எங்கள் தளத்தில் எழுத விரும்பும் எழுத்தாளர்கள் எங்களை கீழ் உள்ள மின்னஞ்சலில் தொடர்ப்புக்கொள்ளவும் நன்றி Email ID - narumugai.ink@gmail.com

சுயம் நோக்கு

admin

Administrator
Staff member
நான்
என்
எனது

நீ
நீங்கள்

நாம்
நாங்கள்
எங்கள்

எனதான்
தன்னலம்
முதல்
பொதுநலம்
வரை

தனி மனிதன்
முதல்
குடும்பம்
சமுதாயம்
வரை

என
அமைப்பு
உள்ளது

ஆதலால்
சுயம்
நோக்கு

உன்
அகத்தின்
அழகு
நல்லெணணங்களாலும்

உன்
ஆத்மாவின்
அழகு
இறை
நம்பிக்கையாலும்

உன்னுள்
உரத்த
குரலாய்
உன்
மனசாட்சி
குரலாய்
கேட்டு

சுயம்
நோக்கி
உணர்ந்து
நீ
வாழும் போது

வாழ்க்கை
வெற்றியானது
மட்டுமல்ல

மகிழ்ச்சியாக
அர்த்தமானதாக
இருக்கும்

ஒவ்வொருவரின்
சுயமும்
தெளிவடைந்து
உள்ளே ஸ்வருபமாய்
மேன்மையானால்

எல்லாம் சேர்ந்து
விஸ்வருபமாய்
உலகம்
பிரபஞ்சம்
மேன்மையுறும்

புறஉலகின்
அளவிடுகளில்
சிக்காமல்
சுயம்
நோக்கி தேடி
தெளிவோம்!!

- புவனகுமாரி
 
Top