எங்கள் தளத்தில் எழுத விரும்பும் எழுத்தாளர்கள் எங்களை கீழ் உள்ள மின்னஞ்சலில் தொடர்ப்புக்கொள்ளவும் நன்றி Email ID - narumugai.ink@gmail.com

எல்லையற்ற காதலே

தீக்குள்ளும் விரல் வைக்கத் தோன்றுவது போலே உன்
அனல் வார்த்தைகளை அள்ளிச்சூடவும் ஆவல் உண்டாகிறதே உன் காதலாலே!

இலக்கின்றி அலைந்த கால்கள் நிழல்நாடி ஓய்வது போலே உன்
இதயக்கூட்டில் அமிழ்ந்திடவே ஆசை பிறக்குதே உன் காதலாலே!

நித்தம் நித்தம் சண்டைகள் பல போட்டாலும் சத்தமின்றி உன்
தோள்வளைவில் புதைந்திடுகையில் நிச்சலனமாய் சொர்க்கம் காணுதே உன் காதலாலே!

மூடுபனி போல் மூடிக் கிடந்தாலும் உள்ளுயிர்க்கும் ஒவ்வொரு ஆசையையும் நீ
மீட்டு மெருகிடுகையில் விழியோரம் கசியுதே உன் காதலாலே!

என்னவனே..! என் இதயக்கடலில் நீ கலந்த நாள் முதலாய்
அலையாடும் கடலாய் நானும் பொங்கிப் பெருகுகிறேனே எல்லையற்ற உன் காதலாலே....!

வார்த்தைகளில் அல்ல காதல்
வாழ்வதில்தான் காதலென
வாழ்ந்திடும் உன்னைக் காதலிக்கிறேன் நானும்!!
அந்த எல்லையற்ற வானம் போலே!!!???
 
Fa.Shafana

Moderator

Superb one ????
 
Top