எங்கள் தளத்தில் எழுத விரும்பும் எழுத்தாளர்கள் எங்களை கீழ் உள்ள மின்னஞ்சலில் தொடர்ப்புக்கொள்ளவும் நன்றி Email ID - narumugai.ink@gmail.com

அத்தியாயம் 4

priya pandees

Moderator

அத்தியாயம் 4

வருணி யாஷை அப்போதைக்கு திசை திருப்பி விட்டதாக நினைத்து கொண்டாள். ஆனால் யாஷ் அன்று தான் அவளிடம் இருப்பது உண்மையான பயம் என்பதைக் கண்டு கொண்டான்.

அவளுக்கு தன்னை பிடித்ததால் மட்டுமே இந்த திருமணம் என்று தான் அதுவரை அவன் எண்ணம் எல்லாம். ஆனால் இன்று அவள் எடுத்துக் கொண்டிருந்த மாத்திரைகளும் அவளின் அவசர முத்தமும் அவனுக்கு அவள் உடல்நிலை பற்றி கூறிக்கொண்டிருப்பது நிஜமாக இருக்குமோ என்ற பயத்தை கொடுத்திருந்தது.

அந்நொடி, 'நிஜமாவே நம்மளவிட்டு போயிடுவாளா?' என்ற எண்ணம் அவளை தன்னுள் இன்னும் இறுக்கி பிடிக்க தூண்டியது. அவனையும் மீறி அவளிடம் இறுக்கம் காண்பித்தான். அதில் தன் கண்ணை திறந்து அவனை பார்த்தாள். தீவிரமாக முத்தமிடும் முயற்சியிலும் புருவம் சுருங்கிய குழப்பம் அவன் முகத்தில் பரவி இருப்பதைக் கண்டு, மெல்ல விலக முயன்றாள். இழுத்து பிடித்தான் அவன்.

"மாமா!" முனங்கி, அவன் முகத்தை மெல்ல தள்ளி, "என்னாச்சு? எதுக்கு இவ்வளவு கன்ப்யூஷனா ஃபேஸ் வச்சுருக்க? கிஸ் பண்ணும் போது கூட மூஞ்ச இப்படித்தான் வச்சுப்பியா நீ?"

அதில் நிதானித்தான், அவள் உடம்பில் உள்ள பிரச்சினை, மனதில் உள்ள பயம் இரண்டையும் போக்கியே ஆகவேண்டும். அதுவும் ஒரு மருத்துவ கணவனால் முடியாவிட்டால் பின் யாரால்? முடிவெடுத்துக் கொண்டான்.

"ஏன் என்னோட ரொமான்டிக் ஃபேஸ பார்த்ததே இல்லையா நீ?"

"இப்ப எதுக்கு இப்படி மூஞ்ச வச்சுட்ருக்க?"

"வாமிட் பண்ணிட்டு கிஸ் பண்ணா அப்படிதான் இருக்கும் என் பேஸ்" என்றதும் அவன் கையிலேயே அடித்து தள்ளிவிட்டாள்.

"அசிங்கம் பிடிச்சவன்டா நீ"

"யாரு நானா? உண்மைய சொன்னா ஒத்துக்கணும்டி" வம்பிழுத்தவன் அவளை மீண்டும் அருகில் இழுக்க,

"போடா டேய். அதான் என் கிஸ் நல்லா இல்லன்னுட்டல்ல பின்ன என்ன போ. நா நல்லா ப்ரஷாகிட்டு தான் வந்தேன். உனக்குலாம் போடா போடா" எனத் தள்ளி தள்ளி விட்டாள்.

"அப்ப ஆஸ்பத்திரி போவோம் வா" என்றதும் மீண்டும் அவள் அருகே வர, "கொன்னுருவேன் ராஸ்கல். இந்த சீப் டிரிக்லாம் என்ட்ட வேணாம். காரியமா கிஸ் பண்ணிட்டு ரொமாண்டிக்கா பண்ணாலாம்" என விரல் நீட்டியே மிரட்ட,

"ஹாஸ்பிடல் நாளைக்கு மார்னிங் போலாம். இப்ப வேறெதுவும் பண்ணலாம்"

"அப்ப வாமிட் மறுபடியும் வந்தா?"

"உள்ள இருக்கிறதெல்லாம் தான் வெளில வந்தாச்சே இனி எப்டி வரும்?"

"அப்ப சமைச்சு குடு சாப்பிடலாம் முதல்ல. அப்பறமா ரொமான்டிக் பாடம் படிக்கலாம்" என அவளை இழுத்துக்கொண்டு சமையலறையில் விட்டான்.

"ஏன் நீ செஞ்சா என்ன? எனக்கு தான் உடம்பு சரியில்லல?" என வெளியே வந்தவளை,

"இப்பதானே அந்த உடம்பு சரியா இருந்தது. அதுக்குள்ள மறுபடியும் கோளாறாகிட்டா? அப்போ ஹாஸ்பிடல் போகணுமே?" என அவன் தீவிரமாக சொல்லவும்.

முறைத்து பார்த்தவள், "சரியான சேடிஸ்டா நீ" என கோபமாக சொல்லி குளிர்சாதன பெட்டியில் இருப்பதில் சமைப்பதற்கு ஏதுவானதை தேடத் தொடங்கினாள்.

இரண்டு நிமிடம் அவளையே நின்று பார்த்தவன், ஜர்கினை எடுத்து மாட்டிக் கொண்டு வீட்டை விட்டு வெளியே வந்தான், "கூப்பிடுவோமா வேணாமா?" எனக் கையிலிருந்த ஃபோனை சுழற்றியபடி நடந்தவன், "இந்திய பிரதமர் உண்மைய சொல்லணும் ஜீஸஸ்" என முனங்கியபடி இந்தியாவில் இருக்கும் அவன் மாமனுக்கு அழைப்பை கொடுத்தவாறு மெல்ல நடந்தான்.

சிலபல நொடிகளில் அழைப்பு ஏற்கப்பட்டது, "சொல்லு யாஷ்?" என்ற உறுமல் குரலில்,

"வருணிக்கு என்ன பிரச்சினை மாமா?" என்றான் நேரடியாக.

"ஏன் வருணிக்கு என்ன? அங்க என்ன பிரச்சினை?" என்றார் ஆரோன் சாதாரணமாக.

"மாமா அவ ஹெல்த்துக்கு என்னன்னு கேட்டேன்? சும்மா விளையாட்டுக்கு சாக போறேன்னு சொல்லிட்டு திரியிறான்னு பார்த்தா அப்படி இல்ல மாதிரி தோணுது. நீங்க சொல்லுங்க. இல்லன்னா நான்சி அத்தைட்ட கேட்பேன்"

"உன் கூட ஆறு மாசமா இருக்குறவள பத்தி எங்கிட்ட கேட்கிறதே தப்பு இதுல என் பொண்டாட்டிகிட்ட கேட்டுக்கவான்னு வேற கேட்குற? டாக்டருக்கு தான படிச்ச நீ?" என்றார் காட்டமாக.

"டாக்டர் தானே மாமா? ஜோசியகாரன் இல்லையே? அவளுக்கு என்னன்னு செக் பண்ணாம வெத்தலைல மை தடவி பார்த்து கண்டுபிடிக்கவா நானு?"

"அப்றம் எதுக்கு எனக்கு கால் பண்ண?"

"உங்களுக்கு நிச்சயமா தெரியும்னு எனக்கு தெரியும்"

"எனக்கு தெரிஞ்சா உன்ட்ட ஏன் அனுப்புறேன் நான்?"

"மாமா ப்ளீஸ். என்னன்னு தெரியாம தலையே வலிக்குது எனக்கு"

"யாஷ். என்கிட்டயும் வரு அத மட்டுந்தான் சொன்னா. ஏதோ டிசீஸ் இருக்கு. குணப்படுத்த முடியாது. ஃபாரீன் போறேன் மாமா கூட இருக்கேன். அவருக்கு என்னைய பிடிக்கும், எனக்கும் அவர ரொம்ப பிடிக்கும். நாந்தான் உங்ககிட்ட அவர பேச அனுப்பினேன் ப்ளீஸ் எங்க மேரேஜ்கு ஓகே சொல்லுங்க. ஏஜ்லாம் பெரிய விஷயம் இல்ல. எனக்கு பிடிச்சவரோட கொஞ்ச நாள் வாழ்ந்துட்டு போறேன் ப்பா. ஒருவேளை உங்க மருமகன் நல்ல டாக்டரா இருந்தா என் டிசிஸ சரி பண்ணட்டும்னு சொன்னா" ஆரோன் சொல்லி முடிப்பதற்குள்,

"நீங்க இவ்வளவு ஈசியா சொல்ல மாட்டீங்க. அப்ப அவளுக்கு எதுவுமில்ல தானே?" என்றான் யாஷ் வேகமாக.

"வரு செக்கப்கு கோப்ரேட் பண்ணல யாஷ். எனக்கும் அவளும் நீயும் லவ் பண்றீங்க அதனால ஏதோ ப்ளே பண்றீங்கன்ற எண்ணம் தான். இல்லன்னா இப்ப வர நீ அவள பிடிக்கலன்னு விடுற கதையை நம்பிட்ருப்பேனா? பட் அவ ஹெல்த் பத்தியும் இதுவரை நீயா எதுவும் சொல்லாதனால நா அவளுக்கு எதுவும் இஷ்யூ இருக்காதுன்னு ஹன்ட்ரட் பெர்சென்ட் நம்புனேன், மேபி எப்பவும் போல பொய் சொல்லிருக்கான்னு தான் நினைச்சேன். இப்ப என்னாச்சு? நீ கெஸ் பண்ணி எனக்கு சொல்லுவன்னு வெயிட் பண்ணா நீ என்னைய கேட்கிற?"

"ஆரம்பத்திலேயே நீங்க ஏன் அவள கண்டிச்சு வளர்க்கல? அதான் இப்ப இப்படி விளையாட்டுத்தனம் பண்ணிட்டு நிக்கிறா"

"டேய் ஒத வாங்குவ, இப்ப அவ ஹெல்த்த சரி பண்ணுனா என்ன பேசுற நீ?"

"இங்க வந்து ஒரு நாலஞ்சு தடவ வாமிட் வருதுன்னு வயிறு வலிக்குதுன்னு சொல்லிருக்கா. ஆனா அதுக்கு முந்தின நாள் வெளில ஃபுட் சாப்டிருப்போம் எனக்கு சேரும் அவளுக்கு சேராது. வேறெந்த சிம்டம்ஸும் தெரிஞ்சதில்ல" என்றான் படபடவென்று.

"அப்ப எதுவும் இருக்காது யாஷ்"

"அவகிட்ட உண்மையான பயம் இருக்கு மாமா. மரண பயம் மாமா அது. ஒன்னுமே இல்லாததுக்கு ஒருத்தி இவ்வளவு பயப்படுவாளான்னு தோணுது. அவளே செக் பண்ணிட்டு நம்மகிட்ட மறைக்கிறாளோ?"

"தெரியல. நா கிளம்பி வரேன் அவள ஃபர்ஸ்ட் செக் பண்ணிடலாம்"

"நா கூப்பிட்டு பாத்துட்டேன். எக்ஸ்டீரிமா கெஞ்சுறா. அவ அது என்னன்னு கூட தெரிஞ்சுக்க வேண்டாமாம். என்னன்னு தெரிஞ்சுட்டா வாழ்ற நாள் கவண்ட்டோட தெரிஞ்சுடுமாம். அதுக்கு அது தெரியாம இதோ இப்டியே இருக்கேன்றா. இப்பவும் நிம்மதி இல்லாம தான் இருக்குறா தெரிஞ்சுட்டா சரி பண்ணிட்டு நல்லார்க்கலாம்னு கூட அந்த அரமென்டலுக்கு புரியல. இவளலாம் எதுக்கு டாக்டருக்கு படிக்க வச்சீங்க?"

"உன்ன நம்பி தான்"

"ஆனா என்ன நம்பி நா கல்யாணம் பண்ணிக்க கேட்டா மட்டும் குடுக்க மாட்டீங்க? மத்த எல்லாத்துக்கும் நா வேணும்?"

"டேய் அவளுக்கும் உனக்கும் பத்து வயசு வித்தியாசம். ப்ளஸ் ரெண்டு பேருக்கும் வாய் ஜாஸ்தி. எதுக்கும் விட்டுகுடுக்க மாட்டீங்கன்னு தான் வேணாம்னு சொன்னேன். இப்ப பாரு அவள கன்வின்ஸ் பண்ணி செக்கப் பண்ண கூட்டிட்டு போ கூட முடியலன்னு என்ட்ட வந்து புலம்பிட்டு நிக்குற"

"செக்கப்பே பண்ண வேணாம் இப்டியே நீ செத்து போ. நா வேற கல்யாணம் பண்ணிக்கிறேன்னு சொன்னா உடனே வந்து நிப்பா தெரியுமா உங்க மக?"

"அப்ப அப்டி சொல்லி கூட்டிட்டு போ வேண்டிய தானடா?"

"செய்ய முடியாதே! அவ மைண்ட் ரெடியா இல்ல. இது மத்த விஷயமாதிரி கிடையாது. ஒருவேளை இஷ்யூ இருந்தா அவ ட்ரீட்மெண்ட்டுக்கும் ஒத்துக்கணும். அவ ஃபுல் மைண்டா ப்ரீபேரா இல்லனா மெடிக்கல் ரீதியா ஈசியா க்யூர் பண்றதையும் ட்ரபுள் பண்ணிடுவா"

"சரி அப்ப என்ன பண்ணலாம்? நான்சிய பேச சொல்லவா? நாங்க எல்லாரும் கிளம்பி வரவா?"

"நீங்க வர்றது அவ்வளவு ஈசியான விஷயமா? பிரதமர் மகளுக்கு உடலில் ஏதோ பிரச்சினையாம் குடும்பத்துடன் அமெரிக்கா பயணம். அடுத்த ஒரு மாசத்துக்கு இதே பேசி பேசி ட்ரெண்ட்டாக்கிடுவாங்க. தேவையா இது நமக்கு?"

"நீயும் பண்ண மாட்ட நாங்களும் வர கூடாது? அப்ப அவ அப்படியே இருக்கட்டுமா?"

"இந்த மன்த் கேம்ப் மன்த்"

"அப்போ அதுக்குள்ள செக் பண்ணிடு. நா, நான்சி இல்லனா ப்யூலா அனுப்பி வைக்றேன் வருக்கு ஹெல்ப்புக்கு"

"நா அவள எப்டி விட்டுட்டு போவேன்?"

"பின்ன காட்டுக்குள்ள அவள கூட்டிட்டு போய் ட்ரீட்மெண்ட் பண்ண போறியா?"

"அவள செக்கப்புக்கு ரெடி பண்ண போறேன்"

"காட்டுல வச்சு?"

"எஸ் எஸ்"

"எத்தன நாள் கேம்ப்?"

"ட்வன்டி டேய்ஸ்"

"அதுக்குள்ள எதுவும் இஷ்யூ ஆகாதா?"

"ஆறு மாசமா ஆகல தானே? சடர்னாலாம் ஆகாது. எதுவா இருந்தாலும் சிம்டம்ஸ் கொஞ்சம் கொஞ்சமா ரைஸ் ஆகும். சோ நா அதுக்குள்ள அவள அவ வாயாலேயே, எனக்கு ஹெல்த்த சரி பண்ணிடுங்க மாமான்னு அவள சொல்ல வச்சுடுறேன்"

அவன் சொல்லியதில் சிரிப்பு வந்தாலும், "ஓகே யாஷ். ஒரு பிரச்சினையும் இல்லன்ற உன் வேர்ட்ஸ்காக நா வெயிட் பண்ணுவேன்" என முடித்து கொண்டான்.

"ஓகே மாமா. எனக்கும் என் பொண்டாட்டி வேணும். அதுக்காகவே சரி பண்ணுவேன்" என வைத்தான் யாஷ்.

ஒரு விஷயம் இருக்கிறதா இல்லையா என்ற குழப்பத்தில் இருப்பதால் அதற்கு வருத்தபடவும் முடியவில்லை சந்தோஷமாக அடுத்த வேலையையும் பார்க்க முடியவில்லை என்ற நிலைமைக்கு வந்திருந்தனர் இருவரும்.

மீண்டும் அவன் வீடு வந்தபோது சாப்பாடை செய்து வைத்து விட்டு முகத்தையும் தூக்கி வைத்து அமர்ந்திருந்தாள் வருணி.

பாய்ந்து கொண்டு வந்தாள், "எங்க போன நீ?" என அவன் நுழைந்ததுமே.

"வாக்கிங்டி. நீ என்னன்னு சொல்ல மாட்டேங்குற. அந்த டென்ஷன குறைக்க வேணாம் அதான் அப்படியே வாக்கிங் போய்ட்டு ஸ்ட்ரஸ குறைச்சுட்டு வந்தேன்"

"என்னையும் கூட்டிட்டு போயிருக்கலாம்ல அப்படியே வெளில சாப்ட்டு வந்துருக்கலாம்"

"எதுக்கு நாளைக்கும் நாளு தடவ வாமிட் எடுக்குறதுக்கா?"

"அதுக்கு அது காரணம் இல்ல"

"சாப்பாட எடுத்து வை" என்றவன் உடை மாற்றிவர உள்ளே சென்று விட்டான்.

"கொழுப்பெடுத்த சிம்பான்சி" என்றவளும் இருவருக்கும் உணவை எடுத்து வைத்தாள். 'தாலி, சிக்கன் டிக்கா மசாலா' தயாராக இருந்தது.

"வாமிட் பண்ண தான? லைட் ஃபுட் எடுக்கலாம்ல?" என்றான் அதை தட்டில் பார்த்ததும்.

"அதுக்கு நீ செஞ்சு குடுத்துருக்கணும். நானே செஞ்சதுல டயட் கரெக்ஷன் சொல்ல கூடாது"

முறைத்து பார்த்தானே அன்றி அதற்கு மேல் பேச்சை வளர்க்கவில்லை. சாப்பாட்டை முடித்து கொண்டு உறங்கச் சென்று விட்டனர். படுக்கும் போது தனித்தனியாக முகத்தை திருப்பி கொண்டு படுத்தாலும், எழும்பும் போது ஒருவர் மேல் ஒருவர் இருப்பது தான் அவர்கள் அன்றாடம்.

மறுவாரத்தில் 'கேம்ப்' செல்வதற்கான உத்தரவு வரவும். அவன் மாணவர்கள் அனைவரையும் அதில் சேர்த்துக் கொண்டான் யாஷ். எப்போதும் பதினைந்து மருத்துவர்கள் மட்டுமே செல்வது வழக்கம். மூன்று மாதத்திற்கு ஒருமுறை எதாவது ஒரு மலைவாழ் மக்கள் வசிக்கும் பகுதியை குறிப்பிட்டே அரசாங்கத்திலிருந்து உத்தரவு வரும். இந்த முறை அமேசான் காட்டில் வாழும் பழங்குடியினருக்கு தான் என முன்பே தகவல் வந்திருந்தது, உத்தரவிற்கே காத்திருந்தனர், அதும் இதோ வந்துவிட்டது. அதனால் அதற்கு ஆயத்தமும் முன்பே செய்திருந்தனர்‌.

எப்போதும் மாணவர்களை அழைத்து செல்வதில்லை. இந்த முறை யாஷ் அவனது சொந்த முயற்சியில் மருத்துவமனை அனுமதி மட்டுமே பெற்றுக் கொண்டு அழைத்துச் செல்கிறான்.

"பதினெட்டு பேரும் உங்க ரெஸ்பான்ஸிபிலிட்டி தான் யாஷ்" என்றுவிட்டார் டீன்.

இதோ பெட்டியை கட்டிக்கொண்டிருந்தனர் யாஷ் வருணி இருவரும். புதிதான அனுபவத்திற்கு படு குஷியாக தான் கிளம்பிக் கொண்டிருந்தாள் வருணி. இந்தியாவில் அவள் படித்த பொழுது கிராமங்களில் கேம்ப் என்று சென்றிருக்கிறாள் தான். ஆனால் மலைவாழ் மக்கள், பழங்குடியினர் என்பவர்களை எல்லாம் பார்க்க போவது இதுவே முதல் முறை. அந்த உற்சாகம் வெளிப்படையாக தெரிந்தது அவளிடம்.

"ஆலோலம் ஆழும், தூவானம் தூவும்
கேளாமல் கேட்டாலும், மின்னும் விண்ணாகும்" என பாடி அவனை சுற்றியே ஆடிக்கொண்டு கிளம்பியும் கொண்டிருந்தவளை, பார்த்தாலும் ஒன்றும் சொல்லவில்லை அவன்.

அவனுக்கானதை எல்லாம் எடுத்து வைத்துவிட்டு பெட்டியை வரவேற்பரையில் கொண்டும் வைத்து விட்டு வந்தும் அமைதியாக அமர்ந்து பார்த்திருந்தான். வார்ட்ரோபையே காலி செய்யும் முயற்சியில் இருந்தவளுக்கு ஆட்டமும் குறையவில்லை.

"கொஞ்சம் சிரி மாமா ஹெல்த்துக்கு நல்லது. எதுக்கு ஸ்டிரிக்ட் ஆபிசர் மாதிரி நடிக்குற?"

"உங்க ஹெல்த்த நீங்க பாருங்க எங்க ஹெல்த்த நாங்க பாத்துக்குவோம்" என்றான் அவன்‌.

"மாமா! இருக்குற வர" என பேச ஆரம்பித்தவளை, கையால் வாயை மூடு என செய்கை காண்பித்து நிறுத்தியவன்,

"போய் கிளம்புடி. எல்லாரும் அங்க கிளம்பி ஹாஸ்பிடல் வந்தாச்சு. ட்ரீட்மெண்ட் குடுக்க தான போற? டூர் கிளம்புறவளாட்டம் எதுக்கு அவ்வளவையும் பேக் பண்ணிட்ருக்க?" என விரட்டினான்.

"காடு மாமா அது. நம்ம மொபைல்ல இருக்க அமேசான்னு நினைச்சியா? எது கிடைக்கும் எது கிடைக்காதுன்னு தெரியாத அமேசான் காடு. நாம எல்லாம் ரெடியா கொண்டு போனா அங்க மத்தவங்களுக்கும் யூஸ் ஆகும்ல?"

"எது இந்த ரெண்டு பெட்டி ட்ரெஸ்ஸூம் ஒரு பெட்டி மேக்கப் கிட்டுமா?"

"இதெல்லாம் எப்டி யூஸ் ஆகுதுன்னு மட்டும் பாரு. அப்றம் என்ன நீயே பாராட்டுவ. உன் முன்னாடி அந்த இயற்கை பேக் க்ரௌண்ட்ல சும்மா ஜம்முனு வந்து நிக்கும் போது தெரிஞ்சுப்ப"

"நாம கேம்ப் போறோம் ஹனிமூன் இல்ல"

"வேலை நேரத்தில வேலை மத்த நேரத்துல ஹனிமூன்"

"நோ!"

"எஸ்! எஸ்! எஸ்!"

"ஹாஸ்பிடல்ல எப்டி இருப்பியோ அப்படி தான் அங்க இருக்கணும் ட்வன்டி டேய்ஸும். நா டுயட்டர் நீ ஸ்டூடண்ட்"

"போடா மாமா. நா தனியா கொண்டாடிக்கிறேன் ரொம்ப தான் பண்றான்" என்றுவிட்டு திரும்பி கொண்டாள். இவன் ரகசியமாக சிரித்துக் கொண்டான்.

"நா ரெடி" என பெட்டியை இழுத்து கொண்டு வெளியேற போக,

"உன் சுருட்ட முடிய இழுத்து கட்டிட்டு ரெண்டு பேருக்கும் பாஸ்தா கிண்டி எடுத்துட்டு வா. நா கார்ல எல்லாம் எடுத்து வச்சுக்குறேன்" என அவள் கையிலிருந்த பெட்டியின் கைப்பிடியை தான் வாங்கி கொண்டான்.

"இப்போ மட்டும் லேட்டாகலையா உனக்கு?"

"நீ சீக்கிரம் கிளம்பி இருந்தா லன்ச்சும் எடுத்துட்டு போயிருக்கலாம். ஆக்சுவலி உன்னால தான் டிலே"

"சும்மா தான உட்கார்ந்திருந்த நீ செஞ்சுருக்கலாம்ல?"

"அப்ப எனக்கு பசிக்கல இப்ப தான் பசிக்குதுடி" என அவள் முதுகில் கை வைத்து தள்ளிவிடவும், வாய்க்குள் அவனை திட்டிக்கொண்டே தான் சமைக்க சென்றாள்.

அவள் அந்தபக்கம் சென்றதும் அதுவரை அவள் அடுக்குவதை கவனித்திருந்ததால். கருத்தடை மாத்திரைகள் இருந்த பெட்டியை முதலில் அப்படியே தூக்கி குப்பை தொட்டியில் போட்டுவிட்டு, மூன்று பெட்டிகளாக இருந்தவற்றையும் ஒரே பெட்டியாக மாற்றி அடுக்கிவிட்டு எடுத்துச் சென்று காரிலும் ஏற்றி வைத்து விட்டு வந்தான்.

எல்லாம் செய்து விட்டு, "இன்னும் என்ன பண்ற நீ?" என சமையலறை வாசல் வந்து நின்றவனிடம், "வந்து நீயே செய் வா" என அவன் கையை இழுத்து பிடித்து கரண்டியை குடுத்து விட்டாள்.

"வா சேர்ந்து கிண்டுவோம்" என அவளையும் இழுத்து கைக்குள் பிடித்துக்கொண்டு கிண்டினான்.

அப்படியே நின்றவாறு திரும்பி அவன் முகத்தை பார்த்தாள், பார்த்தவள் முகத்தில் குனிந்து முத்தினான் அவன்.

"என்னவோ செஞ்சுருக்க. அதான் திடீர்னு முகம் பிரகாசமாகிடுச்சு. என்ன மாமா செஞ்ச?" என்றாள் மனைவியாக அவனை சரியாக கணித்து.

"ஏன் எதாவது பண்ணணுமா?" என்றவன் இடது கை அவள் இடுப்பில் விளையாட,

"சுட்டு விட்ரும் சும்மா இரு மாமா" என சிரித்தவளை, அதன்பின் வேறு யோசிக்க விடாமல், சாப்பிட வைத்து கிளப்பி கொண்டு கிளம்பி விட்டான்.

மருத்துவமனை வந்து அங்கிருந்து கிளம்புவதற்காக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த வண்டியில் ஏறி விமானநிலையம் வந்து பிரேசில் செல்லும் விமானம் ஏறி அங்கு வந்திறங்கினர். அங்கிருந்து அமேசான் காட்டிற்கு செல்ல சொகுசு பேருந்து ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

"மாமா இங்க இருந்து எவ்வளவு நேரமாகும்?" என கேட்டவாறே விமான நிலையம் வெளியே நிற்கும் பேருந்தில் ஏற நடந்து வருகையில் தான் அவன் இரண்டே பெட்டிகளை மட்டும் உருட்டி வருவதைக் கண்டாள்.

"சிக்ஸ்டீன் அவர்ஸ் ஆகும்" என்றவன், மற்றவர்களையும் கவனமாக வெளியேற சொல்லி சொல்லிவிட்டு திரும்ப அவன் மனைவி அவனோடு நடக்கவில்லை என புரிந்து திரும்பி பார்க்க, அவள் மற்றவர்கள் கையிலிருந்த பெட்டிகளில் அவள் பெட்டியை தீவிரமாக தேடிக்கொண்டிருந்தாள்.

"வருணி!" என இவன் கத்தவும்.

"மாமா லக்கேஜ விட்டுட்டோம்னு நினைக்கிறேன். ரெண்டு சூட்கேஸ காணும்" என்க,

"நம்மளோடது மொத்தமே ரெண்டு தான்" என்றான் இவன்.

"லூசு மாமா. நா எடுத்து வச்சேன்னு நீ கூட திட்னியே?" என ஆரம்பித்தவள், "ஓமைகாட் வேணும்னே ரெண்ட அங்க விட்டுட்டு வந்துட்டியா நீ?" என முறைத்தாள்.

"ஆமா பின்ன. நீயே நாலு ஆளு சூட்கேஸ் வச்சுகிட்டா வர்றதுல ரெண்டு பேர வெறுங்கைய வீசிட்டு வாங்கன்னா சொல்ல முடியும்? நடடி" என்றதும்,

"எங்கப்பாட்ட சொல்லிருந்தா என்னைய ஹெலிகாப்டர்ல கொண்டு இறக்கிருப்பாரு தெரியுமா?"

"உன்ன கூட்டிட்டு போறதே அஃபன்ஸ் தான். ஸ்டூடண்ட்ஸ் நாட் அலௌவ்டுன்னு தெரிஞ்சா இப்படியே ஃப்ளைட்டும் ஏத்திடுவாரு உன் அப்பா. பரவால்லையா?" அதில் முறைத்து இருநொடி அமைதியாக நடந்தவள், பின் தலையில் அடித்து கொண்டு அவனை நெருங்கி வந்து,

"லூசு மாமா. எதுன்னு பாத்தாவது எடுத்து வச்சியா? சும்மா ரெண்டு பெட்டிய கடாசிட்டு வந்துருக்க. அங்க போய் தேடி எதுவும் கிடைக்கலனா உள்ள போடுறதுக்கு உன் பனியன தான் எடுத்து போடுவேன் சொல்லிட்டேன்"

"போட்டுக்கோ அதுக்குலாம் நா மேனர்ஸ் பாக்றதில்ல. எல்லாமே உனக்குத் தான்"

"மாமா!" என பல்லை கடிக்க,

"அதெல்லாம் கரெக்ட்டா இருக்குடி பாத்து தான் எடுத்து வச்சேன். கத்தாம வா" என்கவும் பேருந்தின் அருகில் வந்திருந்தனர்.

மாணவர்கள் பின் இருக்கைகளை ஆக்ரமித்துக் கொள்ள, மருத்துவர்கள் இடையிலும் முன்னாலும் எடுத்துக் கொண்டனர். ஒரு பக்கம் முழுவதும் உட்காருவதற்கும். மறுபக்கமும் மேலேயும் இரண்டு இரண்டு இருக்கைகளாக படுப்பதற்கும் இருந்தன. அதற்கு மேல் படிக்கட்டுடன் கூடிய வெட்டவெளி இருக்கைகளும் இருந்தது. மாணவர்களான மருத்துவர்கள் அதை சுற்றிவர துவங்கிவிட, எல்லாவற்றையும் சரிபார்த்தவாறு அவன் இருக்கையில் அமர்ந்து கொண்டான் யாஷ்.
 

priya pandees

Moderator
அந்த பதினைந்து மருத்துவர்களில், குழந்தைகளுக்கு பார்ப்பவர், பெண்களுக்கான மருத்துவர், எலும்பு சம்பந்தப்பட்ட மருத்துவர், நரம்பு நோய் சம்பந்தப்பட்ட மருத்துவர், என ஒவ்வொரு பிரிவை சார்ந்தவர்களும் இருவர் இருவர் இருந்தனர். அறுவை சிகிச்சை பிரிவில் யாஷும், அவனை போலவே அதே பிரிவைச் சேர்ந்த ஜெனிலியாவும் வந்திருந்தனர். பெரிய அளவிலான அறுவை சிகிச்சையை அங்கு வைத்து செய்ய முடியாது, அவர்கள் நிச்சயமாக ஏதாவது ஒரு மருத்துவமனையில் தங்கி தான் சிகிச்சை பெற்றுக் கொள்ள முடியும். இவ்வாறு வரும் மருத்துவர்கள் சார்ந்த மருத்துவமனையில் சென்று சிகிச்சை பெற்றால் இலவசமாக பெற்றுக் கொள்ளலாம். ஆனால் அவ்வளவு தொலைவு அவர்கள் வர பயப்படலாம், தயங்கலாம். அவர்களை பேசி சரி செய்து, சிகிச்சை அளிக்க போவதே நாங்கள் தான் என ஆரம்பகால சிகிச்சையிலிருந்து இவர்கள் நேரில் அருகில் சென்று இருந்து வழங்குவதன் மூலம் அவர்களுக்கு நம்பிக்கை கிடைக்கும். நம்பி வந்து சிகிச்சையும் பெறுவர். அதற்கே இந்த கேம்ப் முயற்சி.

அமேசான் காட்டில் ஐந்நூறு கிராமங்கள் இருந்த இடத்தில் இப்போது இருநூற்றி ஐம்பது கிராமங்கள் மட்டுமே இருக்கிறது. மலைவாழ் மக்கள் இனம் அழிந்து கொண்டு வருவதாக பலநூறு புகார்கள் வந்த வண்ணம் தான் இருக்கின்றது. அதை சரி செய்யவே இது போன்ற முயற்சிகளில் அரசாங்கம் ஈடுபடுகிறது.

அவர்களோ இருந்த இடத்தில் இருந்து அழிந்தாலும் பரவாயில்லை என்று காட்டை தாண்டி வெளியேறி வருவதில்லை. அவர்கள் அங்கிருந்து வந்து சிகிச்சை பெற்று திரும்ப அவர்கள் இடத்திற்கே கொண்டு விடுவது வரை அரசாங்கம் பொறுப்பேற்று கொள்ளும் என்று எவ்வளவு கூறினாலும் நம்ப மறுத்துவிடுகின்றனர். அதனாலேயே அனைத்து துறையை சார்ந்தவர்களும் நேரில் சென்று மருத்துவமும் கொடுத்து நம்பிக்கையும் கொடுத்து வர செல்கின்றனர்.

இதில் அரசாங்கத்திற்கும் லாபம் உண்டு. குறிப்பிட்ட மருத்துவமனைக்கும் நிறைய லாபம் உண்டு. சேவையும் லாபமும் சேர்ந்தே இங்கு செயல்படுகிறது.

இரவு விருந்து அந்த பேருந்தின் மாடியில் தான் நடைபெற்றது. யார் என்ன செய்தாலும், எங்கிருந்தாலும் தன் பார்வையில் தான் தன் மனைவி என்று இருந்தான் யாஷ்.

அவளின் பதினாறு வயதிலேயே உரிமை பார்வை பார்த்தவன் அவன். இப்போது உரிமை இருக்க யாருக்காக யோசிக்க போகிறான். அந்த சுருட்டை முடி துள்ளி குதிக்க குதிங்கால் தரையில் படாமல் குதித்து கொண்டிருந்தவளிடம் தான் அவனது முழு கவனமும், கால்மேல் காலிட்டு கையில் குளிர்பானத்துடன் மொய்க்கும் பார்வை தான் பார்த்திருந்தான்.

ஆங்கில பாடல்களும் அரட்டையும் கொண்டாட்டமுமாக அமேசான் காடு சென்றிரங்கினர் அந்த மருத்துவ குழு.

'அமேசான் காடு உங்களை அன்புடன் வரவேற்கிறது.'

 
Top