எங்கள் தளத்தில் எழுத விரும்பும் எழுத்தாளர்கள் எங்களை கீழ் உள்ள மின்னஞ்சலில் தொடர்ப்புக்கொள்ளவும் நன்றி Email ID - narumugai.ink@gmail.com

பெண்மையே பேசு - கவி சொல் போட்டி

Sriraj

Moderator
நறுமுகை கவிசொல் போட்டி


பெண்மையே பேசு


யுக யுகங்களாய் கற்றவர் கல்லாதவர் யாவரும் கூறும் பிரித்தறியா முடியா புதிரவள் என பலர் கூற..
புற அழகை கண்டு
அக அழகை துச்சமென காணும் உலகில்..
தன்னக்கென்று ஒரு அடையாளத்தை உருவாக்கினாளோ?
ஆணின் இச்சைக்கு மட்டும் என படைக்கப்பட்டவளா அவள்..
ஏன் அவளுக்கு என்று ஆசைகள் கனவுகள் இருக்க கூடாதோ?
இருந்தால் அகங்காரத்தின் வடிவம் அவள் என கூறுமோ உற்றமும், சுற்றமும்..
பெண்ணே நீ முன்னெறி செல்வாயாக..
அனைவரின் கேலி பேச்சை கடந்து உனக்கென பாதை அமைத்து நீ முன்சென்று உனக்காக பேசுவாயாக..
உன்னை இகழ்வாய் பேசும் உலகிற்கு
உந்தன் அருமையை புரியவைப்பாயாக..
உனக்காக பேச எவரும் இல்லை என்றாலும் சரி..
உனக்காக பேசிட நீ இருக்கிறாய் என நினைவில் கொள்..
உரக்க பேசு பெண்மையை இகழ்வாய் பேசும் அறிவிலியர்களுக்கு உந்தன் செயலால் பேசிட செய்..
பெண்ணாய் நிமிர்ந்து நில்
பாரதி கண்ட புதுமை பெண்ணாய் திறம் கொண்டு வாழ்!!

- நல்லிசை நாச்சியார்

 
Top