kani suresh
Moderator
நிலா சிவரஞ்சனிடம் எதுக்கு தினமும் இந்த இடத்துல நிக்கிறீங்க? என்று கேட்டுவிட்டு, அவளும் குழம்பி விட்டு அலுவலகத்திற்கு சென்றாள் .
அங்கு சென்ற பின், அவளுடைய வேளையில் மூழ்கி விட்டாள் . ஆனால், அப்போதும் அவனது நினைவு வாட்டி வதைத்தது.. 'இதே போல் தினமும் அவன் நின்று கொண்டு தான் இருக்கின்றான் 'என்று நினைத்துக் கொண்டு இருந்தாள்...
அப்போது, அவளுடைய அலுவலகத் தோழி, அவள் பெயர் நித்யா .
நித்யா அவள் அருகில் வந்து அமர்ந்தாள்." எனக்கு இன்னும் ஒரு மாசத்துல கல்யாணம் டி. நாளைக்கு கல்யாணத்துக்கு துணி எடுக்க போறோம் . நீயும் கூட வரியா பிளீஸ்!"
அவளோ," நீ குடும்பத்தோட போக போற ,அதுக்கு நான் எதுக்குடி?"
"நீயும் கூடவா. எனக்கு புடவை செலக்ட் பண்ணி கொடு. எனக்கு தனியா போக ஒரு மாதிரி இருக்கு.." என்றாள்.
"சரி நாளைக்கு தானே. ஆபீஸ் லீவ் போட்டுட்டா போகணும், இல்ல பர்மிஷன் கேட்டா போதுமா?
"இல்ல நிலா லீவு தான் சொல்லிட்டு போகணும். நீயும் லீவ் சொல்லிடு!" என்று கண்களை சுருக்கி கூறிவிட்டு ,அவள் வேலையை பார்க்க சென்று விட்டாள்.
நிலாவும் அவள் வேலையை பார்க்க ஆரம்பித்து விட்டாள்.
மறுநாள் நிலா ,நித்யா கல்யாணத்துக்கு புடவை எடுக்க அவளது குடும்பத்துடன் ஜவுளி கடைக்கு சென்றாள். நிலா வந்த பிறகு, அவளையும் அழைத்துக் கொண்டு ஒரே காரில் தான் ஜவுளி கடைக்கு சென்றார்கள்.
இவர்கள் சென்று கொண்டிருக்கும் போதே, ஜவுளி கடையில் இருந்து மாப்பிள்ளை வீட்டினர் போன் செய்தனர்.
"நாங்க வந்துட்டோம். சீக்கிரம் வாங்க! நல்ல நேரத்துல அப்பதான் துணி எடுக்க முடியும்" என்று கூறினர்.
நிலாவால் தான் இவர்கள் கிளம்புவதற்கு லேட் ஆகியது. நிலா தான் லேட்டாக அவர்களது வீட்டிற்கு வந்தாள்...
ஆகையால், இப்போது மாப்பிள்ளை வீட்டில் இருந்து போன் செய்தவுடன், நேரமாகுவதால் வேகமாக வண்டியை ஓட்டினார்கள்.
அப்போது சிக்னல் விழுந்ததை கவனிக்காமல், சிக்னலை தாண்டி செல்லவும், அங்கு சிக்னலில் இருந்த போலீஸ் வண்டியை நிறுத்தி," லைசன்ஸ் எல்லாம் கரெக்டா இருக்கா? எதுக்கு இப்போ சிக்னல் விழுந்தத கவனிக்காம போறீங்க இவ்ளோ ஸ்பீடா ?" என்று கேட்டார்.
அப்போது நித்யாவின் அப்பா "அவசரமா போறதால சிக்னல் விழுந்ததை பார்க்கல சார் .மன்னிச்சிடுங்க!" என்று மன்னிப்பு வேண்டினார்.
"அவசரமா போகணும்னா, இப்படித்தான் சிக்னல் விழுந்ததை கவனிக்காம போவீங்களா ?உங்கள மாதிரி பல பேர் இப்படி போறதால தான் நிறைய ஆக்சிடென்ட் நடக்குது சார்.."என்றார்.
அப்போது நேரமாகுவதை உணர்ந்து, நிலா தான், காரின் வெளியே தலையை மட்டும் நீட்டி, "சாரி சார் எங்க மேல தான் தப்பு. நாங்க தான் நேரம் ஆகுறதால கவனிக்காம வந்துட்டோம். மன்னிச்சிடுங்க!" என்றாள்.
அங்கு இருந்த சிக்னல் போலீஸ் இவளை பார்த்தவுடன் ஒரு நிமிடம் யோசனையில் ஆழ்ந்தார்.
'இவங்க தானே அன்னைக்கு சிவா சார் (SR) கூட பேசிட்டு இருந்தாங்க.
அன்னைக்கு சார் கூட தெரிஞ்ச பொண்ணு சொன்னாரே?'என யோசித்து விட்டு ,"சரி மா நீங்க போகலாம் போங்க.." என்றார்.
நிலா அவர் போகலாம் என்று கூறியவுடன் ,'இவர் தான அன்னைக்கு நம்ம அந்த போலீஸ்கிட்ட பேசிட்டு இருக்கும் போது வந்து, பேசினது ?' என்று போகும் வழியில் யோசனையில் ஆழ்ந்தாள்.
ஜவுளி கடைக்கு சென்ற பிறகு, புடவையை தேர்வு செய்தபடி இருந்தனர் அனைவரும்.
கடைக்கு சென்றவுடன் , முதல் வேலையாக நித்யாவிற்கு நல்ல நேரத்தில் முகூர்த்த புடவை எடுக்க வேண்டும் என்பதால் அதை தான் தேர்வு செய்தனர்.
அதன் பிறகு ,முகூர்த்த புடவையுடன் மாப்பிள்ளை வீட்டில் இன்னும் இரண்டு புடவைகள் எடுத்துக் கொடுப்பதால் ,அதைப் பார்த்துக் கொண்டு இருந்தார்கள்.
அது மட்டும் இல்லாமல், நித்யாவிற்கு அவளுடைய பிறந்த வீட்டிலிருந்தும் ஒரு சில புது உடைகள் எடுத்து தர வேண்டும் என்பதால், சுடிதார், புடவை என பார்த்துக்கொண்டு இருந்தார்கள்.
அவர்கள் சுடிதார் செக்ஷனில் சுடிதார் பார்த்துக் கொண்டிருக்கும் பொழுது, அங்கு சிவா தன்னுடைய தங்கையுடன் வந்து நின்றான்.
அவனது தங்கைக்கு நாளைக்கு பிறந்தநாள் , அதும் அவளுக்கு தானே செலக்ட் செய்து சுடிதார் எடுத்து தருவதாக கூறியிருந்ததால் தங்கையுடன் வந்திருந்தான்.
நாளை அவளுக்கு பிறந்தநாள் என்பதால், இன்று எந்த வேலையாக இருந்தாலும், அதை தள்ளி வைத்துவிட்டு, அவளுக்கு சுடிதார் வாங்கி தர வந்து விட்டான்.
அவசரமாக முடிக்க வேண்டிய, எந்த வேலையும் விட்டுவிட்டு வரவில்லை .சிறிது நேரம் கழித்து சென்றால் போதும் என்பதால் தங்கையுடன் வந்து விட்டான்.. கடமையே கண் என இருப்பவன்.. தங்கைக்காக சிறிது நேரம் ஒதுக்கி இருக்கிறான்..
அங்கு சிவவைப் பார்த்த நிலாவும் ,நித்யாவும் அவனை அங்கு எதிர்பார்க்கவில்லை என்று தான் கூற வேண்டும். அதை அவர்களது முகமே எடுத்துரைத்தது.. அவன் தன் தங்கைக்கு சுடிதார் செலக்ட் செய்வதில் மும்மரமாக இருந்தான்.
மூன்று சுடிதார் தேர்வு செய்தவன். அவளிடம் காட்டிக் கொண்டிருக்க, அவளோ ,அதில் ஒன்று மட்டும் பிடித்திருப்பதாகவும் ,மற்ற இரண்டும் பிடிக்கவில்லை என்று கூறிக் கொண்டிருந்தாள்.
அவனும் நேரம் ஆகுவதை உணர்ந்து," குட்டிமா எனக்கு வேலை இருக்கு. சீக்கிரம் உனக்கு எது புடிச்சிருக்குன்னு செலக்ட் பண்ணு.. லேட் பண்ணாத!"என கெஞ்சிக் கொண்டிருந்தான்.
வெளியில் போலீஸாக பார்க்கும்போது, விரைப்பாக இருப்பவன் தான். இப்போ ஒரு பெண்ணிடம் கெஞ்சி கொண்டிருக்கிறானா? என்பதை இருவராலும் நம்ப முடியவில்லை.
நிலா இருவரையும் பார்த்தவள் ஒருவேளை காதலர்களா ?என்று கூட எண்ணினாள். இந்தளவிற்கு கெஞ்சிக் கொண்டிருக்கிறார். நான் தான் இவரை தவறாக நம் மனதில் எண்ண தொடங்கி விட்டோமோ? என ஒரு நிமிடமே ஆனாலும் மனதிற்குள் நினைத்துக் கொண்டாள்.
ஆனால் அவனின் தங்கையோ அவளது, மன ஓட்டத்திற்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையாக, "அண்ணா! எனக்கு இந்த ஒரு டிரஸ் போதும், மூணு டிரஸ் வேணாம். என்னோட பர்த்டேவுக்கு நீயே என் கூட வந்து செலக்ட் பண்ணி டிரஸ் எடுத்து கொடுக்கணும் தான் ஆசைப்பட்டேன், அதுக்காக நிறைய டிரஸ் வேணும்னு எதிர்பார்க்கல. நீ என்கூட கொஞ்ச நேரம் டைம் ஸ்பென்ட் பண்ணனும்னு யோசிச்சேன் அவ்ளோ தான்!" என்றாள் சிரிப்புடன்.
அவள் அவ்வாறு கூறிய நொடி, எதற்காக சந்தோஷப்படுகிறோம் என்று தெரியாமல், மகிழ்ச்சி அடைந்தாள் நிலா. அவள் மனதில் என்ன இருக்கிறது என்று அவளுக்கே புரியவில்லை.
முதல் சந்திப்பில் அவரை தவறாக நினைத்தோம் ,இரண்டாம் சந்திப்பில் விரைப்பாக நல்ல போலீஸ் ஆபீஸராக தெரிந்தார். மூன்றாம் சந்திப்பு சந்தேக கண்ணுடன் பார்க்க நேரிட்டது.. இப்பொழுது தங்கையிடம் கெஞ்சிக் கொண்டிருக்கும் பாசமிகு அண்ணனாக தெரிகிறார். என்று யோசனையில் இருந்தாள்.
அவளது மன ஓட்டத்தை அறியாத நித்யா. இரண்டு முறை அவளை அழைத்துவிட்டு, அவளின் கவனம் இங்கு இல்லை என்றவுடன் அவளது சோல்டரில் தட்டி, "வா போகலாம், நேரம் ஆகுது "என்றாள்.
இவர்கள் இருவரையும் இப்பொழுது வரை சிவா பார்க்கவில்லை. தங்கையிடம் பேசுவதிலும், அவளுக்கு டிரஸ் எடுத்து கொடுப்பதில் மட்டும்தான் அவனது முழு கவனம் இருந்தது.
இவர்கள் இருவருமே பின்னால் இருந்துதான் அவனைப் பார்த்தார்கள். ஆனால், அவன் இவர்களை பார்க்கவில்லை இப்போது வரை.
கொஞ்ச நேரம் கழித்து நிலா ,ஒரு சுடிதாரை பார்த்துக் கொண்டிருந்தாள். அது அவளுக்கு பிடித்தும் இருந்தது. அப்போது அங்கிருக்கும் சுடிதார்களை பார்த்தபடி வந்த சிவாவின் தங்கைக்கும் அதே சுடிதார் பிடித்திருந்தது.
எனக்கு அந்த சுடிதார் வேண்டும் என்று அங்கு வேலை செய்பவர்களிடம் கூற .அங்கு இருப்பவர்களோ, ஏற்கனவே இந்த சுடிதாரை தேர்வு செய்து விட்டதாக கூறினார்.
நிலா அந்த சுடிதாரை செலக்ட் செய்து விட்டு, நித்யாவிற்கு வேற ஒரு சுடிதார் பார்த்துக் கொண்டு இருந்தாள்.
அப்போது ஒரு போன் பேசிவிட்டு தங்கையின் அருகில் வந்த சிவா ,"வீட்டுக்கு போகலாமா ?"என்று கேட்க .
"அண்ணா எனக்கு இந்த சுடி பிடிச்சிருக்கு!" என்று நிலா தேர்வு செய்து வைத்த சுடிதாரை கை காட்டினாள்.
அப்போது அங்கு வேலை செய்பவர்." சார் இது ஏற்கனவே ஒரு பொண்ணு செலக்ட் பண்ணி வச்சுட்டு தான் போயிருக்காங்க"என்றார்.
"குட்டிமா வேற ஒருத்தவங்க செலக்ட் பண்ணினத, நம்ம எப்படி கேட்க முடியும்?"
"இரு!" என்று தங்கையிடம் கூறியவன்." இதே டிசைனில் வேற சுடிதார் இருந்தா எடுத்து போடுங்க!" என்றான்.
அங்கு வேலை செய்பவரும் பார்த்துவிட்டு," இல்ல சார். இதுதான் லாஸ்ட் பீஸ். இதுக்கு அப்புறம் இந்த டிசைன்ல இல்ல. உங்களுக்கு வேணும்னா நீங்க கன்ஃபார்ம் பண்ணிட்டு, ஆர்டர் பண்ணிட்டு போங்க, ஒன் வீக் கழிச்சு வந்து பர்சேஸ் பண்ணிப்பீங்க" என்றார்.
சிவாவும் தங்கையிடம் அதையே கூற,அவளோ," என்னோட பிறந்தநாளுக்கு நான் கேட்டது வாங்கி தர மாட்டியா? நாளைக்கு போடலாம்னு ஆசைப்பட்டு தான் கேட்டேன். நீ என்னன்னா ஒரு வாரம் கழிச்சி சொல்ற?" என்று முகத்தை சுருக்கினாள்.
அவனோ," குட்டிமா நாளைக்கு போட இப்போ தான ஒரு சுடிதார் எடுத்தோம். இத தான் வேற ஒருத்தவங்க செலக்ட் பண்ணி வச்சிருக்காங்களே! இத எப்படி நம்ம இப்ப கேட்க முடியும்?"
அப்போது சிவாவின் தங்கை மேனகா," அண்ணா ப்ளீஸ்ணா !இந்த சுடிதார் எடுத்தவங்க கிட்ட ஒரே ஒரு நிமிஷம் கேட்டு பார்ப்போமா?"என்றாள் கண்களை சுருக்கி,
அவனும்," குட்டிமா இது என்ன பழக்கம் .அவங்க புடிச்சிருக்குன்னு செலக்ட் பண்ணி வச்சிருக்காங்க.."
"அண்ணா ப்ளீஸ் கேட்டு பார்ப்போம்."என கெஞ்சினாள்.
தங்கைக்காக "சரி வா கேட்டு பார்க்கலாம். ஒத்துக்கிட்டா சரி.. ரொம்ப அவங்களை கஷ்டப்படுத்த கூடாது. அவங்க தர மாட்டேன்னு சொன்னா, ஃபீல் பண்ண கூடாது. வேற வேணாலும் வாங்கி தரேன்" என்று கூறிவிட்டு ,அங்கு வேலை செய்பவர்களிடம்," இதை செலக்ட் செய்தது யார் ?"என்று கேட்டான்.
வேலை செய்பவரும் நிலாவின் அருகில் சென்று , நடந்த விஷயத்தை கூற,
எங்கு இருக்கிறார்கள் என்று கேட்டபடி அவர்களின் அருகில் வந்து நின்றாள் நிலா.
அங்கு நிலா சிவாவை எதிர்பார்க்கவில்லை, அவனும் இவளை எதிர்பார்க்கவில்லை.
இருவரும் இருவருக்கும் ஏற்கனவே தெரியும் என்பது போல் காட்டிக் கொள்ளாமல், அங்க வேலை செய்பவர்களிடம் என்ன? என்று கேட்க .
மேனகா தனக்கு அந்த சுடிதார் பிடித்திருப்பதாக கூறினாள். "நாளைக்கு எனக்கு பர்த்டே என்னோட பிறந்த நாளுக்க எங்க அண்ணன் சுடிதார் எடுத்துக் கொடுக்க வந்தார். அவர் எடுத்துக் கொடுத்த சுடிதார் எனக்கு பிடிச்சிருக்கு. இருந்தாலும், நீங்க எடுத்து வச்சிருக்க இந்த சுடிதார் எனக்கு பிடிச்சிருக்கு. இதே டிசைன்ல வேற சுடிதார் இருக்கான்னு கேட்டோம். இல்லன்னு சொல்லிட்டாரு.
அப்படி வேணும்னா ஆர்டர் பண்ணிட்டு போக சொல்றாங்க .ஒன் வீக் கழித்து தான் வருமாம். நீங்க தப்பா எடுத்துக்கலனா ஒன் வீக் கழித்து வரும்போது நீங்க எடுத்துக்குறீங்களா? இப்போ இந்த சுடிதார் எனக்கு தரீங்களா?"என்று நிதானமாகவே தனக்கு பிடித்திருப்பதாகவும் ,அதே சமயம் நீங்கள் எடுத்ததை நானே வாங்கி கொடுத்து விடுகிறேன், ஆர்டர் செய்துவிட்டு செல்கிறேன் என்று கூறியிருந்தாள்.
நிலா யோசனையில் வந்து சென்றது ஒன்றே ஒன்றுதான் அண்ணனைப் போலவே தங்கையும் அடுத்தவரை கவர்ந்து இழுக்கும் விதமாகத்தான் பேசுகின்றாள். எனக்கு இது பிடிச்சிருக்கு எனக்கு வேண்டும் தா என்று கேட்காமல், எனக்கு புடிச்சிருக்கு இதை விட்டு தருவீங்களா ?என்று கேட்கிறாள்.
கட்டளையாக இல்லாமல் பாசமாக கேட்கிறாள் என நினைத்தாள்.
ஆனால் நிலா ஒன்றை மறந்தாள். சிவா இவளிடம் எப்போது அன்பாக பேசினான் என்று அவளுக்கே தெரியவில்லை.
அப்போது நித்யா தான்" என்ன நிலா அந்த பொண்ணு கேட்டுட்டு இருக்கு. நீ எதுவும் சொல்லாம அமைதியா இருக்க?" என்றாள்.
நிலா அப்பொழுதும் அமைதியாக இருக்க.
" இல்லம்மா தப்பா எடுத்துக்காத . என்னோட பிரண்டு ஆசைப்பட்டு இந்த சுடிதார் எடுத்தா .அதை விட்டுக் கொடுக்க முடியாது" என்று கூற..
நித்யாவின் கையைப் பிடித்து நிலா. தனக்கு பிடித்த சுடிதாரை பேக் பண்ணி மேனகா விடமே கொடுத்து, "இந்தா உன்னோட பிறந்தநாளுக்கு என்னோட பர்த்டே கிப்ட்டா வச்சுக்கோ. ஒரு வாரம் கழிச்சு வர சுடிதாரை நான் வாங்கிக்கிறேன். அந்த சுடிதாருக்கு நீ பில் பே பண்ணவும் வேணாம். என்னோட கிப்ட் "என்றாள்.
சிவா நிலாவை கூப்பிட கூப்பிட காதில் வாங்காமல் நிலா செல்ல ..நித்யா அவளை நிற்க வைத்தாள்.
அதன் பிறகு, நின்று "என்ன ?"என்று கேட்க.
" என் தங்கச்சியை விஷ் பண்ண வரைக்கும் ஹேப்பி. அவளுக்கு பிடிச்ச சுடிதார் விட்டுக் கொடுத்ததே போதும்! பணம் நாங்களே கொடுத்துக்கிறோம்". என்றான்.
ஆனால், அவளோ ,"சார்.. ஏன் சார் ?நான் கொடுத்தா வேணாம்னு சொல்றீங்க? நான் ஒன்னும் லஞ்சம் தரலையே. உங்க தங்கச்சிக்கு புடிச்சிருந்த சுடிதாரை அவங்க பர்த்டேக்கு கிப்ட்டா அன்பளிப்பா தரேன். அவ்வளவுதானே!. அது உங்க தங்கச்சிக்கு ,உங்களுக்கு கிடையாது ஓகேவா!" என்றவள் அந்த இடத்தை விட்டு நகர.
சிவா அவளை முறைத்துப் பார்த்தான். அவளின் வார்த்தை அவனது காதில் ரிங்காரம் இட்டுக் கொண்டிருந்தது." இது அன்பளிப்பு தானே தவிர! லஞ்சம் அல்ல .."என்ற வார்த்தை..
மேனகா நிலா சென்றவுடன், "அண்ணா உனக்கு அவங்களை தெரியுமா? ஏன் இப்படி பேசிட்டு போறாங்க? "என கேட்க.
அவனோ ,"நேரம் ஆகுது. வீட்டுக்கு போகலாமா குட்டிமா?" என்றான்.
நித்யா மாப்பிள்ளை வீட்டில் இருப்பவர்களுடன் சேர்ந்து எடுத்த துணிக்கு பில் பே பண்ணி கொண்டு இருந்தார்கள்.
அப்போது நிலாவும் மேனகா வாங்கிய சுடிதாருக்கு பில் பே பண்ண வந்தாள். அப்போது தான் சிவாவும் அங்கு வந்து நின்றான்.
நிலா பில் கட்டி விட்டு திரும்பும் போது, சிவாவின் மீது மோதுவிட்டாள். அவளது பர்ஸ் கீழே விழுந்தது .அதை எடுக்க குனிந்த பொழுது, திரும்பவும் சிவாவின் நெற்றியோடு நெற்றி மோதினாள்.
"சாரி !"என இருவரும் ஒரே போல் கூறிக்கொண்டு நிமிர..
அப்போதுதான் நிலா சிவாவையும் ,சிவா நிலவையும் பார்த்தார்கள்.
இருவரும் எதுவும் பேசிக்கொள்ளாமல் நகர்ந்து விட்டார்கள் .
மேனகா தான் ஒன்றுக்கு இரு முறை நிலாவை திரும்பி பார்த்தாள்.
"அண்ணா அவங்க யாரு ண்ணா? அவங்க பார்வை அப்பப்போ உன்ன தான் சுத்தி வருது. இந்நேரத்துக்கு அது உனக்கு தெரியாம இருக்காது? அதுவும் நீ ஒரு போலீஸ்..உன் கண்ணுல இருந்து தப்புமா அவங்களோட பார்வை."என்றாள் கேள்வியாக
அவனும் சிரித்துக்கொண்டே," குட்டிமா அமைதியா வா!" என்றான்.
மேனகாவும் எதுவும் கூறவில்லை. சிவாவுடன் பைக்கில் வந்திருந்தால் மேனகா. வாங்கிய பொருட்களை பைக்கின் முன்னால் வைத்து விட்டு, மேனகா பின்னாடி ஏறி உட்கார்ந்தாள்.
மேனகாவின் துப்பட்டா டயரில் படும்படியாக இருந்தது.. நிலா அதை பார்த்தவள்.. கத்திக்கொண்டே வேகமாக இருவருக்கும் அருகில் வந்தாள்.
"அண்ணா வண்டியை நிறுத்து.. நமக்கு சுடிதார் கொடுத்த அந்த பொண்ணு பின்னாடி கத்திட்டு வராங்க" என்றாள்.
அவனும் வண்டியை நிறுத்த, நிலா மேனகாவின் துப்பட்டாவை டயரிலிருந்து எடுத்து ஒழுங்காக அவள் மேல் போட்டு விட்டு," பார்த்து பத்திரமா போ !"என்றவள் "அட்வான்ஸ் ஹாப்பி பர்த்டே!" என்றாள் மீண்டும்..
மேனகா சிரித்துக்கொண்டே "தேங்க்ஸ்!" என்றவள்" உங்க பேர்
என்ன?" என்று கேட்டாள்.
நிலா புன்னகை மாறாமல், "வானத்தில் இரவு நேரத்தில் வரும் நிலா!" என்றபடி அங்கிருந்து நகர்ந்தாள்..
நிலாக்கூறிச்சென்ற விதமே மேனகாவை சிலிர்க்க வைத்தது. அதே நேரம் சிந்திக்கவும் வைத்தது..