kani suresh
Moderator
நிலா அவளின் வீட்டிற்கு சிவாவின் நினைவோடு சென்று கொண்டிருந்தாள்.
'அவன் நம் கண்ணோட்டத்தில் ஒவ்வொரு நாளும் ,ஒவ்வொரு விதமாக தெரிகின்றான் 'என்று நினைத்துக் கொண்டே சென்றாள்...
வீட்டிற்குச் சென்றும் சிவாவின் நினைவாகவே இருந்தாள் .
சிறிது நேரம் கழித்து, அவளின் அண்ணன் உதயா. அவளின் தலையில் கொட்டி விட்டு,"என்ன மேடம் ஏதோ யோசனையா இருக்கீங்க போல?"சீக்கிரம் வேற வந்துட்ட ?" என்றான் புருவம் உயர்த்தி கேலியாக...
"டேய் அண்ணா ! நான் உன் கிட்ட ஒரு விசயம் சொல்றேன். அதுக்கு நீ எனக்கு பதில் சொல்லு ?"என்று கேட்டாள் .
ஆனால், அதற்கு உதயாவோ ,ஒரு நிமிடம் ஜர்க் ஆகி அவளைப் பார்த்தான்...
ஏனென்றால் ,அவள் அவளுக்கு ஏதாவது காரியம் ஆக வேண்டும் என்றால் மட்டுமே," அண்ணா!" என்று பாசமாக அழைப்பாள் அன்பொழுக .
இல்லை என்றால் ,அவனை அவள் எப்போதும் அண்ணன் என்று கூப்பிட்டதில்லை.ஆகையால் தான் அப்படிப் பார்த்தான்..
அடுத்த நிமிடம் தன்னை சரி செய்து கொண்டவன்.." சரி சொல்லு குட்டி பிசாசு. என்ன உனக்கு பிரச்சனை ? என்ன அண்ணன்னு எல்லாம் மரியாதையாக கூப்பிடுற?"
என அவளின் அருகில் அமர்ந்து, அவளின் தலையை கோதிக் கொண்டே கேட்டான்..
நிலா இன்று காலையிலிருந்து நடந்த அனைத்தையும் , ஒன்று விடாமல் உதயாவிடம் கூற,
அவனும் தனது தங்கை சொல்வதை பொறுமையாக கேட்டுக் கொண்டு இருந்தான்...
"சரி. அதுக்கு என்ன இப்போ? அதான் அந்த பொண்ணு, உன்னோட பிரண்டோட பிரச்சினை முடிஞ்சிடுச்சு இல்ல, அப்புறம் என்ன? திரும்ப ஏன் அதையே நினைச்சுட்டு உட்கார்ந்து இருக்க?"
"ப்ச்! "என சலித்துக் கொண்டவள்."நான் இப்போ அத பத்தி யோசிக்கல."
"பின்ன வேற என்ன?"
"நான் அந்த போலீஸ் பத்தி பேசுறேன் உதயா!..."
"லூசா நீ! அவரைப் பத்தி யோசிக்க என்ன இருக்கு? அவர் அவரோட கடமையை சரியா செஞ்சிருக்கார் அவ்வளவுதானே!"
"இல்லடா. நான் அதை சொல்லல. நேத்து என்ன ஒரு போலீஸ் ஃபாலோ செஞ்சுட்டு வந்தார்ன்னு சொன்னேன்ல. நா அங்க பஸ் ஸ்டாப்ல நின்னுட்டு இருக்கும்போது என்கிட்ட வந்து பேசினாருன்னு சொன்னேன்ல.."
"ஆமா அவருக்கு என்ன?"என அவளை குறுகுறுவென பார்த்தான்.
"அதே மாதிரி இன்னைக்கு என் பிரண்டோட பிரச்சினையை சரி பண்ணி கொடுத்தார்னு சொன்ன இல்ல ஒரு போலீஸ்"
உதயா அவளை கேள்வியாக பார்த்தபடி இருக்க..
"நேத்து ராத்திரி பஸ் ஸ்டாப்ல பார்த்தவர். என்ன ஃபாலோ பண்ணினவரு ,அவரும் இன்னக்கி என் பிரண்டோட பிரச்சனையே தீர்த்து வச்சவரும் ஒருத்தரே.. அதாவது நேத்து நான் பார்த்தவரும், இன்னைக்கு என் பிரண்டோட பிரச்சினையை தீர்த்து வச்சதும் ஒருத்தர்தான். அதை தான் இவ்ளோ நேரம் சொல்லிட்டு இருக்கேன்.."
"ஓ! மேடம் சைட் அடிச்ச போலீஸ் ஆபீஸரா? அதான் என்கிட்ட இவ்வளவு நேரம் அந்த போலீஸ் பத்தி பேசிட்டு இருக்கியோ?"
"லூசு மாதிரி பேசாத!"
"யாரு நானா? நீதாண்டி லூசு! அவர் அவரோட கடமையை செஞ்சிருக்காரு.. அதுக்கு எதுக்கு நீ இவ்ளோ தூரம் அவர பத்தி யோசிச்சிட்டு இருக்க ? நேத்தி அவர் செஞ்சதும் அவரோட கடமை, மனிதாபிமானம். இன்னைக்கு செஞ்சதும் அவரோட கடமை அவ்வளவுதான் ! இதுல யோசிக்க எதுவும் இல்லை."
"இல்லடா இந்த விஷயத்தை சொல்ல நான் உன்னை கூப்பிடல.."
"பின்ன வேற எதுக்கு கூப்பிட்ட?"
"இல்ல. நான் உன்கிட்ட ஒரு விஷயம் சொல்லுவேன். ஆன, நீ என்ன தப்பா நினைக்க கூடாது, அதே மாதிரி அப்பா, அம்மா கிட்டயும் சொல்லக்கூடாது.."
தங்கையை ஆழ்ந்து நோக்கினான்..
அவளின் அப்பா ,அம்மா இருவரும் ஒரே வண்டியில் தான் வேலைக்குச் சென்று வருவார்கள். இருவரும் ஒரே காலேஜில் தான் ப்ரொபசராக வேலை செய்து கொண்டு இருக்கிறார்கள்.
நிலா உதயாவிடம் ,அப்பா ,அம்மா கிட்ட சொல்லக்கூடாது என்று சொல்லும் போதே ,அவர்கள் வீட்டிற்கு வந்து விட்டார்கள்.. ஆனால் அவளது வார்த்தையில் வெளியேவே நின்று கொண்டார்கள் உள்ளே நுழையாமல்,
அப்படி தன் பிள்ளைகள் என்னதான் பேசிக் கொள்கிறார்கள் என்று கேட்கலாம் என்று வெளியே நின்று விட்டார்கள்.
சரி சொல்லு என்ன விஷயம் என்றான் இப்போது நேரடியாக விஷயத்திற்கு வந்தான்..
ஒரு சில நொடி தயக்கத்திற்கு பிறகு, "டேய் அண்ணா! நேத்தி நான் பார்த்தேன் சொன்னேன்ல போலீஸ். அவரை இதுக்கு முன்னாடி நான் எங்கேயோ பார்த்த மாதிரி இருக்கு.. எனக்கு சரியா தெரியல, அவரை பார்க்கும் போதெல்லாம் ஏதோ தோணுது . ஆன, அது என்னன்னு தெரியல.."
"நிலா அதுக்குள்ள லவ் பண்றியா? என்ன ?" என்றான் பதறியவனாக..
"டேய் தடிமாடு!" என்று அவன் முதுகில் ஒன்று மொத்தியவள்.
"லூசாடா நீ! லவ் பண்ணல
. எனக்கு அவர பார்க்கும்போது ஏதோ தோணுது. ஆனா, அது என்னன்னு தெரியல சரியா எனக்கு.. "
உதயா," ஒரு மாதிரின்னா என்ன அர்த்தம் ?புரியல ...இதுல அப்பா ,அம்மா கிட்ட வேற சொல்ல வேணாம்னு சொல்ற?"
அவளோ, அவனை தீ என முறைக்க..
சிரித்தவன்.."சொல்லுடி குட்டி பிசாசு. ஒரு மாதிரினா அதுக்கு என்ன அர்த்தம் எனக்கு புரியலையே?"என்றான் கேள்வியாக புருவம் ஏற்றி,
அவள் வேறு எதுவும் பேசாமல் ,அவன் தலையை பிடித்து ஆட்டி விட்டு," உன்கிட்ட போய் சொன்னேன் பாரு. என்ன தான் எதையாவது கொண்டு அடிக்கணும் !" என்று தலையில் தட்டிக் கொண்டு, ரூமுக்குள் நுழைந்து விட்டாள்.
உதயாவும் அதை பெரிதாக எடுத்துக் கொள்ளாமல் அவனது அறைக்கு சென்றுவிட்டான்..
அண்ணன், தங்கை இருவரும் பேசிக் கொண்டிருந்ததை வெளியில் இருந்து கேட்டுக் கொண்டிருந்த, அவர்களின் பெற்றோர்களோ, தங்களுக்குள் பார்த்து அர்த்தமாக சிரித்துக் கொண்டு, வீட்டிற்குள் நுழைந்து அவரவர் வேலையை பார்க்க ஆரம்பித்து விட்டார்கள்.
இரவு அனைவரும் ஒன்றாக அமர்ந்து சாப்பிட்டார்கள். அப்போது நிலா இன்று நடந்த அனைத்தையும் ஒன்று விடாமல் அப்பா, அம்மா இருவரிடமும் கூறினாள்.
தினமும் அன்றைய பொழுது நடக்கும் அனைத்து விஷயங்களையும் தாய் தந்தையிடம் கூறி பழக்கப்பட்டதால் இதையும் கூறியிருந்தாள்.
ஆனால், அவள் தாய் ,தந்தையிடம் கூற வேண்டாம் என்று உதயாவிடம் கூறிய விஷயம் சிவரஞ்சனை பார்க்கும்போது அவளுக்குள் ஏதோ ஒன்று தோன்றுகிறது என்று கூறினாலே, அதைப் பற்றி மட்டும் தான்..
அதற்கு காரணமும் இருந்தது. ஏனென்றால், தாய், தந்தையிடம் இந்த விஷயத்தை கூறினால், உதயா விளையாட்டுக்காக லவ் பண்றியா? என்று கேட்டதை அவளது அப்பா ,அம்மா உண்மை என்று நம்பி சீரியஸாக எடுத்துக் கொள்வார்கள் என்பதால் தான் அவர்களிடம் சொல்ல வேண்டாம் என்றாள்.
ஆனால்,அவளின் அப்பா, அம்மா இவள் பேசியதை கேட்டு விட்டார்கள் என்பதை இவள் அறியவில்லை ..இவள் நினைத்தது போல் அவர்கள் இந்த விஷயத்தை சீரியஸாக தான் எடுத்துக் கொண்டார்கள்...
அனைவரும் இரவு உணவு முடித்துக் கொண்டு, சிறிது நேரம் பேசிவிட்டு, அவரவர் அறைக்கு சென்று விட்டார்கள்
நிலாவிற்கு அவளது ஆபீஸ் தோழி போன் செய்து, நன்றி கூறிவிட்டு, இன்னும் இரண்டு மாதத்தில் தனக்கு திருமணம் இருப்பதாக கூறினாள்.
நிலா," இந்த வாழ்க்கையாவது சந்தோஷமா வாழ பாரு! உன்னோட அப்பா அம்மாவுக்கு மட்டும் இல்லாம ,உனக்கு வரப்போற வருங்கால கணவருக்கும் உண்மையா இரு.. கண்டதையும் யோசிக்காம உன் வாழ்க்கையை சந்தோஷமா வாழ பாரு.." என அவளுக்கு அறிவுறுத்திவிட்டு வைத்து விட்டாள்.
அதன் பிறகு, நிலாவும் எதுவும் யோசிக்காமல் ,படுத்ததும் உறங்கி விட்டாள். அவள் எப்போதுமே படுத்தவுடன் உறங்கும் ரகம் தான்..
ஆனால், இன்னும் கொஞ்ச நாட்கள் போனால்,' தூக்கம் என்ற ஒன்றை மறந்து எந்நேரமும் ஒருவனை நினைத்துக் கொண்டே இருப்போம்' என்று அப்போது அவள் அறியவில்லை..
மறுநாள் காலையில் வேலைக்கு சென்று கொண்டிருக்கும்போது, அன்று போல் இன்றும் அதே சிக்னலில் சிவாவை பார்க்க நேரிட்டது.. தூரத்தில் வரும்போதே அவனை பார்த்து விட்டாள். ஆனால், அன்று போல் இன்று நின்று அவனை பார்க்கவில்லை.. அவனும் இவளை கண்டுகொள்ளவில்லை.
இருவரும் அவரவர் வேளையில் மூழ்கி இருந்தனர். இதே போல் கிட்டத்தட்ட ஒரு மாதங்களுக்கு மேல் அவனை பார்க்க நேரிட்டது.. தினமும் அவள் வேலைக்கு செல்லும் நேரத்தில், அதே சிக்னலில் நின்று டிராபிக் போலீஸ் இடம் பேசிக்கொண்டு இருந்தான்..
இது எதர்ச்சியாக நடந்த செயல்தான். திட்டமிட்டு எதுவும் நடக்கவில்லை. ஆனால், நிலா தவறாக புரிந்து கொண்டாள்.
தன்னை பார்ப்பதற்காக தான், அவன் தினமும், தான் வேலைக்கு செல்லும் நேரத்திற்கு, அதுவும் தான் செல்லும் வழியில் இருக்கும் சிக்னலில் வந்து நிற்கிறான் என்று எண்ணிக் கொண்டாள்.
ஆனால் அவனது தினசரி வேலையில் இதுவும் அடக்கம்.. அவன் ஏரியாவில் வரும் சிக்னலில் தினமும் சென்று பார்வையிடுவது அவனது வேலையாகும்..
தினமும் பொறுத்து பொறுத்து பார்த்த நிலா. ஒரு நாள் அவனின் அருகில் யாரும் இல்லை என்பதை உணர்ந்து, இன்று அவனிடம் என்னவென்று கேட்டு விட வேண்டும் என்று உறுதி எடுத்துக் கொண்டவள் அவனது அருகில் சென்று வண்டியை நிறுத்தினாள்.
தன் அருகில் நிழல் ஆடுவதை உணர்ந்து அவன் திரும்பி பார்க்க.. அங்கு நிலா நின்று கொண்டு இருந்தாள் .அவள் வரும்போதே அவன் போனில் ஒரு முக்கியமான விஷயமாக பேசிக் கொண்டிருந்தான் .வேறு ஒரு போலீஸிடம்.. அவளை நிமிர்ந்து பார்த்தவன் மீண்டும் போனில் பேசுவதை தொடர்ந்தான்.
நிலா அவனின் கண் முன்பு இரு கைகளைக் கொண்டு ஆட்டியதால்,
"டு மினிட்ஸ்!" என கூறிவிட்டு மீண்டும் போனில் பேசுவதை தொடர்ந்தான்..
அவனையே பார்த்தபடி நின்றாள்..
போன் பேசிவிட்டு வைத்தவன் "என்ன?" என்றான் அவளை பார்த்து நேராக .
"டெய்லி எதுக்காக இந்த நேரத்துல இங்க நின்னுட்டு இருக்கீங்க?"என்றாளே பார்க்கலாம்..
"ஏனாம் அதுக்கு நான் உங்களுக்கு பதில் சொல்லணும்னு அவசியம் இல்லையே? கவர்மெண்ட் ரோடு நான் நிக்கிறேன். என்னவோ உங்க வீட்ல வந்து நிக்கிற மாதிரி என்கிட்ட வந்து கேள்வி கேட்டுட்டு இருக்கீங்க? நான் எப்ப வேணாலும் எங்க வேணாலும் இருப்பேன் அதனால உங்களுக்கு என்ன பிரச்சனை?"
அவள் அப்படி கேட்டவுடன் இவன் ஏன் இப்படி பதில் அளிக்கிறான் என்று அவனுக்கே புரியவில்லை.. இப்படி யாரிடமும் வம்பு இழுப்பவன் கிடையாது. இதுவே வேறு யாராவது கேட்டிருந்தால் இந்நேரத்திற்கு அவனது பதிலடியே வேறு மாதிரியாக இருந்திருக்கும். ஆனால், இவளிடம் வம்பு இழுக்க தோன்றியது..
நிலா அவனை ஒரு சில நொடி நின்று குறுகுறுவென பார்த்துக்கொண்டு நின்றாள்.
அப்போது, சிவாவிற்கு கீழே வேலை செய்யும் போலீஸ் ஒருவர் வந்து அவனிடம் பேசிவிட்டு சென்றார்.
போவதற்கு முன்பாக, "சார் யாரு இந்த பொண்ணு .ஏதாவது முக்கியமான விஷயமா ?என்ன விஷயம் சொல்லுங்க, நான் பாக்குறேன்!" என்று கேட்டிருந்தார்.
ஆனா, அவனோ ,"இல்ல எனக்கு தெரிஞ்சவங்க தான். என்ன பார்க்க வந்திருக்காங்க, நீங்க உங்க வேலைய பாருங்க."என அவரை அனுப்பி வைத்து விட்டான்.
"யாரு நான் உங்களுக்கு தெரிஞ்ச பொண்ணா ?எதுக்கு அவர்கிட்ட அப்படி சொன்னீங்க ?"என்று சண்டைக்கு நின்றாள்.
"நான் யாருன்னு உங்களுக்கு தெரியாது சரி. அப்புறம் எதுக்காக என்கிட்ட வந்து கேள்வி கேட்டுட்டு இருக்கீங்க? ஏன் இங்க நிக்கிற ?இந்த டைமுக்கு நிக்கிறன்னு?"என்றான் அவள் கண்களை ஆழ்ந்து நோக்கியபடி,
நிலாவிடம் அமைதி. என்னவென்று கூறுவாள். உண்மையாகவே ஏன் இப்படி அவனிடம் வந்து கேட்கிறாள் என்று அவளுக்கும் புரியவில்லையே!
'அவர் ஒரு போலீஸ். வேலை விஷயமாக நின்று கொண்டிருக்கிறார் .அதற்காக தனக்காக தான் இங்கு வந்து நிற்கிறார் என்று கேட்பது சரியா ?'என்று மனதிற்குள் எண்ணியவள். வேறு எதுவும் பேசாமல் தன் வண்டியை எடுத்துக்கொண்டு கிளம்பி விட்டாள் அவ்விடத்தை விட்டு,
போகும் வழியில் அவனது நினைவுதான் அவளுக்கு.. 'நம்ப எதுக்காக அவர்கிட்ட போய் இந்த நேரத்துக்கு இங்கே ஏன் நிற்கிறீங்க? என்ன பாக்க தான் வந்தீங்களான்னு கேட்க போனேன்..'என எண்ணியவள்..
உதயா சொன்னது போல, 'அவர் வேலையைத் தானே அவர் செய்கிறார். நம்மதான் தப்பு தப்பா கண்டதையும் நினைச்சிட்டு இருக்கோம்' என்று யோசித்து தலையை உலுக்கி விட்டு, எதுவும் நடக்காதது போல், அனைத்தையும் மறந்து விட்டு, ஆபீஸ்க்குள் நுழைந்தாள்..
அவளே , மறக்க வேண்டும் , நினைக்க கூடாது என்று நினைத்தாலும், அதைப்பற்றி யோசிக்காமல், நினைக்காமல் அவளால் இருக்க முடியுமா?எதிர் காலத்தில்..