எங்கள் தளத்தில் எழுத விரும்பும் எழுத்தாளர்கள் எங்களை கீழ் உள்ள மின்னஞ்சலில் தொடர்ப்புக்கொள்ளவும் நன்றி Email ID - narumugai.ink@gmail.com

மனதில் ஆடும் காதல் மந்தாரா - 5

subasini

Moderator
மனம் - 5

நம்மைச் சார்ந்து இருக்கும் உறவுகளை நேசிப்பது இயற்கைத் தானே…

தன் உடன் பிறந்தவனின் வேதனையும் அவமானத்தையும் தன் அவமானமாக உணர்ந்துத் துடித்தான் அதியமான்…

தந்தையை இழந்து தவித்த குடும்பத்தில் தூணாகத் தாங்கி நின்றவன்… இந்தச் சமூகத்தில் தனியாக எப்படிப் பிள்ளைகளை வளர்ப்பேன் என்று அஞ்சி நின்றத் தாயிக்குத் தைரியம் அளித்து நல்ல பெயரை வாங்கிக் கொடுத்தவன்…

தன்னை மீறித் தான் எந்தத் துயரமும் தன் குடும்பத்தைத் தொட முடியாது என்று அரணாக இருந்தவனின் இறுமாப்பைத் தகர்த்தெறிந்தது அவன் தம்பியின் தற்கொலை முயற்சி.

அதற்குக் காரணமாகப் பெண்ணொருத்தி இருக்கிறாள் என்பதை அவனால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை…

தன் நண்பனும்... தொழிலில் தன் பார்ட்னருமானா இனியனை அழைத்தான்…

“இனியா… எனக்கு ஒரு தகவல் வேண்டும் டா”…என்றான் அதியமான்…

“உன்கில்லாத தகவலாக ... சொல்லுடா என்ன தகவல் எதைப் பற்றி எப்போ வேணும்” என்று கேட்டான் இனியன்…

“நம்ம, சதீஷிற்கு ஆக்ஸிடென்ட் ஆகிடுச்சு டா”... என்றான்

“என்னடா, சொல்லற வெளிநாட்டிற்குப் போக வேண்டிய பையன் டா‌ அவன்… நான் எல்லா ஏற்பாடுகளையும், நீ சொன்னது போலச் செய்து விட்டேன்… உன்னிடம் நானே கேட்கணும் இருந்தேன். அதற்குள் நீயே அழைத்து விட்டாய்... என்னாச்சு அவனுக்கு” என்று கேட்டான் இனியன்…

“காதல் தான்டா”… என்ற‌ அதியமானிடம்..

“வாட்! காதலா…நம் சதீஷா! என்ன சொல்லற டா … நம்ப முடியவில்லையே!” என்றான் இனியன்…

“உனக்கே ஷாக்காக இருக்கென்றால், எனக்கு எப்படியிருக்கும்… அதற்குக் காரணமொரு பெண். அவனை அவமானம் படுத்தித் தற்கொலை வரைக்கும் போகக் காரணமாக இருந்திருக்காள், என்றால் யோசி” என்றவனின் வார்த்தைகள் புரியாமல்…

“நீ என்ன சொல்ல வர... காதல் பண்ணறான் ஒகே… அதற்கு ஏன் அவன் தற்கொலைப் பண்ணணும்... தெளிவாகச் சொல்லுடா... நீ‌ க்ளியர் பண்ணும் கோடிங் போல் பேசாதே”…என்றவரிடம் கடைசியாகச் சதீஷ் தன்னிடம் பகிர்ந்த விஷயங்கள் சொன்னவன்

“எனக்கு அந்தப் பொண்ணு யாரென்று‌த் தெரியணும். சம்மந்தமே இல்லாமல் இவங்கக் காதலில் இடையே வந்து‌… என் தம்பியை இப்படிப் படுக்க வச்சுட்டா… விட மாட்டேன் டா” என்ற‌ அவன் கர்ஜனையில் இனியனுக்குமே மனதில் பயம் வந்தது…

காதலர்கள் இடையே வந்த அந்தப் பெண்ணின் செயலில் தவறை உணர்ந்தவன், தன் நண்பன் கோபத்தில் எதாவது செய்வதற்குள் அவனுக்கு உதவதற்கு முடிவுச் செய்தான் இனியன்…

“சரிடா எல்லாத் தகவல்களும் உனக்குச் சீக்கிரம் தரேன் என்றவன்…‌அதற்கு‌பின் பேசிதெல்லாம் அவர்கள் கம்பெனி பற்றிய உரையாடல் தான்.

தன்னை ஒருத்தன் தேடிக்கொண்டிருக்கிறான் என்று தெரியாமல் தாரிகாவோடு விவாதித்துக் கொண்டிருந்தாள் தாரா…

“‌நீ ஏன் தாரா அவனை அடிச்ச” என்று அழுதுகொண்டே கேட்டாள் தாரிகா…

“அவன் என்ன சொன்னான் புரிந்ததா… இல்லை காதல் மயக்கத்தில் இன்னும் அவனை நம்பிட்டு இருக்கியா, தாரு… எனக்குப் பயமாக இருக்கு டி, இன்னும் வீட்டில் யாருக்கும் தெரியாது… நீ வேற ஒரு குழந்தையைச் சுமந்துட்டு இருக்க…‌ இந்த நேரத்தில் இப்படிப் பேசுவது தவறு… அவன் எப்படி நம்மளுடைய பாப்பாவ வேண்டாம் சொல்லலாம்”… என்று அழுகையின் ஊடே தான் எதற்குக் கோபப்பட்டேன் என்று‌ப் புரிய வைத்தாள்.

தன் பிள்ளையைத் சொந்தப்பிள்ளையாக நினைத்து வேதனைப் படும் தாராவின் நிலையைக் கண்டு அவளை‌ அணைத்தவள் மெல்ல “தாரா, சதீஷ் ரொம்ப நல்லவன் தான்… அவனுக்கு இப்படி ஆகுமென்று ஐடியாவே இல்லை தாரா… அது தான் என்ன பண்ண என்று தெரியாமல் பேசி இருப்பான்” என்று தங்கள் எதிர்காலத் திட்டங்கள் எல்லாம் கூறினாள். தாரிகா, கூறியதைக் கேட்டு அவன் மேல் நம்பிக்கை வந்தது தான் தாராவிற்கு. எல்லாரும் ஏமாற்றுக்கார்கள் என்று நினைப்பதும் தவறல்லவா, நல்லவனும் இருப்பான் என்று அறிவு எடுத்துச் சொன்னது.

“சரி அவனிடம் நான் பேசி மன்னிப்புக் கேட்கிறேன்… அவன் குழந்தையை வேண்டாம் சொன்னதால் தான் எனக்குக் கோபம் வந்தது தாரிகா… என்னால் அதைக் கற்பனைக் கூடப் பண்ண முடிய வில்லை” என்றாள் தாரா…

கண்ணில் நீரோடு அவளை அணைத்து "புரியுதுத் தாரா… நம் குழந்தையை என்னை மீறி யாரும் எதுவும் பண்ண விட மாட்டேன்”… என்றவளின் முகத்தில் பயரேகைப் படருவதைக் கண்டு,

“என்ன தாரிகா” என்றாள் தாரா…

“இல்லை…இப்போ நான் என்ன பண்ண என்று தெரியவில்லை தாரா…சதீஷ் ஃபோன் ஸ்விட்ச் ஆஃப் வருது… எனக்குப் பயமாக இருக்கிறது…

இதெல்லாம் சுலபமாக மறைக்கக்கூடிய விஷயங்கள் இல்லை, வீட்டில் தெரிந்தால்…அப்பாவை நினைத்தால் எனக்குப் பயமாக இருக்கிறது தாரா” என்றாள் தாரிகா.

“ம்ம் புரியுது…நானும் இதைப் பற்றி ‌யோசித்தேன் தாரிகா…
விடு முதலில் நாம் சதீஷை ரீச் பண்ணணும்…

சதீஷிடம் நாம் பேசி எல்லாம் சரிப்பண்ணற வரைக்கும், எல்லாம் சமாளிக்கணும். நீ ‌இங்கே படிக்க முடிவுப் பண்ணு…‌லீவ் ஒரு மாதம் என்று சொல்லி விடு… அப்பறம் இங்கே வந்திரு... நான்‌ அம்மாவிடம் பேசறேன் கண்டிப்பாக நம்புவாங்க…
இங்கேயே டாக்டரைப் பார்க்கலாம், எனக்கு இந்த மாதத்தில் இருந்து வேலைக்குப் போகணும் இன்டெரின்ஸிப் கிடைச்சு இருக்கு, அதில் கொஞ்சம் பணம் வரும், அதில் உன்னோட மெடிக்கல் செலவைப் பார்த்துக் கொள்ளலாம்… நீ இங்கே ஏதாவது கோர்ஸ் சேர்ந்திரு, ஏழு மாதம் இல்லை எட்டு மாசத்துக் கோர்ஸ் வீட்டில் சொல்லிடலாம், சந்தேகம் வராத படி நடக்கலாம்.. எனக்குக் கடைசி வருடம் சொல்லி அவங்களை நம்ப வைக்கணும்” என்றவள்

“நீ இப்போ வீட்டிற்குப் போயிரு இல்லை என்றால் சந்தேகம் வரும்… டாக்டரிடம் பார்த்து உனக்கு இந்தக் காலை நேரச் சிக்னெஸ் எதாவது மருந்து வாங்கிக்கலாம்…

எல்லாம் சரியாக நடக்கணும் வீட்டில் யாருக்கும் சந்தேகம் வராமல் பார்த்துக் கொள்ளலாம் தாரிகா”… என்று எப்படியெல்லாம் இந்த விஷயத்தை யாருக்கும் பாதிப்பில்லாமல் கொண்டு செல்லலாம் என்று திட்டமிட்டாள் தாரா…

தாராவின் யோசனை எல்லாம் கேட்கக் கேட்க மனதில் பயம் உண்டானது தாரிகாவிற்கு… அவள் தாய்மை அடைந்த விஷயம் வீட்டில் தெரிந்தால் உண்டாகும் பூகம்பம் பற்றி நினைத்தாலே உயிர் உடலில் இருந்து செல்லத் துடித்தது…

“நீ சொல்வது எல்லாம் கேட்க நன்றாகத் தான் இருக்கு … ஆனால் எனக்குப் பயமாக இருக்கிறது”… என்றாள் தாரிகா.

“உன் காதல் மேல் நம்பிக்கை இருக்கிறதா? தாரிகா... நான் போய்ச் சதீஷ் கிட்ட மன்னிப்புக் கேட்கிறேன். முதலில் அவன் எங்கே என்று கண்டு பிடிக்கணும்... அதற்குப் பிறகு மற்றதெல்லாம் யோசிக்கலாம்… ஒரு வேளை நமக்கு எந்த விதமான வழியும் இல்லாமல் தவிக்கும் போது… நான் சொன்னது பண்ணலாம்…

நீ‌ முதலில் சதீஷின் ஃபோனிற்கு இன்னொரு முறை முயற்சிப் பண்ணு” என்றாள் தாரா…

“இல்லை நான் நளினிக்கு அழைத்துப் பார்கிறேன்… அவளுக்குத் தெரியும்… அவனை‌ப் பற்றி‌ எல்லாம்” என்றவள் நளினிக்கு அழைப்பை விடுத்துக் காத்திருந்தாள்…

தாரிகாவின் அழைப்பைப் பார்த்தும் வேகமாக எடுத்தாள் நளினி…

"ஹாலோ தாரிகா" என்றதும் தாரிகா, சதீஷ் பற்றிக் கேட்டாள்…

“சதீஷ் உன்னைக் கூப்பிட்டானா நளினி அவன் ஃபோன் ஸ்விட்ச் ஆஃப் வருது என்ன ஆச்சு அவருக்கு” என்று கேட்டாள் தாரிகா…

“உனக்குத் தெரியாதா.. அவனுக்கு ஆக்ஸிடென்ட் ஆகிடுச்சு டி.. ரொம்பச் சீரியஸாக இருக்கான் ஐசியூவில்... காப்பாறுவதே கஷ்டம் என்று சொல்லிட்டாங்க…
அவன் அண்ணா வந்திருக்காரு, அவனுக்கு ஆபத்துக் கட்டத்தில் இருந்து வந்துவிட்டால்… அவனைக் கூட்டிப் போயிடுவாருச் சொல்லறாங்க… ‌‌அவன் கோமாவிற்குப் போகாமல் இருக்கணும் வேற‌ச் சொல்லறாங்க‌, என்ன செய்வதென்று‌த் தெரியவில்லையடி” என்றாள்‌ நளினி…

“நீ தைரியமாக இருக்கணும் ‌தாரிகா" என்றவள்... நான் என்ன சொல்ல வரேன் புரியுதா…காதல் எல்லோருக்கும் வெற்றிப் பெறுணும் என்று‌ இல்லை” என்று அறிவுரைக் கூறியவள் எதிர் தரப்பில் இருக்கும் தன் தோழியின் மௌனத்தை உணர்ந்து …
“நீ என்ன எதுவும் சொல்லாமல் அமைதியாக இருக்கிறாய், தாரிகா” என்றாள்…

“நான் அப்பறம் பேசறேன்” என்று‌த் துண்டித்தவள்‌ அதிர்ச்சியாகி அமர்ந்தாள்…

தாரிகாவின் நிலையைக் கண்டு பயந்தத் தாரா “என்ன ஆச்சுத் தாரிகா” என்று‌க் கேட்டாள்…

சதீஷ்ற்கு விபத்து ஏற்பட்டு நினைவில்லாமல்‌ இருக்காருத் தாரா என்றவளின் வார்த்தைகள் கேட்டுச் சிலையென உறைந்தாள் போய் நின்றாள் தாரா…

இக்கட்டான சூழ்நிலையில் தள்ளிய இந்தக் காலத்தில் மேல் கோபம் வந்தது…

“தாரா எனக்குப் பயமாக இருக்கிறது டி... இந்த விபத்தின் காரணமாக… அவரு என்னைய மறந்துவிட்டால் … என்னடி, செய்வது நான்”… என்றவளுக்குப் பயத்தோடு அழுகையும் சேர்ந்து வந்தது…

"நான் உயிரோடு இருக்கவே கூடாது… எவ்வளவு பெரிய தவறு செய்துவிட்டேன்… அப்பாவின் முகத்தில் எப்படி நான் விழிப்பேன்”… என்றவள் முகத்தில் அறைந்து கொண்டு அழுதாள்…

இந்தச் சமுதாயத்தின் கட்டமைப்பில் திருமணத்திற்கு முன்னே குழந்தையைச் சுமக்கும் பெண்ணை எப்படிப் பட்ட ஏச்சுகளைக் கேட்ட நேரிடும் என்று அறியாதவர்கள் இல்லையே இருவரும்… அவள் மட்டும் இல்லாமல் அவர்கள் குடும்பத்தில் இருக்கும் அனைவரையும் அல்லாவாத் தூற்றுவார்கள்.


"அப்பவும் அம்மா சொல்லிச்சு... இந்த வயதில் எல்லாம் அழகாக இருக்கும்... தவறுகள் எல்லாம் சரியாகத் தோன்றும்… மனசு உணர்வு பூர்வமாகச் செயல் படும்... எதார்த்தம் உணர வைக்காது... அறிவுச் சொல்லவதை மனசுக் கேட்காது... என்றெல்லாம் அவங்கச் சொன்ன அறிவுரைகள் எல்லாம் ‌வறண்ட‌ நிலத்தில் ஊற்றிய நீராகிப் போனதே" என்று அழுதுத் தீர்த்தாள் தாரிகா…

அவனை மறந்து இன்னொரு வாழ்க்கையை நினைத்துப் பார்க்க முடியுமா… முடியாதே.. அவனை உண்மையாகக் காதலித்தேனே… அவன் தான் என் எதிர்காலம் என்று எதிலும் கவனம் இல்லாமல் அவனை மட்டுமே மனதில் நினைத்து வாழ்ந்த இந்த மூன்று வருடங்களை என் வாழ்க்கையின் பக்கங்களில் இருந்து அழிக்க முடியுமா…அவனுக்கு இந்த விபத்தின் விளைவினால் நினைவுகள் எல்லாம் அழிந்து போனால்... இப்படிச் சிந்திப்பதே அவளுக்குப் பயமாகக் கண்கள் இருண்டது... அவள் வாழ்க்கையைப் போலவே… நின்றவாறே மங்கியவளைத் தாங்கினாள் தாரா…

“தாரு.. என்னடி, பண்ணுது... பயமுறுத்தாதேடி… எனக்கு அழுகை வருவது”…என்று அழுதவாறே அவளைக் கட்டிலில் படுக்க வைத்தவள் அவள் மயக்கம் தெளிய நீர்த் தெளித்தாள்.

அவள் வேதனையில் இருண்ட முகத்தில் நான் தெளிக்கும் இந்தத் தண்ணீர் ‘உன் துன்பத்தை எல்லாம் துடைத்தெறிந்து விடும்’ என்பது போல இருந்தது தாராவின் செயல்…

மயக்கம் தெளியாமல் இருந்ததால் என்ன செய்ய என்று புரியவில்லை தாராவிற்கு… வேகமாக நளினிக்குத் தாரிகாவின் அலைபேசியில் இருந்து அழைத்து இப்படித் தாரிகாவிற்கு‌ உடல் நிலைச் சரியில்லை துணைக்கு வந்து உதவ முடியுமா என்று‌க் கேட்டாள்…

தன் தோழியின் நிலைக் கேட்டதும் தாயிடம் சொல்லிவிட்டு வேகமாக வந்தாள் அவர்கள் இருப்பிடத்திற்கு…

“என்ன ஆச்சு” என்றபடி வந்தாள் நளினி…

அவள் வருவதற்குள் வாடகைக்குக் கார்ப் பதிவுச் செய்தவள், அவளை எப்படிக் கூட்டிப் போக என்று தெரியாமல் திணறிக்கொண்டிருந்த நேரம் சரியாக வந்தாள் நளினி…

சொல்லறேன் கொஞ்சம் உதவிச் செய் அவளை வெளியே இருக்கும் கேப் கூட்டிப் போக வேண்டும் என்றாள் தாரா…

கேப் அருகே வரும் போது மெல்ல… “ஷீ ஸ் ப்ரெக்னன்ட், அதுவும் இல்லாமல் சதீஷ் ஆக்ஸிடென்ட் பத்திக் கேட்டு டிப்ரெஷனில் இப்படி மயங்கி விழுந்துட்டாள், பர்ஸ்ட் எய்டுப் பண்ணியும் அவள் கண் திறக்கவில்லை அது தான் உன்னை உதவிக்கு அழைத்தேன். வந்ததற்கு நன்றி” என்றாள் தாரா.

“எதற்குப் நன்றியெல்லாம்… அவள் என்னோட தோழி, அவளுக்கு நான் உதவாமல் யார் வருவா" என்று சொன்னவளின் விழிகள் நிறைந்தது தன் தோழியின் நிலையைக் கண்டு.

காரில் வேகமாக அருகே இருக்கும் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர்.

தாராவின் முகம் பயத்தினால் வெளிறியது.
மயக்கம் தெளியாமலேயே காரின் அதிர்வில் … பிதற்றினாள் தாரிகா… "அவனைக் காப்பதணும்... அவன் சரியாகணும்" என்று முணுமுணுத்தாள்.


சுயநினைவில்லாமல் தாரிகாவின் பேச்சைக் கேட்டு மிகவும் வேதனை அடைந்தனர் தாரா மற்றும் நளினி…

அவளைப் பரிசோதித்த டாக்டர் அவளுக்கு இரத்த அழுத்தம் அதிகமாக இருக்கிறது என்றார்... கர்ப்பமாக இருக்கும் அவளுக்கு இப்படி மன அழுத்தம் வரக் கூடாது அவள் ஆரோக்கியத்திற்கு நல்லதல்ல என்றார்.

தோழிகள் இருவரும் அவள் கண் விழிக்கக் காத்திருந்தனர்…இரண்டு நாட்கள் நடந்த எல்லாம் அவள் மனம் மற்றும் உடல் நிலையைப் பாதித்திருக்கிறது என்று புரிந்தது.

என்ன பண்ண… எப்படி இதெல்லாம் சரி செய்ய, என்று புரியவில்லை தாராவிற்கு.

தாரிகாவை விழி எடுக்காமல் பார்த்தவள் நளினியிடம் வந்து,

நளினி, சதீஷை எந்த ஹாஸ்பிடலில் சேர்த்து இருக்காங்க உனக்குத் தெரியுமா? என்று கேட்டாள்.

தாராவின் கேள்விக்குப் பதில் அளித்த நளினி "ஏன் கேட்கிறாய்"
என்றாள்.

"இல்லை அவன் உடல் நிலை எப்படி இருக்கிறது… எதாவது முன்னேற்றம் இருந்தால் தாரிகாவிற்கு நம்பிக்கைத் தரலாம், அது தான் நான் போய்ப் பார்த்துட்டே வரேன்" என்றவள் "நீ‌, தாரிகாவைக் கொஞ்சம் நேரத்துக்குப் பார்த்துக்கொள்வாயா" என்று பாவமாகக் கேட்டாள் தாரா.


தாராவின் எண்ணம் புரிந்ததால் சரி என்று சொன்னாள் நளினி.

சதீஷ் இருக்கும் மருத்துவமனைக்கு வேகமாகச் சென்றாள்.

இரண்டு நாட்கள் நடந்த நிகழ்வுகளின் தாக்கம் அவள் முகத்தில் பிரதிபலிக்க... தன்னைப் பற்றிய கவலைகள் எதுவும் இல்லாததால், தன் உடைபற்றியோ... பார்ப்பதற்கு எப்படி இருக்கிறோம் என்ற கவனமில்லாமல் சதீஷைக் காண வேகமாக வந்தாள் தாரா.

அவன் ஐ சி யூ வில் சென்று விசாரித்தவள் அனுமதிக் கிடைக்குமா என்று பார்த்துக் கொண்டிருந்த நேரம், சதீஷின் தாயும் அங்கே மிகவும் பதற்றத்தோடு அழுதபடி வேகமாக வந்து கொண்டிருந்தார்.

அவர் பின்னாடியே சென்று தாராவை யாரும் கவனிக்கவில்லை.

தன் மூத்த மகனைக் கண்டதும் வேதனையின் காரணமாக அழுதவரின் உடலில் நடுக்கம் ஏற்பட்டுக் கவனமில்லாமல் விழாப்போனவரைப் பின்னே வந்துக்கொண்டிருந்த தாரா அவரைக் கீழே விழாமல் வேகமாகப் பிடித்துக் கொண்டாள்.

விழப்போகும் தாயிடம் வேகமாக வந்தவன், அவரைப் பிடித்திருக்கும் கரங்களின் சொந்தக்காரியைப் பார்த்ததும், பிடித்தமின்மை அவன் முகத்தில் படர்ந்தது.

மருத்துவமனைக்கு வர வேண்டும் என்ற ஒரு காரணத்திற்காக வேகமாக வந்தவளின் ஆடையோ, அவளின் சிகை அலங்காரமோ, முகம் எதிலும் ஒரு தெளிவோ, அழகோ இருக்கவில்லை. அவளைப் பார்த்தவுடன் முகம் சுளித்தான் அதியமான்.

வேகமாக அவளிடமிருந்து தன் தாயைப் பிடித்தவன், அங்கே அருகே இடப்பட்டிருந்த இருக்கையில் அவரை அமர வைத்தான்.

"ஒன்றும் இல்லை அம்மா, நான் பார்த்துக் கொள்கிறேன்... அவன் சரியாகி வந்து விடுவான்" என்று கூறியவன் வார்த்தைகளைக் கேட்டு மகனின் முகத்தைப் பயத்தோடு பார்த்தார் அதியமானின் தாய், சாந்தி.


தாயின் வேதனையையும் துயரத்தையும் உடனே போக்க வேண்டும் என்ற வேகம் அவனுக்கு வந்தது. தாயின் அவல நிலையும் உள்ளே உயிருக்குப் போராடிக் கொண்டிருக்கும் தன் தம்பி நிலையையும் எண்ணியவனின் முகம் வேதனையில் இருண்டு, கண்கள் கலங்கியது.

தன் தாயின் காலுக்குக் கீழே அமர்ந்தவன், அவர் கைகளைத் தன் கைகளுக்கு வைத்து அவரின் முகம் பார்த்துப் "பயப்படாதீங்கம்மா, கண்டிப்பா அவனை நான் காப்பாத்திடுவேன், இப்படி அழுகாதீங்களென்றால் என்னால் தாங்க முடியாது" என்று வேதனையோடு கூறினான்.
அவன் தாயின் மேல் இருக்கும் அக்கறையும் பாசமும் தம்பிக்காகப் போராடும் அவன் வேகமும் குடும்பத்தின் மேல் அவனுக்கு இருக்கும் அன்பும், பந்தமும் பார்த்துத் தாராவின் மனதில் ஆழ்துளைக்கிணறின் நீர் போல் ஆழமாக அவனின் மேல் காதலும் பாசமும் ஊறிக் கொண்டு வந்தது.

தன் தந்தையைப் போலே குடும்பத்தை மட்டுமே சிந்திக்குமொரு ஆண்மகன் என்று மட்டுமே அவள் மனதில் பதிந்தது.

இந்தக் காலகட்டத்தில் இப்படியொரு ஆண் மகனா என்று மட்டுமே தோன்றியது. அவளும் பல ஆட்களைப் பார்க்கின்றாளே... தன் தந்தை மட்டுமே இருந்த இடத்தில், இன்று அதியமானும் இடம் பிடித்தான். அவனின் இந்த முகம் அவளுக்குப் பிடித்திருந்தது. முகமென்றால் அவன் முகத்தின் அழகு அல்ல... அவனின் குடும்பத்திற்காகப் போராடும் இந்த அவனின் பாசமான முகம்.

அவனின் ஒவ்வொரு வார்த்தைகளிலும் கேட்டு அவள் ஆழ்மனதிலும் வலியும் வேதனையும் வந்து கண்கள் மேலும் கலங்கியது. ஆண்டவா என் தங்கைக்காக அவள் காதலனைக் காப்பாற்ற வேண்டும் என்று எண்ணியிருந்தவள், இப்பொழுது இந்த அண்ணனின் பாசத்திற்காகவும் அவன் திரும்பி வரவேண்டும் என்று மனதார வேண்டினாள் இறைவனை.

அதியமானின் உணர்ச்சிவசப்பட்ட நிலையைக் கண்ட இனியன் மெல்ல அவன் அருகில் வந்து அவன் தோளில் கை வைத்து " அவனுக்குச் சரியாகிவிடும், அமைதியாக இரு டா, கொஞ்சம், அம்மாவைப் பாரு அழறாங்க" என்று கூறினான்

சதீஷைக் காண வந்தவள், இங்கு நடக்கும் உணர்வுப் போராட்டங்களைப் பார்த்துக் கொண்டிருந்தாள் தாரா. அப்பொழுது அங்கே சதீஷைப் பார்த்துவிட்டு வந்த மருத்துவர்கள் அதியமானைக் கண்டு அவனின் நிலை உடல்நிலைக் குறித்துக் கூறத் தொடங்கினர்.

"ஹாய் மிஸ்டர், உங்க தம்பியோட உடல்நிலை இப்போது க்ரிட்டிக்கல் ஸ்டேஜ் கடந்துவிட்டது, ஆனால் அவர் எழுந்து நடக்க எப்படியும் ஏழு எட்டு மாதங்கள் ஆகிவிடும். இனிவரும் காலங்கள் அவரை ஒரு குழந்தையைப் போலப் பாத்துக்கு வேண்டிவரும். அவருக்கு நன்றாக அடிபட்டு இருக்கு... ஆனால் விபத்து நடந்து நேரம் அவர் இருந்த மனநிலை ரொம்ப அழுத்ததைக்கொடுத்து இருக்கும் போல.. அதனால்தான் அந்நேரம் நடந்த சில விஷயங்கள் அவர் நினைவில் இல்லை... இந்த நினைவுகள் திரும்ப வருமா என்பது ரெண்டு மூணு நாளில் தான் தெரியும். அவர் முதலில் கண் விழிக்கட்டும்" என்றார் டாக்டர்.

"அவனை இப்போது போய்ப் பார்க்கலாமா டாக்டர்" என்ற அதியமானான் கேள்விக்கு...

" ஓ, தாராலமாகப் பார்க்கலாம் விபத்து நடந்த அன்றைய விஷயங்களைப் பற்று இப்போது எதுவும் கேட்காதீங்க, நிரந்திரமாக எல்லாம் மறக்க வாய்ப்பு இருக்கு,, அதனால் கவனமாகப் பேசுங்கள்" என்றார் டாக்டர்.

"அவனை எங்க ஊருக்கு நாங்கள் கூட்டிட்டுப் போக முடியுமா? டாக்டர் என்றவன் மேலும் "அவன் பாடிக் கண்டிஷனுக்கு டிராவல் பண்ண முடியுமா... இதை மட்டும் சொல்லுங்க... எவ்வளவு செலவானாலும் பரவாயில்லை " என்றான் அதியமான்.

"ஒன் வீக் இங்க அப்சர்வேஷனில் இருக்கட்டும் அதுக்கப்புறம் நீங்க கூட்டிட்டுப் போய்க்கலாம் இப்பொழுதுத் தான் ரெக்கவர் ஆகுறாரு, சோ நம்ம வெயிட் பண்ணுவோம்" என்றார் டாக்டர்.
டாக்டரின் கூற்றைக் கேட்டவன், தன் தாயிடம் வந்து விளக்கமாகக் கூறினான். ஆனால் எப்படி அவனுக்கு விபத்து நடந்தது என்பதை மட்டும் மறைத்து விட்டான் அதியமான்.

"ஒரு வாரம் நான் இங்கிருந்து அவனைப் பார்த்துக்கொள்கிறேன்... நீங்க ஊருக்குப் போங்களம்மா... அங்க போய் அவனுக்கு வேண்டியதெல்லாம் செஞ்சுவையுங்க... நான் அவனைக் கூட்டிட்டுச் சீக்கிரம் வந்துடுறேன். டாக்டர் இப்போ இருக்குற நிலையில ஒரு வாரம் சொல்றாரு... நான் அவரிடம் பேசிப் பார்க்கிறேன், இரண்டு மூணு நாளில் நம்ம ஊருக்கு ஷிப்ட் பண்ணிடலாம்" என்று தன் தாயிடம் கூறினான் அதியமான்.

நடந்தது எல்லாம் கேட்டவளுக்குப் பகிரென்றிருந்தது. தாரிகா இருக்கும் நிலை மற்றும் சதீஷ் கண் விழித்தாலும் அவன் நினைவுகள் திரும்ப வரும் என்பதையும் தீர்மானமாகச் சொல்ல முடியாது என்று சூழ்நிலையில், எதுவும் பண்ண முடியாமல் காலத்தின் கைகளில் வாழ்க்கையைக் கொடுப்பது, இங்கே துயரத்தின் உச்சமாக இருந்தது தாராவிற்கு.
அதனால் முடிவு எடுக்க வேண்டும் என்ற கட்டத்தில் வந்து நின்றாள் தாரா.


இரண்டு நாட்களாக அதிர்ச்சி மேல் அதிர்ச்சியாக அவளை இட்டு வாட்டியதினால் அவளுக்கு மனம் அமைதி அடைய வேண்டும் என்பது மிகவும் இன்றியமையாததாக இருந்தது. இப்பொழுது இருக்கும் சூழ்நிலையில் சிறிதுத் தனிமையும் தேவைப்பட்டது அவளுக்கு. அதனால் வேகமாக அங்கே இருக்கும் கேண்டினை நோக்கிச் செல்லத் திரும்பியவளைக் கவனித்தான் இனியன்.

யார் இந்தப் பெண் என்ற கேள்வியை அவன் மனதில் தோன்றியப்பொழுதுத் தான் அதியமான் தனக்குத் தந்த வேலையும் நினைவுக்கு வந்தது. அவளைப் பற்றி எல்லாம் விசாரித்தவனுக்கு இது தாராவாக இருக்குமோ என்று ஐயம் வந்தது. எனவே வேகமாக அவளைப் பின்தொடர்ந்தான்.

அப்பொழுதுத் தாரா, நளினிக்கு அழைத்து மருத்துவமனையில் நடந்தெல்லாம் கூறியவள், வந்து விடுகிறேன் சதீஷைப் பார்த்து விட்டேன் அவனுக்கு எந்த ஆபத்தும் இல்லை என்றத்தகவலைத் தாரிகாவிடம் சொல்லு என்றவளின் வார்த்தைகளை மட்டுமே கேட்ட இனியன் இது தாரா என்று முடிவு செய்திருந்தான்.

அதியமான் கூறியதில் இருந்து தாரிகா மற்றும் சதீஷின் காதலுக்குத் தடையாகத் தாரா இருப்பதாக முடிவுக்கு வந்தான் இனியன். அதாவது தாராதான் இவர்களின் காதலுக்கு மிகப்பெரிய எதிரி என்று எண்ணினான்... அவனுக்கு அவள் பேசியதெல்லாம் கேட்டதும் அப்படித் தான் தோன்றியது. எனவே இப்படியே விடக்கூடாது என்று மனதில் நினைத்தவன் வேகமாக அதியமானுக்கு அழைத்தான்.


நண்பர்கள் இருவருக்கும் இடையே தன்னைப் பற்றிய பேச்சுப் போய்க் கொண்டிருந்த அதே நேரம் தாரா அங்கே ஓரமாக இருக்கும் இருக்கையில், தனக்குச் சில்லென்றொரு பழரசத்தைச் சொன்னவள், வந்து அமர்ந்தாள். பத்து நிமிடத்திற்குப் பின் அவளுக்குக் குடிக்கப் பல ரசமும் வந்தது. அவள் மூளையின் சூட்டைத் தணிப்பதற்கு இந்தக் குளிர்ந்த பாணம் தேவையாக இருந்தது.

அதை மெல்லக் குடித்தவளுக்கு மனமும் மூளையும் அமைதி அடைந்தது. காலையில் தாரிகாவிடம் சொன்னவைத் தான் இந்தச் சூழ்நிலைக்குச் சரியாக இருக்கும் , அதைத்தான் பின்பற்ற வேண்டும். எட்டு மாதம் என்பது கூடுதலாகவும் ஆகலாம்... இல்லையென்றால் குறைவாகவும் ஆகலாம். சதீஷின் உடல்நிலையின் முன்னேறெறம் நம் கையில் இல்லை என்பது அவளுக்குத் தெளிவாகப் புரிந்தது. தாரிகாவைத் தைரியப்படுத்த வேண்டும் என்பது மட்டுமே அவள் மனதில் ஆழமாகப் பதிந்திருந்தது.

நாம் நினைப்பதெல்லாம் நடந்துவிட்டால் வாழ்க்கையில் சுவாரிஸயம் போய்விடும். நடக்கப்போவது எதுவாகிருந்தாலும் இனி எதுவும் தாராவின் கைகளில் இல்லை அதை மாற்றி அமைக்க வந்து கொண்டிருக்கிறான் அதியமான்…

தொடரும்…
 
Top