்ஷன்? எதுக்கு இவ்ளோ டென்ஷன் ஆகணும்? என்ன செஞ்சுடுவாங்க? உன்னோட இந்த வீக்நெஸ் தான் ஒவ்வொரு முறையும் உன்ன ஏமாற வச்சது, இந்த டைம் அத பண்ணாத. பண்ணவே பண்ணாத. ஸ்டராங்கா அவர ஃபேஸ் பண்ணு. பண்ணணும் நீ" என அவளுக்கு அவளே சொல்லியபடி நிற்க,
"மனோ!" என வந்து கதவை தட்டினார் ஆண்டாள்.
"ம்மா!"
"என்ன பண்ற கதவ பூட்டிட்டு?" என தட்ட,
"இந்தா வரேன்மா" என ஆழ மூச்செடுத்து கதவை திறக்க,
"இந்தா, சின்னவன என்னன்னு கேளு, மண்ண அள்ளி தின்னுட்டான். சோவ பத்தும், நா வாய நல்லா கழுவி விட்டுட்டேன், இருந்தாலும் வயிறுபுழு மருந்து எதுவும் குடுப்போம், நா அரைச்சு எடுத்தாரேன். கிருஷ்ணா, அந்த கீதா மகன் கூட தான் விளையாண்டுட்டு நிக்றான்" என அவளிடம் கண்ணனை நீட்டிவிட்டு, அவர் அடுப்படி செல்ல, நெஞ்சு துடிக்க எதையோ எதிர்பார்த்தவள், அப்படி எதுவுமில்லாமல் வேறெதுவோ காதில் விழவும் மலங்க மலங்க விழித்தாள். அறையை விட்டு வெளியே வந்து, வரவேற்பரை, வாசல், வெளி கேட் வரை பார்க்க, மீனம்மா தான் ஃபோனில் பேசியபடி நின்றார்.
"எனக்கு வேற வேலை இல்லையாங்கேன்? வேணும்னா வாங்க சாரு" என அவர் பேச்சு குரல் கேட்டதும், மலமலவென்று கண்ணீர் இறங்கிதான் விட்டது அவளுக்கு. படபடப்பு நீங்கி ஆசுவாசம் பெற்றும் நெஞ்சடைத்தது அவளுக்கு, அந்த உணர்வை சட்டென்று அவளால் உதறிவிட கூட முடியவில்லை, அப்படித்தானிருந்தது.
"ம்மா!" என கண்ணன் அழைப்பில் தான் வேகமாக முகத்தை துடைத்தாள். அப்படியே சென்று அறையில் கட்டிலில் மகனை இறக்கிவிட்டு, தானும் காலை மடக்கி, முட்டியை அணைத்து அமர்ந்துவிட்டாள்.
மீனம்மாவிடம் பேசிவிட்டு வைத்தவனும், மனோவை மீண்டும் அழைக்க, எடுக்கவேயில்லை அவள்.
"படுத்தாத மனோ. ஃபோன எடேன்டி" என இந்திய எண் என்பதால் சாதா செய்தியாகவும் அனுப்பி வைத்தான், பார்க்கத்தான் ஆளில்லை அந்தப்பக்கம்.
மறுபடியும் மீனம்மாவிற்கே அழைத்து, "மனோ ஃபோன் எடுக்கல மீனம்மா. ஹெல்ப் பண்ணுங்க ப்ளீஸ்" என கேட்க,
"திரும்ப உங்க பொண்டாட்டிய கூட்டிட்டு தான் ஃபாரீனுக்கு போவேம்னு கடுதாசி எழுதி கையெழுத்து போட்டு குடுங்க, அவள நா பேச வைக்குதேன்" என்றார் அவர்.
"மீனம்மா!"
"சொல்லுங்க ஃபாரீன் சாரு"
"அத நா என் பொண்டாட்டி தான் சொல்லுவேன் மீனம்மா"
"அப்ப சொல்லிக்கோங்க, எங்கிட்ட என்னத்துக்கு எலுப்புன்னு கேட்கீக?"
"என் நேரம் தான் எல்லாம், கிருஷ்ணா, கண்ணா இருந்தா அவங்கட்டயாவுது ஃபோன குடுங்க"
"அவங்களுக்கு, நீங்க நேர்ல வந்தாளே அடையாளம் தெரியாது, ஃபோனுல என்னன்னு சொல்லி பேச வைக்க நானு?" என உதட்டை பிதுக்கிவிட்டார் மீனம்மா.
"வேணும்னே பண்றீங்க தான?"
"மூணு வருஷமா தேடல, வந்த இறங்கின மூணு மனிநேரத்துல முப்பது ஃபோனு பண்ணிட்டீக. அப்ப பிரச்சனை அமெரிக்காவுல தான் இருக்கு. செட்டப்பு எதுவும் வச்சுருக்கீகளோ?"
"ஆமா திருவள்ளுவன் ஒருத்தன கூடவே வச்சுருக்கேன். அவன்கூடத்தான் குடித்தனமே" என பல்லை கடித்தான்.
"ஆமா சின்ன சாரும் சொன்னாக, அப்ப அவுக உங்க கூட வேலை பாக்கலையா? அந்த பைய எதுக்கு உங்கள எங்க புள்ளைட்ட பேசவிடாம பண்ணுதான்? அவன் நம்பர் இருந்தா குடுங்க, ஃபோன போட்டு வாரியல் பிஞ்சுபோவும்னு சொல்லுதேன்"
"ஐயோ மீனம்மா, தேவையில்லாததொல்லாம் பேசிட்ருக்கீங்க"
"உங்கட்ட நா வேற என்னத்த பேச?"
"நீங்க பேசவே வேணாம். வைங்க" என இவனே வைத்துவிட்டான். எவ்வளவு முட்டி மோதினாலும் மனோவிடம் பேச முடியவில்லை அவனால். கிளம்பி வர நினைத்தாலும், கல்யாண வேலைகள் இருக்கவே அங்கே இருந்துவிட்டான். திருமணத்தன்று, ஞானமும் ஆண்டாளும் கிருஷ்ணனை மட்டுமே அழைத்து வந்து நின்றனர்.
மொத்த குடும்பமும் மனோவை கேட்டது, "அவளுக்கு உடம்பு சரியில்ல" என சமாளித்தனர். அதிகம் எதிர்பார்த்திருந்தான் மார்கண்டேயன், அவள் வராதது அப்படியொரு கோபத்தை கொடுக்க, திருமணம் முடியும்வரை கூட நிற்காமல் கிளம்பிவிட்டான், உடன் கிருஷ்ணனையும் பைக்கில் ஏற்றிக்கொண்டு. அவன் வரவே மாட்டேன் என அவ்வளவு அழுகை, ஆனாலும் விடாமல் தூக்கி முன்னால் அமர்த்தி கொண்டு நறுமணந்தியை நோக்கி வண்டியை கிளப்பிவிட்டான்.