எங்கள் தளத்தில் எழுத விரும்பும் எழுத்தாளர்கள் எங்களை கீழ் உள்ள மின்னஞ்சலில் தொடர்ப்புக்கொள்ளவும் நன்றி Email ID - narumugai.ink@gmail.com

manjam 28

subageetha

Moderator
Manjam 28


தன் கணவனிடம் ஆரம்ப நாட்களில் அன்பை மட்டும் எதிர்பார்த்து கிடைக்காது என்று தீர்மானம் செய்த பின் அவள் மனம் அவனை நாடவில்லை. விவாகரத்து எனும் முடிவை அவன் முன்னிறுத்திய போது மறுக்கவில்லை.


உணர்வுகள் மரித்த நிலையில் மீண்டும் பெற்றோரிடம் வந்து சேர்ந்தாள்.

மீண்டும் அவளுக்கு உணர்வுகள் மரிக்கவில்லை என்பதை புரிய வைத்து, உணரவைத்தவன் நிரஞ்சன். அவனது பாராமுகம் ஏனோ அவளது ஏமாற்றம் எனும் உணர்வை இப்போது தூண்டி விட்டிருக்கிறது.


அவன் ஏன் ஆறு மாதங்களாக என்னை பார்க்கவே வரவில்லை... நான் போன் செய்தாலும் அவ்வளவாக பேசுவது கூட கிடையாதே...

எனக்கு அவனை பார்க்கவேண்டும். நான் எப்படி பெங்களூரு செல்ல முடியும் என்ற தவிப்பு அவளின் உள்ளே! அவளது மனம் கனிய இன்னும் நேரம் வேண்டும் என்று உணர்ந்தவனோ மறந்தும் தன் எண்ணங்களை வெளிப்படுத்தினான் இல்லை. தன்னுள்ளே இருக்கும் காதலை அவளிடம் நிரப்ப ஆசைதான்...தன்னை அவளுக்குள் புதைத்துக்கொள்ளவும், அவளை தன் தோள் சாய்த்து காதல் மொழி பேசவும், பல வருஷங்களுக்கான காத்திருப்பு அவனது. ஆனாலும், அவளை முதலில் வலிகளை மறக்க செய்து, தன்னை அவள் மனதில் முன்னிறுத்தி கொள்ள பழக்கப் படுத்தவேண்டிய கட்டாயம் அவனுக்கு உண்டு. அவள் அழைக்கும் பொழுது அழைப்பை ஏற்பவன் அவளுடன் அதிகம் பேசுவதை தவிர்த்தான்.

நிரஞ்சனின் இந்த ஒதுக்கம் விஸ்வம் வித்யா இருவருக்கும் குழப்பத்தை கொடுத்தபோதும் மகளின் தவிப்பு அவர்களையும் தவிக்க செய்தது. போதாகுறைக்கு அலுவலகம் முழுவதும் அதிதியின் நிலை தெரியும், ஆதலால் ஒருசிலருக்கு பரிதாபம் அவள் மீது. அலட்சியம் சிலருக்கு.அது வெளிப்படையாகவும் தெரிந்தது. அதி ஏன் இங்கு வேலைக்கு சேர்ந்தேன் என பலமுறை யோசிக்கும் அளவுக்கு இந்த போக்கு தொடர்ந்து வந்தது.


இந்த நிலையில் விஸ்வம் தனது அலுவலகம் சம்மந்தமாக பெங்களூர் செல்ல, அவர் உடல் நிலையில் உள்ள தொய்வினாலும்,பயிற்சிக்காகவும் அதியும் அவருடன் சென்றாள். பெங்களூருவில் ஒரு வார வேலை நெட்டி வாங்கியது. வேலை முடிந்து ஞாயிறு அன்று திரும்ப செல்ல வேண்டும்.


அவள் மனம் முழுவதும் இவ்வளவு தூரம் வந்துவிட்டு நிரஞ்சனை பார்க்காமல் திரும்ப வேண்டுமா எனும் எண்ணம் அரிக்க, சனிக்கிழமை மாலை தன் அப்பாவிடம் இது பற்றி எப்படி பேசுவது என்று தயங்கி கொண்டிருக்க மகளின் முகம் பார்த்தவருக்கு புரிந்து விட்டது அவள் விரும்பும் விஷயம்... அவளே கேட்டால் பார்ப்போம் என அமைதியாய் இருந்து விட்டார். நீண்ட யோசனைக்கு பின் மெல்ல தயங்கியவாறே அப்பாவிடம் 'அப்பா, நாம நிரஞ்சனை போய் பாத்துட்டு வருவோமா' என்றவளை ஆழ்ந்த பார்வை பார்த்தவர், ம்ம்ம்... என்னால வர முடியாது அதிம்மா. நீ வேணா போய் பார்த்துட்டு வா.. என்று முடித்துக்கொண்டார். இங்கு வந்ததில் இருந்தே அவள் தவிப்பை பார்ப்பவருக்கு அவளது கோரிக்கையை நிராகரிப்பதற்கு மனதில்லை.

இந்த பெண்ணுக்கு மறுமணம் செய்ய சீக்கிரம் வேறு இடம் பார்க்க வேணும் என்று நினைத்துக்கொண்டார். ஏனோ இம்முறையும் நிரஞ்சனை பற்றி யோசிக்க அவருக்கு விருப்பம் இல்லை. சுருங்க சொன்னால், ஏற்கனவே அவன் கேட்ட பொழுது மறுத்து விட்டு இப்போது மீண்டும் அவனிடம் என் பெண்ணை திருமணம் செய்து கொள் என்று கேட்க அவரது ஈகோ அனுமதிக்கவில்லை. சிறு வயதிலிருந்து அவளது நண்பன் என்றுவிட்டு இப்போது காதல் கத்திரிக்காய் என்று சொல்வதில் நியாயம் இல்லை என்றும் யோசிக்கிறார். நான்கு வருஷங்கள் முன்பு ஹார்மோன் படுத்தும் பாடு என்று யோசித்தாலும், இப்போது அதி இருக்கும் நிலையில் அவளின் முகம் பார்க்கிறானே.. இதுவும் ஹார்மோன் செய்யும் வேலையா, அவனுக்கு வேறு பெண்கள் கிடைக்காதா... என்று கொஞ்சம் யோசித்திக்-

-கலாம் விஸ்வம்.


இது ஒரு பக்கம் என்றால் இன்னொரு பக்கம் வினயனின் பெற்றோர் அவனுக்கு வேறு பெண் பார்க்கிறார்கள். இரண்டாவது திருமணம் என்றாலும் நல்ல இடமாக தேடுகிறார்கள். அங்கேயே வேலை பார்க்கும் பெண்ணாக, அவனுக்கு பொருத்தமாக முக்கியமாக முதல் திருமணமாக இருக்கவேண்டும் என்பது வினயனின் விருப்பம். அவன் அதியை படுத்தி எடுத்ததை கண்கூடாக பார்த்தவர்கள் தாம் அவன் பெற்றோர். ஆனாலும் பிள்ளையை யோசிக்கும் பொழுது வேறொன்றும் கண்ணுக்கு தெரியவில்லை. மீண்டும் பெண் பார்க்கும் படலம். முதல் திருமண தோல்விக்கு காரணம் முழுவதும் அதிதி மீது சுமத்தி, தன் பிள்ளையை தூய்மையின் பிரதிநிதியாக சித்தரித்து, அவன் மேன்மைகளை விரித்து சொல்லி, அதிதியின் மீது அவள் ஏற்கனவே காதல் மயக்கத்தில் இருந்தவள், தன் மகனுடன் குடும்பம் செய்ய பிடிக்காமல், குழந்தை பெறவும் உடன்படாமல், ஓயாது தங்கள் மகனிடம் சச்சரவு செய்து, விவாகரத்து பெற்றதாக, இந்த கதை எழுதும் ஆசிரியரை விட பெரிய கதை எழுத, மணமகன் க்ரீன் கார்டு வைத்திருக்கும் மாமனிதன் என்று, ம்ம்ம்... இந்த காலத்துல பொண்ணுகளை ஒண்ணுமே சொல்ல முடியல என்று அங்கலாய்த்தவாறே தங்கள் மகளின் ப்ரொபைல் மேட்ச் பார்க்கவும் ஒரு கூட்டம். சியாடெல்லில் கிட்டத்தட்ட ஆராயிரம் ஸ்கோயர் பீட்ல அந்த பையனுக்கு சொந்த வீடாம். வெல் செட்டில்ட். பாக்கவும் எப்படி இருக்கான்! அங்க போனா நம்ம பொண்ணும் கொஞ்ச நாள்ல வேலைக்கு போகலாமாம்.. ஒருவேளை நம்ம பொண்ணுக்கு அமஞ்சா... என்று அவனது குணாதிசயம் தெரியாமல் பெண்ணின் அதிர்ஷ்டத்தை சோதிக்க துணியும் பெற்றோரை என்ன சொல்வது?


காதல் கொண்டு புருஷனோடு சண்டை போடும் பெண் மூன்று வருஷங்களுக்கும் மேல் அவனுடன் எப்படி இருந்திருக்க முடியும் என்று யோசிக்கும் அடிப்படை அறிவு கூடவா வேலை செய்யாது? அமெரிக்க மோகம் அவ்வளவு முற்றிவிட்டதா?


விநயனோ தனக்கு வரும் பெண்ணின் புகைப்படங்களை கற்பனை துகிலுரிப்பு செய்து கொண்டிருக்கிறான். அவனுக்கு இது புதுமையான அனுபவம். அவனுக்கு அந்த பெண்கள் படுக்கையில் எப்படி இருப்பார்கள் என்பதில் தான் ஆர்வம் அதிகம். தனிமை தாங்காமல் விபச்சார விடுதிகளை நாடவாரம்பித்தும் விட்டான்.


பயிற்சி முடித்து வந்து ஒரு மாதம் ஆகிறது. ஏனோ அலுவலகத்தில் அவனது முக்கியத்துவம் குறைகிறது. இவனது மானேஜர் ராகுல் இவனை கூப்பிட்டு நடாலியை பயிற்சி சமயம் சந்திக்க போனியா என்று மட்டும் கேட்டான். அதற்கு விடை சொன்னவனுக்கு ஒன்றும் ஒன்றும் இரண்டு என்று யோசிக்க தோன்றவில்லை.சீக்கிரம் திருமணம் செய்துகொள்ள வேண்டும் என்று ஒருபுறம் தோன்றுகிறது. அதே சமயம் அதியுடன் மீண்டும் என்றும் தோன்றுகிறது. நடாலியின் கண்களில் அவள் முதல் கணவனுக்கான காதலை பார்த்ததிலிருந்து அதியிடம் பேசிப்பார்த்தால் என்ன தவறு என்று யோசிக்கிறான்.


சனிக்கிழமை மாலை மூன்று மணியளவில் நிரஞ்சனுக்கு அழைத்தாள் அதிதி. அவள் அழைப்பை ஏற்றவனிடம் தான் பெங்களூரு வந்திருப்பதை சொன்னவள் இன்று சந்திக்கலாமா என்றதற்கு அவனிடம் சட்டென்று பதில் இல்லை. ம்ம்ம்... இன்னிக்கு மீட்டிங் இருக்கு அதி... நாளைக்கு நானே காலைல உன்ன வந்து கூப்பிட்டுக்கறேன். அட்ரஸ் அனுப்பு என்று விட்டு வைத்து விட்டான். அவன் நிலை புரிந்ததால் அவனிடம் வேறு எதுவும் சொல்லவில்லை அதி. அவன் மீது அவளுக்கு வருத்தம் நிறைய உண்டு. கோபம் கூட பட்டிருக்கிறாள். அதை எல்லாம் மீறி அவளுடனான அவனது நட்பு இன்று வரை அவளை உயிர்ப்புடன் நடமாட வைத்துக் கொண்டிருக்கிறது. விஷயத்தை தன் அப்பாவிடம் சொல்லிவிட்டு, தன் இருக்கும் இருப்பிடம் குறித்த தகவல்களையும் அவனுக்கு அனுப்பி வைத்துவிட்டாள். மறுநாள் காலையில் கிளம்புவதாக முடிவு எடுத்து இருந்த விஸ்வம், இப்போது 'மறுநாள் மாலை கிளம்பலாம்' என்று முடிவெடுத்துவிட்டார். அவருக்கு வேறு வழியும் இருக்கவில்லை. மகளை தடுக்கும் தைரியமும் இல்லை.


ஞாயிறு அன்று காலையிலேயே, அவளைப் பார்க்க வந்து விட்டான் நிரஞ்சன். முதல் நாள் அவன் வீடு வந்து சேருவதற்கு இரவாகிவிட்டது. அதற்குமேல் சுத்தமாக அவனால் தூங்க முடியவில்லை. அவன் மனம் முழுவதும் அதியை பார்க்க வேண்டும் என்ற துடிப்பு. இத்தனை மாதங்களாக அவளைப் பார்க்காமல் இருந்தது வேறு குற்ற உணர்ச்சியாய் இருக்க இப்போதோ அவளை நேரில் வந்து விட்டாள் என்பதற்காக அவளை தூக்கி கொண்டாட காத்திருக்கிறது அவன் காதல் மனம். அவள் ஏற்றுக்கொள்வாளேயா னால், தனது காதலை அவள் காலடியில் சமர்ப்பிக்க அவன் எப்போதுமே தயார் தான்!


அவ்வளவு சீக்கிரம் அவனை எதிர்பார்த்திருக்க்காத அதி அப்பொழுது தான் பல் துலக்கிவிட்டு வந்து அன்றைய நாளிதழில் மூடியிருந்தாள். விஸ்வம் பெங்களூரு குளிருக்கு இழுத்து போத்தி கொண்டு தூங்கி கொண்டு இருந்தார். வெளியில் லேசாக தூறல் வேறு. அழைப்பு மணி அடித்ததும் வாசல் கதவைத் திறந்தவளுக்கு அவனை உள்ளே வா என்று அழைக்க கூட முடியாத அளவுக்கு அதிர்ச்சி. அவனைக் கண்ட நொடி அவள் முகம் பூவை மலர்ந்தது பார்த்தவுடன், தான் எதிர்பார்க்கும் நாட்களை சீக்கிரமாவே பிடித்து விடலாம் என்ற தைரியம் அவனுக்குள்.


'சீக்கிரம் கிளம்பு அதி, வெளியே சாப்பிடலாம், ரொம்பபசிக்குது ' என்றவனிடம்,' இங்கேயே சாப்பிடலாம் நிரஞ்சன்... என்று அவளிடம் தீர்மானமாக மறுத்து விட்டான் அவன்.


நீ என்னை உங்க பிளாட்டுக்கு கூட்டிட்டு போயி காமிப்ப... அப்படியே உன்னுடைய சமையலில் சாப்பிடலாம்னு நினைச்சேன் நீரு.. நீ என்னை வெளியில் சாப்பிட வைக்குற... என்று சிரித்துக்கொண்டே கேட்டவளை மதியம் லஞ்ச் செஞ்சு தரேன்... இப்போ பேசாம கிளம்பு என்று துரித படுத்தினான். அவள் கிளம்பும் முன் அவள் அப்பா எழுந்து விடுவே அவரிடம் சொல்லிக் கொண்டு இருவரும் கிளம்பினார்கள். பத்து மணிக்கு நல்ல நேரம் என்று காலண்டரில் பார்த்துக் கொண்டு வந்தவன், வெளியே அவளுடன் சாப்பிட்டுவிட்டு சரியாக பத்தாவது மணிக்கு தன் வீட்டிற்கு கூட்டி சென்று விட்டான்.

ஃபர்ஸ்ட் டைம் நம்ம வீட்டுக்குள்ள வர்ற... சோ, உன்னோட வலது கால் எடுத்து வைச்சு உள்ளே வா... என்று அவன் சொன்னபடிக்கு வலது காலை எடுத்து வைத்து அவனுடைய வீட்டிற்குள் நுழைய அவளும் தனது வலது காலை எடுத்து வைத்து அவளுடனேயே உள்ளே நுழைந்தான். அவனது செய்கைகளை கவனிக்கும் அளவிற்கு அந்தப் பெண்ணிற்கு சூட்சுமம் இல்லை. அவன் சொன்ன நம் வீடு என்பதும் அவள் மனதில் பதியவில்லை.


அதேசமயம், இந்த வீடு புதியது என்ற எண்ணமும் அவளுக்கு இல்லை. வீட்டில் அவனது படுக்கை அறையில் அவனும் அதிகமாக எடுத்துக் கொண்ட சிறுவயது புகைப்படங்கள் நிறைய வைத்து இருந்தான். அதிதி திருமணத்திற்குமுன் இவர்கள் இருவருமாக எடுத்துக்கொண்ட புகைப்படங்களும் அங்கே இருந்தது. சிலவற்றை காணும்பொழுது எப்போது எடுத்தோம் என்று கூட அவளுக்கு ஞாபகம் வரவில்லை. அவள் மனம் முழுவதும் ஆச்சரிய அலை. விழி அகல அவனையே பார்த்துக்கொண்டிருந்தவளுக்கு கண்ணீர் திரையிட்டது. சத்தியமாய் அவன் இவ்வளவு தூரம் இருவரின் புகைப்படங்களை பத்திரமாக வைத்திருப்பான்,அதுவும் தனது படுக்கை அறையில் மாட்டி வைத்து இருப்பான் என்றெல்லாம் அவள் எதிர்பார்த்திருக்கவில்லை.


அவள் உருகிய நிலையை புரிந்து கொண்டவன், வீட்டு எவ்வளவுக்கு சுற்றிக் காட்டினான். இவ்வளவு பெரிய வீட்டில் இவன் தனியாகவா இருக்கிறான் என்ற எண்ணம் அவளுக்கு. அதை வாய்விட்டு கேட்கவும் செய்தாள்,' நீ இன்னும் கல்யாணம் பண்ணிக்கல நிரஞ்சன். இவ்வளவு பெரிய வீட்ல நீ தனியாவா இருக்க... காலாகாலத்துல கல்யாணம் பண்ணி இருந்தா இப்போ அட்லிஸ்ட் ஒரு குழந்தையாவது இருந்திருக்கும். இதுக்கு மேல டிலே பண்ணாத மேன்... என்று ஸ்வரஸி யமாக அவள் சொல்ல 'நான் விரும்புற பொண்ணு என்னை கல்யாணம் செஞ்சுக்க ஒத்துக்கிட்டா இமெடியட்டா கல்யாணம் தான் என்று விளையாட்டாகவே முடித்துவிட்டான். அவன் சொன்ன விதம் விளையாட்டாக இருந்தாலும், அதி மனதில் நெருடல்.கொஞ்சம் வலி. இவன் யாரையும் காதலிக்கிறானா என்று தோன்ற கொஞ்சம் அமைதியாகிவிட்டாள்.


சிறிது நேரம் வெவ்வேறு விஷயங்களைப் பற்றி இருவரும் பேசிக் கொண்டிருந்தார்கள். அவன் ஏன் தன்னை பார்க்க வரவில்லை தன்னுடன் சரியாக பேசுவதில்லை என்ற எண்ணம் அவளுக்கு இருந்தாலும் அதைப்பற்றி ஒன்றும் கேட்கவில்லை. வேலையில் இருப்பவன் எப்போதும் தன்னுடன் இருக்க வேண்டும் தன்னை வந்து பார்க்க வேண்டும் என்றெல்லாம் எதிர்பார்ப்பது பெரிய தப்பு என்று பெண் தன்னைத்தானே சமாதானம் செய்து கொண்டாள். அவள் தன்னை இதுபற்றியெல்லாம் கேட்பாள் என்று எதிர்பார்த்திருந்தான் நிரஞ்சன். ஆனால் எப்பொழுதுமே அவனது எதிர்பார்ப்புகளை பொய்யாக்குவது... அதுதானே அவள் வழக்கம்?


பேச்சினூடே அதிதி தன் அலுவலகத்தில் தன்னைப் பார்க்கும் பார்வைகள் பற்றியும் பின்னால் தன்னை பற்றி பேசுவது பற்றியும் கூட அவனிடம் பகிர்ந்து கொண்டாள். 'சில பேர் பொறாமையா பாக்குறாங்க.சில பேர் பரிதாபமா பாக்குறாங்க.. இன்னும் சில பேர் என்கிட்ட நல்லா சிரிச்சு பேசிட்டு பின்னாடி வேற மாதிரி பேசுறாங்க. எனக்கு இது எப்படி ஹேண்டில் பண்றதுன்னே புரியல நிரஞ்சன். எங்கேயாவது ஓடிப் போயிறலாம் போல இருக்கு' என்று புலம்பிய வளிடம், அப்போ' இங்க பெங்களூர்ல எங்க ஆபீஸ்ல வேணும்னா அப்ளை செய்.. இன்டர்வியூ அரேஞ்ச் பண்ணுகிறேன்' என பேச்சுவாக்கில் சொல்லிவிட்டு அடுத்த பேச்சுக்கு தாவி விட்டான்.


'அவன் சொன்னது போல் செய்யலாமே' என்று தோன்றி விட தன் அப்பாவிடம் இது பற்றி பேச வேண்டும் என்று மனதிற்குள் நினைத்துக் கொண்டாள் அதி.
 
Top