priya pandees
Moderator
அத்தியாயம் 14
தன்மேல் சாய்ந்திருந்த வருணி, தொய்ந்து கீழே சரியவும் தான் சுதாரித்துத் தாங்கிப் பிடித்தான் யாஷ். அவ்வாறு அவள் சரிந்து விழுகையில் அவளின் இடது கை சென்று கிழத்தினான் வைத்திருந்த கைத்தடியின் மேல் விழுந்தது.
அருகில் நின்ற கிழத்தினானும், வருணி கைப்பிடித்து உதவ முன்வர, அவள் இடது மணிக்கட்டை பிடித்ததுமே அவருக்கு புரிந்தது அங்கு துடித்துக் கொண்டிருந்த கூடுதலான கர்ப்பத்தின் நாடித்துடிப்பு. சுட்டு விரலையும் நடு விரலையும் மட்டும் வைத்து மறுபடியும் உறுதி செய்ய முயன்றார் கிழத்தினான்.
"வருணி! வரு!" என அவள் கன்னம் தட்டி எழுப்பிக் கொண்டிருந்த யாஷ் அவரின் செயலை முதலில் கவனிக்கவில்லை, அவள் அவன் தட்டியும் எழும்பவில்லை என்றதும் கையில் தூக்கிக் கொள்ள முயன்றபோது தான் அவள் கையின் பிடி அவரிடம் இருப்பது தெரிந்தது.
"உங்கள் பெண் கரு தாங்கி இருக்கிறார்" என அவர் சொல்லவும், சுருங்கிய புருவத்துடன் நாள் கணக்கை மனதினுள் கணக்கிட்டான் அந்த வைத்தியன். அவர்கள் காட்டிற்குள் வந்தே இதோ இப்போது வரை இரு மாதங்கள் கடந்திருக்கும், இங்கு வருமுன் வந்த மாதவிடாய் தேதி தான் இறுதி என்கையில் இரு மாதங்களைத் தாண்டிய எண்ணிக்கை தான் வந்து நின்றது.
"எஸ் நியர்லி டூ மந்த்ஸ் க்ராஸ்ட்!" என ஆச்சரியப்பட்டவன், கையில் கிடந்தவளின் சுருட்டை முடியை ஒதுக்கி அழுத்தமாக நெற்றியில் முத்தமிட, கிழத்தினான் அதை தான் அதிசயமாகப் பார்த்தார்.
அங்கு க்ளாடியனும் ஜனோமியும் இன்னும் குரங்கு மனிதர்கள் மற்ற மூவரையும் தூக்கிச் சென்ற திசையைத் தான் பார்த்திருந்தனர். அந்த சிறு பெண்கள் இருவரும் மரத்தோடு ஒதுங்கி நின்று விட்டனர். அவர்களுக்கு மிருக வேட்டை பழக்கம் தான் என்றாலும் திடீரென கண் முன் பேசிக் கொண்டிருந்த மூவர் தாக்கப்பட்டு இறந்தது ஒருவித பயத்தைக் கொடுத்திருக்க தள்ளி நின்று கொண்டனர்.
இங்கு யாஷ், "வரு குட்டி முழிச்சு பாருடி!" என சற்று முன்னிருந்த மனநிலை சட்டென்று மாறிவிட்ட சந்தோஷத்தில் அவளை இப்போது வலி கொடுக்காதவாறு தட்டி எழுப்பினான்.
அவள் எழவில்லை என்றதும் திரும்பி, "க்ளாடியன் தண்ணி எடுத்துட்டு வாங்க" என யாஷ் அவர்களுக்கு சத்தம் கொடுக்க, அவர்களும் அப்போது தான் இவனைத் திரும்பிப் பார்த்தனர். ஜனோமி அந்த பெண்களிடம் செல்ல, க்ளாடியன் தண்ணீர் எடுத்துக் கொண்டு வந்து யாஷிடம் கொடுத்தான்.
யாஷ் தண்ணீர் கொண்டு வருணி முகத்தை அழுத்தி துடைத்தெடுக்கவும், விழித்தவளுக்கு கண் நேராக, ஜோஷ், வில்லியம், எட்வர்ட் இருந்த இடத்திற்கு தான் சென்றது.
"மாமா!" என அவள் யாஷை ஒண்டிக்கொண்டு வர,
"ரிலாக்ஸ்டி!" என தட்டி அணைத்துப் பிடித்தான்.
"வீட்டுக்கு போவோம்டா" என்றாள் அவன் முகத்தை அண்ணார்ந்து பார்த்து.
"கண்டிப்பா போலாம்"
"இங்க கொன்னு கொன்னு விளையாடுறாங்கடா. அவங்க இவங்கள கொல்ல வர்றாங்க இவங்க அவங்கள கொன்னுட்டாங்க பாரு. அப்பாட்ட போணும்" என்றாள் பாவமாக.
"ஷ் ஷ்! வரு! வருணி. அதவிடு. நா உனக்கு குட் ந்யூஸ் சொல்லவா? வீ ஆர் ப்ரெக்னன்ட்!" என அவள் காதில் மெதுவாக கூறினான்.
திடுக்கிட்டு திருதிருவென விழித்தவள் திரும்பி அவனையும் புரியாமல் பார்க்க, புருவம் உயர்த்தி சிரித்தவன், "ஜலக்ரீடையும் வேலை செஞ்சட்டுடி" என அவளை இன்னும் இறுக்கிக் கட்டிக்கொண்டான்.
"டேய் மாமா! என்ன சொல்ற நீ?" என அவன் முதுகில் இரண்டு அடி அடித்தாள். அவன் மெல்ல கையை கீழிறக்கி அவள் வயிற்றில் வைத்து அழுத்தி, "ஆரோன், தாத்தா ஆக போறாருடி" என சொல்ல, கண்ணை அகல விரித்து, "அதான் தலை சுத்திடுச்சா எனக்கு? நிஜமாவாடா?" என்றவள் மறுபடியும் திரும்பி அந்த மூவர் இருந்த திசையைப் பார்த்தாள்.
"அவங்கள தூக்கிட்டு போயிட்டாங்க வரு" என்றான் இவன் ஆறுதலாக.
"ம்ச் ஏன் அவங்கள கொன்னீங்க?" என்றாள் திரும்பி கிழத்தினானிடம்.
"எங்களைக் கொல்ல வந்தவர்கள் என நீங்கள் தானே கூறினீர்கள்? இனி அவர்கள் எங்கள் இரை"
"ம்ச் அவங்க எலிய புடிச்சு ரிசர்ச் பண்ற மாதிரி நினைச்சு உங்கள புடிச்சுட்டுப் போக நினைச்சுருக்காங்க. அடிச்சு கூட விரட்டிருக்கலாம். மனுஷங்கள கொன்னு தின்னக் கூடாது. அவங்க உங்கள கொல்ல வந்தாங்க நீங்க அவங்கள கொன்னு திங்கப் போறீங்க. அப்ப ரெண்டு பேரும் ஒன்னு தானே?"
"நாங்கள் அவர்கள் இடம் தேடிச்சென்று அவர்களை கொன்று புசித்தால் தானே தவறு? இதுவரை எங்களைத் தேடி வந்த நரன்களைத் தாண்டி யாரையும் நாங்கள் புசித்ததில்லை. எங்கள் தலைவர் எங்கள் இன ஜீவன்களையே புசித்தபோது கூட நாங்கள் அதை எடுத்ததில்லை. நாங்கள் எங்களுக்கு நேர்மையாக தான் இருக்கிறோம்" என்றார் அவர்.
"என்னடா இப்படி சொல்றாரு?" என்றாள் யாஷிடம்.
"மிருகங்கள் கூட அத அட்டாக் பண்ணா தான்டி திரும்பத் தாக்கும். ஆனா மனுஷங்க அவங்க வாழணும்னு சுத்தி இருக்கிற அத்தனையையும் அழிக்க கூடியவங்க. அவங்களுக்கு கிடைச்ச தண்டனை என்னை கேட்டா சரிதான்" என்றான் யாஷ்.
"அவங்கள காப்பாத்த தான நீ கிளம்பி வந்த?"
"என் ஸ்டூடண்ட்டுன்னு வந்தேன். அதான் இப்ப இல்லன்னு ஆகிடுச்சே?"
"ம்ச்!" என அவள் சுருண்டு அந்த மலையிலேயே அமரப் போக,
"தண்ணி குடி வருணி" என கொடுத்துக் குடிக்க வைத்தான்.
"ப்ளீஸ் நாங்க இப்பவாது போறோமே?" என்றாள் கிழத்தினானிடம்.
"முடியாதும்மா உங்களை அனுப்புவது என்பது என் குலத்துக்கு நானே செய்யும் மகாபாவம்"
"நீ கிளம்பு வருணி. நா இங்க இருந்துட்டு வர்றேன். க்ளாடியனையும் அந்த பொண்ணுங்களையும் அழைச்சுட்டு போ" என்றான் யாஷ்.
"நீயும் வா" என்றாள் அவள்.
"அவர்கள் இங்கிருந்தால் தானே நீங்கள் அவர்களை காக்க வேண்டியாவது எங்களுக்கு உதவுவீர்கள். அவர்கள் தானே எங்களுக்கான ஆதாரம்? அதனால் அவர்களையும் எங்களால் விட முடியாது" என்றார் கிழத்தினான்.
"உங்கள எப்படி நம்புறது? உங்க தலைவர நான் கொல்லுவேன்றதே உங்க நம்பிக்கை தான். சரி நா அப்படியே செஞ்சாலும் அப்றம் எங்களையும் அதோ அவங்கள மாதிரி கொன்னு தின்ன மாட்டீங்கன்னு எப்படி நம்புறது?" என்றான் யாஷ்.
"எங்களை காக்க வந்த கடவுளய்யா நீங்கள்"
"இதையே தான் சொல்லிட்ருக்கீங்க. என் தொழில் என்ன தெரியுமா எப்பாடுபட்டாவது ஒரு உயிர பொழைக்க வைக்கிறது. டாக்டர் தொழில் பண்றவன் நானு. யாரு எவருன்னே தெரியாத ஒரு ஆள கொல்ல சொல்லி பிடிச்சு வச்சுட்ருக்கீங்க"
"எங்கள் கடவுள் கை காட்டியது உங்களைத்தானே? அவ்வாறெனில் அதை உங்களால் தான் செய்ய முடியும்" என்றார் அவர்.
"அடேய் மாமா நீ எத்தனை தடவ சொன்னாலும் அவர் டிசைன் டிசைனா நம்மள விட மாட்டேன்றத தான் ரிப்பீட்டடா சொல்லிட்ருக்காரு"
"நீ ப்ரெக்னன்ட்னு தெரிஞ்சும் எப்பிடிடி ரிஸ்க் எடுக்க முடியும்?" அவன் தலையைக் கோதிக் கொள்ள,
"அம்மாட்ட போணும்" என்றாள் அவள்.
"அதுக்குத்தானே பேசிட்ருக்கேன். உன் அப்பா அங்க மரம் நட விட்டாருல்ல அதுல எவன் சாபமோ பழிச்சுருக்குடி. அதான் இப்படி நடு காட்ல வந்து மாட்டிட்டு நிக்றோம்" என்றான் கடுப்புடன். அவனுக்கு இப்போது அவர் துணை வேண்டும் எவ்வாறேனும் வேண்டும்.
"அப்பாவ சொல்லாதடா"
"அப்படி தான்டி சொல்லுவேன்"
"அப்பாகிட்ட போகணும்" என்றாள் முகத்தைச் சுருக்கிக் கொண்டு.
"போயிடலாம்டி" என தோளோடு அணைத்துப் பிடித்துக் கொண்டான். இவ்வாறு அவள் ஒவ்வொன்றாக பேச இவனும் பதில் சொல்லிக்கொண்டே இருந்தான்.
காட்டுக்குள் இவர்கள் நிலை இவ்வாறு இருக்க, அங்கு பிஸ்மத்தின் மூலம் முதலில் அவர்களின் மருத்துவமனைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர்கள் மூலம் அரசாங்கத்திற்கு தகவல் செல்ல அது அவர்களின் ஆளுநர் பார்வைக்குச் சென்று தேடுதல் வேட்டைக்கான உத்தரவு வரவே முதல் பத்து நாட்கள் கடந்திருந்தது.
அமெரிக்க அரசாங்கம் அமேசான் காட்டில் தேடுவதற்கு ஆட்களை அனுப்பியிருந்தது. ஆனால் பிஸ்மத் அவர்கள் வர தாமதம் ஆக ஆக பயத்தில் அடுத்தகட்டமாக ஆரோனுக்கு தொடர்பு கொள்ள முடிவெடுத்தார். ஆனால் அமெரிக்க ஆர்மியிலிருந்து ஆட்கள் வந்தும் கண்டுபிடிக்க முடியவில்லை என கிளம்பினர். அதனால் அடுத்து யாரையும் நம்பாமல் அவரே காட்டை கடந்து நாட்டிற்குள் சென்று, வருணி கொடுத்துச் சென்ற ஆரோனின் தனிப்பட்ட எண்ணிற்கு அழைத்துவிட்டார்.
அவன் குடும்பத்தினரைத் தவிர யாருக்கும் அந்த எண் தெரியாது என்றிருக்கையில், அந்த அழைப்பு வரும் இடம் சரியாக அமேசான் காட்டின் எல்லையில் ஒரு ஊர் என காட்டிய அடுத்த நொடி அந்த அழைப்பை ஏற்றிருந்தார் இந்திய பிரதமர் ஆரோன்.
"எஸ் ஆரோன் ஹியர்!" என்றதும், பிஸ்மத் அவரை அறிமுகம் செய்து கொண்டு அங்கு உள்ள நிலவரத்தை மொத்தமாக ஒப்பித்திருந்தார்.
"அவங்க காட்டுக்குள்ள போய் எத்தன நாளாச்சு?" என்றார் ஆரோன்.
"இன்னையோட பிஃப்டீன் டேய்ஸ். ரெண்டு நாள்ல வரலன்னா கவர்ன்மென்ட்டுக்கு இன்ஃபார்ம் பண்ணிடுங்கன்னு சொல்லிட்டுப் போனாங்க. நானும் எங்க ஹாஸ்பிடல் மூலமா இன்ஃபார்ம் பண்ணிட்டேன். பத்து பேர் வந்திறங்கிருக்காங்க ஆனா ரெண்டு நாளா தேடிட்டு, எங்கேயும் அவங்க கிடைக்கலன்னு கிளம்பிட்டாங்க"
பதினைந்து நாட்கள் என்கையில் ஆரோனுக்குமே பயமாக தான் இருந்தது. ஒன்று வளர்த்த பிள்ளை மற்றொன்று பெற்ற பிள்ளை, எப்படி சாதாரணமாக வந்து விடுவார்கள் என விட முடியும்? அந்நொடி ஆரோனின் இதயம் ஆட்டம் கண்டது உண்மை.
"நா பாத்துக்குறேன். தேங்க்ஸ் ஃபார் யுவர் இன்ஃபர்மேஷன்" என்றவன் அடுத்ததாக அழைத்தது யாஷின் மருத்துவமனைக்குத்தான்.
"என் பசங்க மிஸ்ஸாகி பிஃப்டீன் டேய்ஸ் ஆகிருக்கு. இப்ப வர எங்களுக்கு இன்ஃபார்ம் பண்ணல நீங்க. அவ்வளவு அலட்சியம்?" என்றவர், முதல் வேலையாக அவர்கள் மருத்துவமனை மீது புகாரை பதிவு செய்துவிட்டு அருணேஷிற்கு(வருணிக்ஷாவின் உடன் பிறப்பு) அழைத்தார்.
"அரு நீ யூஎஸ் கிளம்பு"
"என்னாச்சுப்பா?"
"அமேசான் காட்டுக்குள்ள வரு, யாஷ் ரெண்டு பேரும் மிஸ்ஸிங். பிஃப்டீன் டேய்ஸ் ஆச்சுன்னு இன்ஃபர்மேஷன். நீ உடனே கிளம்பு. நா இங்க சிட்யூவேஷன் பாத்துட்டு கிளம்பி வரேன். அம்மாவுக்கு நா சொல்லிக்கிறேன்" என சொல்லிக் கொண்டிருக்கையிலேயே, கையில் அலைபேசியுடன் வந்தார் ஆரோனின் செயலாளர் சலீம்.
"அமெரிக்க பிரசிடென்ட் கால்" என வந்து நிற்க,
"நீ கிளம்பு அரு" என அவனிடம் கூறி வைத்துவிட்டு, சலீமிடமிருந்து அலைபேசியை வாங்கி காதில் வைத்தார். இந்திய பிரதமரிடமிருந்து அமெரிக்காவில் இருக்கும் ஒரு மருத்துவமனையின் மீது புகார் என்கையில் விஷயம் அதிவேகமாக பரவி அங்கிருந்த மேலிடத்திலிருந்து உடனே அழைப்பு வந்திருந்தது.
இரண்டு நாட்டு தலைவர்களும் எளிதான வரவேற்பு பரிமாற்றத்துடன் விஷயத்திற்கு வந்திருந்தனர்.
"மிஸ்ஸானது உங்க ஃபேமிலி மெம்பர்ஸா?" என்றார் அமெரிக்க அதிபர்.
"எஸ்! தே ஆர் மை சில்ட்ரன்" என்றார் சுருக்கமாக ஆரோன்.
"நா தேடுதல துரிதபடுத்துறேன் சர் ஆரோன்" என்றார் அமெரிக்க தலைவர்.
"உங்க நியூஸ்காக நா வெயிட் பண்ணிட்டே இருப்பேன். என் சன் அங்க வர்றாங்க. அவங்களுக்கு தேவையான சப்போர்ட் குடுங்க. அல்ரெடி பிஃப்டீன் டேய்ஸ் போச்சு இனி எந்த எக்ஸ்க்யூஸஸும் இல்லாம என் பசங்க எங்கிட்ட வந்தாகணும்" என்கவும், அந்த பக்கம் ஆணைகள் அதிவிரைவாக பிறப்பிக்கப்பட்டது. என்னவோ மனதில் அவர்களுக்கு எதுவும் ஆகியிருக்காது என முழுமையாக நம்பினார் ஆரோன். ஆனால் அமெரிக்காவில் உள்ள மேலிடத்திற்கு அந்த நம்பிக்கை இல்லை.
"பதினைந்து நாட்கள் ஆகியிருக்கு இனிமே எங்கேயிருந்து உயிரோட கிடைக்க? இதனால எதாவது இஷ்யூ ரெண்டு கண்ட்ரிக்கும் இடையில வராம இருக்கணும். மொத்த காட்டையும் செர்ச் பண்ணுங்க தேவையான ஃபோர்ஸ இறக்குங்க" என உத்தரவு பறக்க, காட்டுக்குள் நேரடியாகவும், வான்வழி மூலமும், சேட்டிலைட், ட்ரோன் கேமிராக்கள் மூலமும் மொத்த அமேசான் காடும் அலசப்பட்டது.
"நானும் அரு கூட போய்ட்டு வரவா சார்?" என்றார் சலீம்.
ஆரோன், "நா கிளம்புற மாதிரி வந்தா நீ இங்க இருக்கணும் சலீம். சோ அரு மட்டும் முன்ன போட்டும்" என்றவர் இன்னும் சில அமெரிக்க நண்பர்களுக்கும் அடுத்தடுத்து பேசி வேலையைத் துரிதப்படுத்தினார்.
அங்கு காட்டினுள், யாஷ் வருணிக்கு அடுத்தடுத்த நாட்களும் தொய்வாகவே தான் கழிந்தது. அவர்களை அந்த குரங்கு மனிதர்கள் நன்கு கவனித்துக் கொண்டாலும் இவர்களுக்கு முடங்கி கிடப்பது எரிச்சலைக் கொடுக்கத் துவங்கியது. அதிலும் வருணி தாய்மை செய்தி தெரிந்த பின்னர், அவளது குடல் புண்ணுக்கான சிகிச்சை தள்ளிபோகுமோ அதை எவ்வாறு சரிசெய்ய போகிறோம் என்றெல்லாம் அவன் சிந்திக்க, வருணிக்கு எப்போதடா ஊருக்கு போவோம் என்றிருந்தது.
கொன்ற அந்த மூவரையும் எங்கே கொண்டு சென்றார்களோ எவ்வாறு பலி கொடுத்து உண்டார்களோ இவர்கள் அதை பார்க்கவும் இல்லை தெரிந்து கொள்ள முயலவும் இல்லை. அதை நினைத்தாலே வருணிக்கு ஒவ்வாமையாகிவிட அந்தப் பேச்சையே விடுத்துவிட்டனர். க்ளாடியனும் ஜனோமியும் தருவதை மட்டுமே உண்டனர்.
இவர்கள் ஒதுக்கி வைத்தாலும் கிழத்தினானும், அந்த குரங்கு மனிதர்களும் இவர்களை விடுவதில்லை வந்து பேச்சுக் கொடுப்பதும் அவர்கள் கதைகளைக் கூறுவதையும் வழக்கமாக வைத்திருந்தனர். வருணி அப்பொழுதுகளை தவிர்க்க அதிகமாக அந்த இரு பெண்களுடன் இருந்து கொள்வாள். ஆங்கில எழுத்துக்களைக் குச்சிகளைக் கொண்டு மலையில் இருக்கும் மணல்களில் எழுதவும் பயின்றனர் அந்த பெண்கள்.
யாஷ் மட்டுமே கிழத்தினானுடன் மேலேறி அனுமன் இடம் சென்று வருவான் அங்கிருந்து உதவி என முயன்றாலாவது யாரேனும் வருவார்களா என பார்க்கவே சென்றான். அங்கிருந்து அவனால் மொத்தக்காட்டையும் பார்க்க முடிந்தது, வானில் சுற்றிக்கொண்டிருந்த தேடுதல் படைகளையும் காண முடிந்தது அவர்களால் தான் அவனைக் காண முடியவில்லை.
"அவங்க எங்கள தான் தேடுறாங்க" என்றான் கிழத்தினானிடம்.
"மொத்த காடும் இவர்களால் தான் முழு நேரமும் விழித்தே இருக்கிறது. அதிக மனித தலைகள் காட்டிற்குள் உலவுகின்றன, எங்கள் எல்லைக்குள் வந்தவர்களைக் கூட இந்த முறை நாங்கள் எதுவும் செய்யாமல் பதுங்கி விட்டோம். யாரையும் உள்ளே கொண்டு வர கூட முயற்சிக்கவில்லை" என்றார் கிழத்தினான்.
"அதுலலாம் தெளிவா இருங்க" என முனங்கினான் யாஷ்.
ஓய்வுக்கு சென்ற குரங்கு மனிதர்களின் அரசன், காட்டில் நடக்கும் மாறுபாட்டால் பத்து தினங்கள் முன்பே கிளம்பி அவர்கள் இனத்தை சேர வந்தான்.
அன்று பௌர்ணமி நிலவு வெளிச்சத்தில் அருவிக்கரையில் படுத்திருந்தனர் யாஷும் வருணியும். அங்கு பகலில் சூரிய வெளிச்சம் இரவில் நிலா வெளிச்சம் மட்டுமே. தீயை சமைக்க மட்டுமே பயன்படுத்தினர். ஆங்காங்கே மரத்திலும் குகைகளிலும் தான் குரங்கு மனிதர்கள் படுத்திருந்தனர்.
"ஒரு சின்ன பூத்திரியில், ஒளி சிந்தும் ராத்திரியில், இந்த மெத்தைமேல் இளம் தத்தைபோல் புது வித்தை
காட்டிடவா" என மெல்லிய குரலில் பாடிக் கொண்டிருந்தான் யாஷ்,
"நீ காட்டுன வித்தைல தான்டா ஓடுற தண்ணியையும் மீறி உள்ள போய் செட்டில் ஆகிருக்கு உன் புள்ள" என அவன் தோளில் தலையை சாய்த்து அவன் நெஞ்சில் தாளம் தட்டிக்கொண்டிருந்தாள் வருணி.
"ஃப்ளோ மிஸ்ஸாகுதுடி" என அவள் கையில் அவன் லேசாக அடிக்க, திம் திம்மென்ற பெருத்த சத்தம் கேட்டது.
"ஏதோ சத்தம் கேட்குதுல்ல?"
"ஆமா டொம் டொம்னு யாரும் குண்டு எதுவும் போடுறாங்களோ?" என்றாள் வருணியும்.
"தலைவர் வரார். தலைவர் வரார்" என கோஷம் முழங்க வேகமாக ஒன்று கூடி இவர்களை மறைத்து நின்றனர் குரங்கு மனிதர்கள்.
"அவர் உங்களை காணும் முன் நீங்கள் அவரை அழித்துவிடுங்கள்" என வேகமாக வந்த கிழத்தினான் இவர்கள் இருவரிடமும் சொல்லிக் கூட்டத்தை விலக்கி முன்னால் சென்றுவிட,
"இவனுங்கள மனுஷங்க மாதிரி படைச்ச கடவுள் ஏன்டா மூளைய வைக்க மட்டும் மறந்துட்டாரு?" என்றாள் கையைத் தாங்கி படுத்திருந்த வருணி.
"எந்திரிடி அந்த தலைவர நாமளும் பாப்போம்" என எழுந்து நின்று அவளை எழுப்பிவிட.
குரங்கு மனிதர்களே உயரம் அந்த தலைவராகப்பட்டவன் அவர்களை விடவும் உயரமாக இருந்தான். நிழலாகவே பயங்கர உருவம் கொண்டவனாக தெரிய, "அவன் முட்டி ஒசரம் தான் இருக்க நீ. நீ கொல்லுவன்னு ரெண்டு மாசமா நம்மள இங்க பிடிச்சு வச்ச இவனுங்களுக்கு நெஜமாவே மூளை அரைகிராம் கூட இல்ல தான்டா" என்றாள் எரிச்சலாக.
"கிங்காங் மாதிரியே இருக்கான்டி"
"தெரிஞ்சா சரி. ஆமா இவன எப்படி கொல்லப்போற நீ?"
"மலைமாடு மாதிரி இருக்கான். இவன எப்படி நா கொல்ல முடியும் லூசு?"
இவர்கள் பேச்சு இவ்வாறு இருக்க, அங்கு அனைவரும் அவர்கள் தலைவராக வந்து நின்றவரை பணிந்து வணங்கி எழுந்தனர்.
"அனைவரும் நலம் தானே?" என அவர் தமிழில் பேசவும், வருணியும், யாஷும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொள்ள, "கிங்காங் தமிழ் டப்பிங்கும் பார்க்கப் போறோம் போல" என வருணி சொல்லவும், அந்நிலையிலும் அவளை செல்லமாக முறைத்து சிரித்தான் யாஷ்.
"நன்றாக உள்ளோம் ஹனுமான்!" என்றார் கிழத்தினான்.
"என்ன இவர ஹனுமானுன்னு சொல்றாங்க?" வருணி கேட்க,
"அவர அவரே அப்படி தான் கூப்பிட சொல்லிருக்காறாம். அவங்க கடவுள் பெயர அவருக்கு அவரே வச்சுக்கிட்டாராம்" என்றான் யாஷ்.
"காட்டிற்குள் ஏதோ செய்ய முயல்கின்றனர் இந்த நரன்கள். நாம் கொஞ்சம் ஜாக்கிரதையாக தான் இருக்க வேண்டும்" என தலைவர் சொல்ல,
"நம் மக்களில் நீங்கள் அழைத்து சென்ற ஏழு பேரையும் இந்த முறையும் திருப்பி அழைத்து வரவில்லையா அரசே?"
"அவர்களையும் அந்த நரன்கள் கடத்திச் சென்று விட்டனர்"
"நீங்கள் காப்பாற்றவில்லையா?"
"என் கண்ணை மறைத்து தான் தூக்கி சென்று விட்டனர். இனி சிறிது நாட்களுக்கு வேட்டைக்கும் செல்ல இயலாது என நினைக்கிறேன். நரன்கள் நம்மைத் தேடி தான் காட்டில் உலவுகின்றனர் என தோன்றுகிறது"
"எதற்காக நம்மைத் தேடுகிறார்கள்?"
"நம்மால் அவர்களுக்கு அதீத சக்தி கிடைக்கிறதாம். அதை வைத்து அவர்களால் அதிக காலங்கள் வாழமுடியும் என நம்புகிறார்கள்"
"இவனும் சேர்ந்து அவனுங்கட்ட டீல் பேசிட்டு இங்க வந்து எப்புடி நடிக்குறான்னு பாரு மாமா. இவங்க ஆளுங்கள பிடிச்சுக் கொடுத்தா இவனுக்கு மனுஷங்கள உணவா கொடுக்குறேன்னு அவனுங்க ஒத்துகிட்டு தான இவங்க ஆளுங்கள கொடுத்து மனுஷங்கள பிடிச்சு தின்னுறான் இவன்?" என்றாள் வருணி அருவருப்பாக. அதையும் அந்த மூவர் தான் கூறியிருந்தனர்.
"நாம் மிகவும் பாதுகாப்பாக இருக்க வேண்டும். எல்லையில் மறைந்து காவல் நில்லுங்கள். இங்கு எவராலும் வர முடியாது தான் எனினும் நாம் நம்மைப் பாதுகாத்துக் கொள்ள வேண்டும்" என்ற தலைவர் அவரின் குகைக்கு டொம் டொம்மென்ற சத்தத்துடன் தாவி ஏறிச் சென்று மறைந்து விட்டார்.