எங்கள் தளத்தில் எழுத விரும்பும் எழுத்தாளர்கள் எங்களை கீழ் உள்ள மின்னஞ்சலில் தொடர்ப்புக்கொள்ளவும் நன்றி Email ID - narumugai.ink@gmail.com

எல்லையற்ற காதலே

நீண்டதொரு காத்திருப்பின் கால அளவுகள்...!
கடிந்து கொள்ள இயலா கண்டிப்புகள்...!
வெளிப்படுத்த முடியாத அன்பினில்
திக்கித் திணறும் நிமிடங்கள்...!
உருகிக் குழைந்து காதலாகி
நிற்கும் கணங்கள்...!
கண்களில் காதலாய் தேங்கி நிற்கும் கண்ணீர்த்துளிகள்...!
தலைகோதி அரவணைக்கும் தழுவுகைகள்...!
எனை விட்டுப்பிரிந்து செல்லாதே என ஏங்கித் தி(தெ)ரியும் ஏக்கங்கள்...!
நித்தமும் உன் நினைவுகளில் நீந்திக்கொண்டிருக்கும் தருணங்கள்...!
எல்லாம் எல்லாம் எல்லையற்ற காதலே...!❤❤❤

- எல்லையற்ற காதலுடன்
ஹெப்சிபா சவரிராஜ்
 
Last edited:
Top