எங்கள் தளத்தில் எழுத விரும்பும் எழுத்தாளர்கள் எங்களை கீழ் உள்ள மின்னஞ்சலில் தொடர்ப்புக்கொள்ளவும் நன்றி Email ID - narumugai.ink@gmail.com

மஞ்சத்தின் மேல் மன்னிப்பாயா..

subageetha

Moderator
மஞ்சத்தின் மேல் மன்னிப்பாயா.. என்னோட கதைகளில் பெரும்பாலும் மன நலம் எவ்வாறெல்லாம் வாழ்க்கையில் மாற்றங்களைக் கொண்டு வருகிறது,எவ்வாறான சந்தர்ப்பங்களில் பெண்கள் திருமண உறவு விட்டு வெளியே வருகிறார்கள்,மென்மையான கண்ணியமான ஆண்கள் ,அவர்கள் நடத்தை ,என்று இருபாலாருக்குமான நியாயங்களை பொதுவில் வைத்து எழுதி வருகிறேன். இந்தக் கதை சிறு வயது முதலே நட்பில் இருக்கும் athithi-நிரஞ்சன் இருவருக்குமான நட்பு,அதிதியின் திருமணம் அவளது அதன் பின்னான வாழ்க்கை என்று நகரும். அவளது திருமண வாழ்க்கையில் அவளது நட்பு பின்னுக்கு சென்று விடுகிறது.எப்பதி என்று இந்த கதையை முழுவதுமாக படித்தால் நிச்சயம் புரியும். கொஞ்சம் kaadhal-நிறைய புரிதல்.இதுதான் மஞ்சத்தின் மேல் மன்னிப்பாயா.. சில விஷயங்கள் நடப்பவை.அவற்றை வேறு தவிர்க்க முடியாமல் எழுதி இருக்கேன். பெண்ணை பெத்தவங்க தங்கள் கருத்தில் கொள்ள வேண்டிய விஷயங்கள் இவை.சமூக சீர்கேடும் தான். அதனால் 18+ கொடுக்கறேன்.மற்றபடி முகம் சுழிக்கும் எந்த விஷயமும் காட்சிப்படுத்தப் படவில்லை. தொடர்ந்து உங்க ஆதரவு வேணும். உங்க கருத்துக்களை ஆர்வமா எதிர்பார்க்கும் தோழி

சுபகீதா
 
Top