எங்கள் தளத்தில் எழுத விரும்பும் எழுத்தாளர்கள் எங்களை கீழ் உள்ள மின்னஞ்சலில் தொடர்ப்புக்கொள்ளவும் நன்றி Email ID - narumugai.ink@gmail.com

பா. ஷபானாவின் சிறுகதைகள் - 02

Fa.Shafana

Moderator
"குட் மார்னிங் செல்லக் குட்டி!!
மேனி மோர் ஹாப்பி ரிடர்ன்ஸ் ஆஃப் த டே, ஹாப்பி பர்த்டே அம்மு!!"

"தேங்க்யூம்மா!!"


"இந்தா என் கிப்ட்
சீக்கிரம் ரெடியாகி வா, கோயிலுக்குப் போகணும்"


"சரிம்மா.. இதோ வர்றேன்.."

அந்த வீட்டின் தேவதை அம்ரிதாவின் பதின்மூன்றாவது பிறந்தநாள் அன்று.

"அம்மு அண்ணா அண்ணிய கும்பிட்டு ஆசீர்வாதம் வாங்கு டா"

பூகம்பம் வெடித்தது இந்த வார்த்தையில்

"முடியாதும்மா நான் கும்புட மாட்டேன்..எனக்கு அவங்க ஆசீர்வாதம் தேவையேயில்லை"


"அப்பிடி சொல்லலாமா நீ?"

"உனக்கு அண்ணா, அண்ணி தான் ஆனா எனக்கு அவங்க யாருன்னே தெரியாதும்மா…"

"இப்பிடி நீ பேசுவன்னு தெரிஞ்சிருந்தா நான், உன்கிட்ட ஒன்னுமே சொல்லாம இருந்திருப்பேன்"

"பிளீஸ்மா.. என்னை ஹர்ட் பண்ணாத. உன்ன விட எனக்கு வேற யாரும் முக்கியமில்ல"

"ஓகே.. ஓகே.. நான் ஒன்னுமே சொல்லல்ல.
வா கோயிலுக்கு போகலாம்"

சாமி கும்பிட்டுவிட்டு கோயில் பின்னால் இருந்த குளக்கரைக்கு வந்து படிக்கட்டில் உட்கார்ந்து மீன்களுக்கு பொறி போட்டுக் கொண்டிருந்தவர்களுக்கு
"மதுமதி"
என்ற சத்தம் கேட்டு திரும்பிப் பார்க்க, அவர்களைப் பார்த்து புன்னகைத்தபடி நின்றிருந்தார் சரளா.

"ஆன்டி எப்பிடி இருக்கீங்க?
எவ்ளோ நாளாச்சு உங்களப் பார்த்து.
இங்கேயா இருக்கீங்க நீங்க?
நான் உங்கள இங்க பார்த்ததே இல்லையே!"
சந்தோஷம் துள்ளிக் குதித்தது அவள் குரலில்.

"கொஞ்சம் மூச்சு விடு மதுமதி
நான் இங்க வந்து ஆறு மாசமாச்சு
அன்னைக்கு ஒருநாள் உன்ன இங்க பார்த்து பேச வந்தேன் அதுக்குள்ள நீ போய்ட்ட"

"யாரும்மா இவங்க?"

"இவங்க சரளா ஆன்டி,
ஊர்ல பாட்டி வீட்டுக்கு பக்கத்து வீட்ல இருந்தாங்கடா.

"ஆன்டி இவ என் பொண்ணு அம்ரிதா, இன்னைக்கு இவளுக்கு பர்த்டே,

அம்மு ஆசீர்வாதம் வாங்கிக்கடா.."

சொல்லி முடிய சட்டென்று காலில் விழுந்தவள்
மனம் நிறைந்த வாழ்த்துக்கள் பெற்று எழுந்தாள்.

"அப்புறம் நீ என்ன பண்ற மதுமதி, அம்மா எப்பிடி இருக்காங்க?"

"அம்மா இல்ல ஆன்டி"
கண் கலங்கியது.

"ச்சு..
நல்லா நாள் அதுவுமா அழாதம்மா"

"நாலு வருஷமாச்சு அவங்க தவறி
நான் இங்க ஒரு கம்பெனி வர்க் பண்றேன்.
இன்னைக்கு இவளுக்காக லீவ் போட்டுட்டேன். மேடம் கூட ஸ்கூல் கட் பண்ணிட்டாங்க..
இங்க யார் கூட வந்தீங்க ஆன்டி? வாங்க எங்க வீட்டுக்கு போகலாம்"

"ட்ரைவர் கூடத் தான் வந்தேன்.
உன் வீட்டுக்கு வேற ஒருநாள் வர்றேன் மா
உன் ஃபோன் நம்பர் குடு நாம அடிக்கடி பேசிக்கலாம்"

எண்கள் பரிமாறப்பட
விடை பெற்றுக் கொண்டார்கள்.

சில வாரங்களின் பின், மீண்டும் ஒரு சந்திப்பு மதுமதியை தன் வீட்டுக்கே அழைத்துச் சென்றுவிட்டார் சரளா.

ஆற அமர உட்கார்ந்து பேச ஆரம்பிக்க, அவளின் கணவனை விசாரித்து நின்றது பேச்சு.

"அது வந்து ஆன்டி, நான் கல்.. கல்யாணம் பண்ணிக்கல்ல"

அதிர்ச்சியாகி அவள் முகம் பார்த்தவர்
"என்ன சொல்ற?
அப்போ அம்ரிதா?"

"அம்மு என் அண்ணன் பொண்ணு.
நான் காலேஜ் லாஸ்ட் இயர் படிக்கும் போது ஒரு நாள்
அண்ணாவுக்கு ஆக்ஸிடெண்ட்னு அவங்க ஃப்ரெண்ட்டு கிட்ட இருந்து கால் வந்துச்சி.
நானும் அம்மாவும் ஹாஸ்பிடல் போகும் போது அண்ணா இறந்துட்டாங்க.
அண்ணியும் அம்முவும் ஐசியுல இருந்தாங்க.
ரெண்டு நாள் கழிச்சு அண்ணியும் இறந்துட்டாங்க.
ஆக்ஸிடெண்ட் நடந்து ஆறு நாள்ல தான் அம்மு கண் முழிச்சா. அப்போ அவளுக்கு எட்டு வயசு. பழைய ஞாபகங்கள் ஒண்ணும் இல்லாம தான் இருந்தா இப்போ கூட அப்பிடி தான் இருக்கா"


கண்ணீர் வழிய துடைத்துக் கொண்டாள்,
ஆதரவாக அவள் கரம் பற்றிக் கொண்டார் சரளா.

"அண்ணா இறந்த அடுத்த வருஷம் அம்மாவும் இறந்துட்டாங்க.
கொஞ்சம் வளர்ந்ததும் உண்மைய சொல்லலாம்னு நினைச்சு, நான் தான் அவளோட அம்மான்னு சொல்லி இருந்தேன்.
ஆனா ரெண்டு வருஷத்துக்கு முன்ன ஒருநாள் என் அப்பா எங்கேன்னு கேட்டு அடம்பிடிச்சு சண்ட போட்டா.
உண்மைய சொல்லிட்டேன்.
பார்ட்டி ஒண்ணுக்கு போய் வரும் போது தான் ஆக்ஸிடெண்ட்,
அண்ணா அண்ணி ரெண்டு பேரும் ட்ரிங் பண்ணியிருந்தாங்க.

அண்ணாவோட ஃப்ரெண்ட் ரொம்ப நாள் கழிச்சி ஒரு நாள் இதப் பத்தி பேசினப்போ அம்மு பக்கத்துல இருந்து கேட்டுட்டு இருந்தா.
சோ பொண்ண வெச்சுட்டு குடிச்சதும் இல்லாம ஆக்ஸிடெண்ட்டும் நடந்து இருக்குனு
அவங்க மேல அவளுக்கு கோவம்.
அப்புறம் அவங்க தான் பேரன்ட்ஸ்னு சொல்லவும் ஒத்துக்கவே இல்ல" என்ற மதுமதியிடம்

"நாங்க அந்த ஊர விட்டு போய் கொஞ்ச நாள்ல அங்க வந்து பார்த்தா
நீங்க யாரும் இல்ல.
பக்கத்துல இருந்தவங்க நீங்க வீட்ட காலி பண்ணிட்டதா சொன்னாங்க.."
சரளா சொல்ல,

"ஆமா ஆன்டி,
அம்மா தான் அங்க வேணாம் இங்கயே அண்ணா வீட்ல இருப்போம்ன்னு சொல்லி அந்த வீட்ட வித்தாங்க.
கடைசில அவங்களும் இல்ல. அண்ணா இறந்ததுல இருந்து ரொம்ப சோர்ந்து போய்ட்டாங்க.
அத யோசிச்சு யோசிச்சு ஹார்ட் அட்டாக் வந்திருச்சு"

"அண்ணி ஃபேமிலி?"

"அவங்களுக்கு யாரும் இல்ல ஆன்டி. ஆசிரமத்தில வளர்ந்தவங்க அண்ணா லவ் பண்ணி கல்யாணம் பண்ணாங்க"

"நாங்க கூட நீ எங்கேயாவது நல்லா இருப்பன்னு நினைச்சோம்டா ஆனா எல்லாம் தலைகீழா நடந்திருக்கு"

"என்ன பண்றது ஆன்டி, ஆனா நான் சந்தோஷமா இருக்கேன்"

"கல்யாணம் ஒன்னு பண்ணத் தோனவே இல்லையா?"

"இல்ல ஆன்டி.
என் எண்ணம் எல்லாமே அம்மு மட்டும் தான்.
அவள நல்லா படிக்க வைக்கணும், நல்லபடியா பார்த்துக்கணும்னு
அவள சுத்தியே தான் என் உலகம் இருக்கு. என் உலகமா அவ தான் இருக்கா"

"உன்ன நினைச்சா ரொம்ப பெருமையா இருக்கு மதுமதி. பிளீஸ் உன் அம்முவ ஸ்கூல் விட்டு இங்க வர சொல்றியா அவகூட இருந்துட்டு கொஞ்சம் லேட்டாகிப் போ.
நம்ம ட்ரைவர அனுப்பி கூட்டிட்டு வர சொல்லலாம்.
ட்ரைவர் ரொம்ப நம்பிக்கையானவர் தான்"

"இருங்க ஆன்டி அவளுக்கு ஸ்கூல் விடுற டைம் தான் கேட்டு பார்க்குறேன்"

"ஹலோ.."

"ஹலோ மேடம்.. நான் மதுமதி பேசறேன் அம்ரிதா கிட்ட கொஞ்சம் பேச முடியுமா?"

"ஓகே வெயிட் பண்ணுங்க நான் கொடுக்குறேன்.
அம்ரிதா, உனக்கு ஃபோன் அம்மா லைன்ல இருக்காங்க வெளிய போய் பேசிட்டு வாம்மா"

"ம்மா.."

"அம்மு.. அன்னைக்கு கோயில்ல மீட் பண்ணோம்ல சரளா ஆன்டி. அவங்க வீட்ல தான் நான் இருக்கேன்.
நீயும் இங்க வர்றியா?
அவங்க ட்ரைவர அனுப்புறேன்னு சொல்றாங்க"

"ஓகே ம்மா..
அன்னைக்கு கோயில்ல பார்த்த அந்த ட்ரைவர் அங்கிள் தானா?"

"ஆமாடா அவர் தான்.
வந்துடுவ தானே?"


"ஹ்ம்ம்.. வர்றேன் கார்ல ஏறி அந்த அங்கிள் ஃபோன்ல இருந்து கால் பண்றேன்"

"ஓகே டா.. டேக் கேர்" என்று அழைப்பைத் துண்டித்து விட்டு

"வர்றேன்னு சொல்லிட்டா ஆன்டி"

"இரு நான் ட்ரைவர் கிட்ட சொல்லிட்டு வர்றேன்"

"இந்தாங்கம்மா ட்ரைவர் லைன்ல இருக்கார் பேசுங்க"

தன் முதுகுப் பக்கம் கேட்ட குரலில் அதிர்ச்சியடைந்தவள்
எழுந்து நின்று திரும்பிப் பார்க்க.

'அவன் தான் அவனே தான்'
நீண்ட நெடிய ஆறு வருடங்களின் பின் பார்க்கிறாள்.
என்னவென்று தெரியாத ஒரு மனநிலையில் அவள் நின்றிருக்க,

பேசி முடித்த சரளா தான்
"என்ன மதுமதி அப்பிடி பார்க்குற?
என் புள்ள சதீஷ் தான்"

"இல்ல.. நான் இவர் இங்க இருப்பார்ன்னு நினைக்கவே இல்ல.
அதான்"

"அதுவும் சரி தான் இவன் ஊரு விட்டு ஊரு ஓடிட்டே தானே இருப்பான்?
ஆனா இப்போ அப்பிடி இல்லமா"

"எப்பிடி இருக்கீங்க?"

"நல்லா இருக்கேன்"

அடுத்து என்ன பேசவென்று தெரியவில்லை அவளுக்கு.

ஒளிந்து கொண்ட நினைவுகள் வெளிவர,
சரளமாக பேசிய வார்த்தைகள் ஒளிந்து கொண்டன.

"உட்காரு"
சொல்லிவிட்டு
அவனும் உட்கார்ந்தான்.

"நான் வெளிய வந்தா இப்பிடி தான் பேசாம இருப்ப அதான் நான் ரூம்லயே இருந்தேன்"

"இ.. இல்ல அது.. வந்து"
வார்த்தைகள் தந்தியடிக்க,

"ஹேய் ரிலாக்ஸ்..
என்ன வர்க் பண்ற இப்போ?"

"நான் இங்க எ‌ஸ் எ‌ம் கம்பெனில தான் அசிஸ்டென்ட் மேனேஜரா வர்க் பண்றேன்"

"ஓஹ் குட்"
ஒரு ஆச்சரியம் கலந்த பார்வையுடன் சொன்னான்.
"எவ்ளோ நாள் அந்த கம்பெனில வர்க் பண்ற நீ?"

"ஃபர்ஸ்ட் அப்பாயின்மென்ட் அங்க தான். நல்ல சம்பளம் அண்ட் ப்ரமோஷன் எல்லாம் கிடைச்சது சோ அங்கேயே வர்க் கன்டினியூ பண்றேன். ஆனா இப்போ சிக்ஸ் மந்த்துக்கு முன்ன கம்பெனி கைமாறி இருக்கு யாருக்குன்னு தெரில"


சரளா சொல்ல வந்தது தடைப்பட்டது

"உங்க ஃபேமிலி?"
என்று அவள்
எழுப்பிய வினாவில்.

இல்லை என்ற தலையசைப்பு அவனிடத்தில் விடையாக.

புரியாமல் விழித்தவள்
சரளா பக்கம் திரும்ப,

"அவன் கல்யாணம் பண்ணிக்கல்ல மதுமிதா"

"ஏன்?"
அவன் பக்கம் மீண்டும் திரும்பினாள்.

"அவனுக்கு ஒரு பொண்ண பிடிச்சிருக்குன்னு சொன்னான்"

"யாரு ஆன்டி, அது?"

"நீ தான் மது"

அவன் சொல்ல அதிர்ந்தவள் சரளாவைப் பார்க்க,

"ஆமாம்மா.
அதுக்குத் தான் உங்க வீட்டுக்கு வந்தோம் ஆனா நீங்க அங்க இல்ல.
காண்டாக்ட் நம்பர் கூட இல்ல.
கொஞ்ச நாள் உன்ன இவன் தேடினான்.
அதுக்கப்புறம் ஒரு ஆக்ஸிடெண்ட் ஆறு மாசம் பெட்ல தான் இருந்தான்.
எழுந்து நடமாடத் தொடங்கியவன்
அதுக்கப்புறம் உன்னப் பத்திப் பேசவேயில்ல.
நானே ஒருநாள் கேட்டேன்,
அதுக்கும் வேணாம்னு சொல்லிட்டான்.
வேற பொண்ணு பார்க்கவும் விடல்ல"

ஏன் என்ற கேள்வி தாங்கி அவனைப் பார்க்க,
அவன் சரளாவைப் பார்த்து வைத்தான்.
குறிப்பறிந்து அவர் எழுந்து
தன் கைபேசியில் ஓட்டுநருடன் பேசிக் கொண்டே சமையலறைக்குள் சென்றார்.

"அந்த ஆக்ஸிடெண்ட் என் லைஃப்ப தலைகீழா மாத்திடுச்சு மது.
எனக்கு கல்யாணம் பண்ண தகுதி இல்லைன்னு டாக்டர் சொல்லிட்டான்.
அதுக்கப்புறம் எதுக்கு உன்னத் தேடணும் எங்கேயாவது நீ சந்தோஷமா, நல்லா இருந்தா போதும்னு நினைச்சுட்டு இருந்தேன்.

ஆனா நீ இங்க தான் இருக்கன்னு அம்மா சொல்லவும் உன்ன ஒரு தடவையாவது பார்க்கணும்னு ஆசையா இருந்திச்சு.
ஆனா இப்போ நீ பேசினத கேட்டு தப்புப் பண்ணிட்டேன்னு ஃபீல் ஆகுது.
நீ தனியா தவிச்சப்ப துணையா நான் இருந்திருக்கணும். திரும்ப
உன்கூட நானும் இருக்க.."


பேசிக் கொண்டிருந்தவன் மொழி மறந்து எழுந்து நின்றுவிட்டான்,

வாசலில் கேட்ட
"அப்பா"
என்ற கூக்குரலில்.

என்ன என்று உணர முன்பு
பாய்ந்து வந்து அவனைக் அணைத்துப் பிடித்திருந்தாள் அம்ரிதா.
தானாக அவனும் அணைத்துக் கொண்டான்.

கையில் இருந்த பாத்திரத்தை அப்படியே கீழே போட்ட சரளா ஓடி வந்திருந்தார் அம்ரிதாவின் குரலில்.

தன்னைச் சுற்றி நடந்த எதையும் உணர்ந்து கொள்ள முடியாது சில வினாடிகள் ஸ்தம்பித்து நின்ற மதுமிதா,

"ஹேய் அம்மு என்ன பண்ற நீ?
அவர விடுடா.
அவர் உன் அப்பா இல்ல"
சொன்னவள் அவளைத் தன் பக்கம் இழுக்க,

"முடியாது வரமாட்டேன்.
நீ இவ்ளோ நாள் பொய் சொன்ன சரி, ஆனா இப்போ கண் முன்னாடி அப்பா இருக்கும் போது இல்லைன்னு சொல்ற.
இவர் தான் என் அப்பான்னு எனக்கு தெரியும்" என்றவளது

அணைப்பு இறுகியது.

"என்னடா சொல்ற?
அதான் நான் உண்மைய சொன்னேன்ல"

"நான் அத நம்பவே இல்லயே" சொன்னவள்
அவனை விட்டு நீங்கி,
ஓடிப் போய் தன் புத்தகப்பையைத் திறந்து அதிலிருந்து ஒரு குறிப்பேட்டை எடுத்து அதற்குள் இருந்து சதீஷின் புகைப்படத்தை எடுத்து,

"இதோ பாரு உன் ஆல்பத்தில இருந்து நான் எடுத்த அப்பாவோட படம்"

உயர் அழுத்த மின்சாரம் பாய்ந்த உணர்வு மதுமிதாவிற்கு.

"இது எப்பிடி உனக்கு கிடைச்சது?"

"ஒருநாள் உன் கப்போர்ட்ல ட்ரெஸ் வைக்கும் போது அந்த ஆல்பத்த பாத்தேன்.
எடுத்து பாத்தா உன்னோட ஒரு படமும் இதுவும் மட்டும் தான் அதுல இருந்துச்சு.
இது அப்பான்னு தெரியும் அதான் உங்கிட்ட அப்பா எங்கேன்னு கேட்டு சண்ட போட்டேன். நீ தான் கதை கதையா சொல்லி சமாளிச்ச. அதெல்லாம் நான் நம்பவேயில்ல
இவர் தான் என் அப்பா, நீங்க சண்ட போட்டு பிரிஞ்சி இருக்கீங்க, எப்போவாவது என் அப்பாவ மீட் பண்ணுவேன்னு நம்பிக்கையோட இருந்தேன்.
இன்னைக்கு அது நடந்திருக்கு"

"இல்லடா நான் சொல்றதக் கேளு"

"அப்பா பாருங்கப்பா
திரும்ப எஏதாவது பொய் சொல்ல போறாங்க.
பாட்டி நீங்களாச்சும் சொல்லுங்க"


சரளாவின் பக்கம் பார்வை ஓடியது சின்னவளுக்கு.

உள்ளம் குளிர்ந்து விட்டது அவருக்கு.

"ரிலாக்ஸ் அம்மு"
சொன்னவன்,

"இப்போ நீ சொல்லு மது எப்பிடி என் ஃபோட்டோ உங்கிட்ட?"

ஆழ்ந்து பார்த்துக் கேட்க,

"அது நீங்க ஊர்ல இருக்கும் போது உங்க வீட்டுல இருந்து எடுத்தேன்"
தடுமாறி வந்து விழுந்தன வார்த்தைகள்.

"அப்போ நீயும் என்ன விரும்பியிருக்க ஆனா என் கிட்ட சொல்லல்ல.
ஏன் மது சொல்லி இருக்கலாம்ல?"

"இல்ல சொல்றதுக்கு சந்தர்ப்பம் அமையல்ல.
அப்போ நான் காலேஜ்ல படிச்சிட்டு தான் இருந்தேன்.
கொஞ்ச நாள் கழிச்சு உங்க கிட்ட பேசலாம்ன்னு இருந்தேன். ஆனா இடைல என்னவோ எல்லாம் நடந்து அந்த எண்ணமே என் மனசுல இல்ல.
இந்த ஃபோட்டோவக் கூட நான் மறந்துட்டேன்.
ஆனா இவ அத எடுத்து வெச்சிருந்திருக்கா"

சொல்லி முடித்து தயக்கத்துடன் சரளாவின் முகம் பார்க்க,
முகம் மலர்ந்து புன்னகைத்தார் அவர்.

"நமக்கானது எப்பவாவது நம் கை வந்து சேரும் மதுமதி"

"ஆனா ஆன்டி,
நான் எப்பிடி இப்போ?"

"இது தான் உங்களுக்கான நேரம். வேற ஒண்ணும் தேவையில்ல
அம்முவ கொஞ்சம் பாரு.
தான் நினைச்ச மாதிரி அப்பா கிடைச்சிட்டார்ன்னு எவ்வளவு சந்தோஷம் அவ முகத்துல?
அத பொய்யாக்கி அவள கஷ்டப்படுத்த போறியா?"

பதில் சொல்லத்
தெரியாது விழித்தவள்,
"எனக்கு கொஞ்சம் டைம் வேணும். நான் யோசிக்கணும் ஆன்டி"

"ஓகே.. எப்போ கல்யாணம் பண்ணிக்கலாம்ன்னு டேட்ட மட்டும் யோசி
வேற ஒண்ணும் வீணா யோசிச்சி டைம் வேஸ்ட் பண்ணாத"

என்ன நடந்திருக்கும் என்று புரிந்து கொண்ட அம்ரிதாவோ,

"அதுவும் தேவையில்லப்பா
நெக்ஸ்ட் வீக் அம்மாவோட பர்த்டே வருது அதே டேட் கல்யாணத்துக்கு பிக்ஸ் பண்ணிடலாம்.
அப்போ நாம ரெண்டு ஸ்பெஷல் டேஸ் ஒரே கிப்ட்ல சமாளிக்கலாம்"


சொன்னவள் சிரிக்க,


"வாலு பொண்ணு நீ"
என்று அவள் உச்சி முகர்ந்த சரளா,

"நான் காப்பி போட்டுட்டு வர்றேன், நீங்க பேசிட்டு இருங்க. ஒன்னும் யோசிக்காத மதுமதி.
எல்லாம் நல்லதே நடக்கும்"
சொல்லிச் சென்றார்.

"அம்மு நீ படிச்சி முடிய
என்ன ஜாப் செய்ய ஆசப்படுற?"
அவன் கேட்டு வைக்க,

"பெரிய கம்பெனி ஒன்னுல எம்டியா இருக்கணும்.
எல்லார்கிட்டேயும் சுத்தி சுத்தி வேல வாங்கணும்"

சொல்லி கலகலவென சிரித்தாள்.

'நான் என்னவோல்லாம் யோசிக்கறேன்.
இவங்க ரெண்டு பேரும் சேர்ந்து என்ன பேசிட்டு இருக்காங்க?'

யோசித்தவளுக்கு அடுத்த அதிர்வு.

"அப்போ எஸ் எம் கம்பெனி நேம்ம, எஸ் எம் ஏன்னு சேஞ்ச் பண்ணிடலாம்"
என அதிரடியாக அவன் சொன்னது கேட்டு,

"என்ன சொல்றீங்க நீங்க?"

"நீ வர்க் பண்ற கம்பெனி ஆறு மாசத்துக்கு முன்ன என்கிட்ட தான் கைமாறிச்சின்னு சொல்றேன்"

"ஆனா நான் உங்கள பார்த்ததே இல்லையே"

"அவன் எங்க மதுமதி ஆபீஸ் போனான்? எ‌ல்லா‌ம் வீட்டுல இருந்தே தான் செய்வான்.
அவனோட பீ ஏவும் மேனேஜரும் தான் கம்பெனிக்கும் வீட்டுக்கும் அல்லாடுவாங்க"
காப்பியைப் பரிமாறிக் கொண்டே சராமரியாக திட்டினார் அவனை.

"ஆமா..
மேனேஜர் சொல்லி இருக்கார் தான்.
அது நீங்க தானா?
நான் கூட உங்கள திட்டி இருக்கேன். கம்பெனிய எடுத்தா மட்டும் போதுமா அத கவனிக்க வேணாமான்னு"

"அங்க இருக்க பிடிக்கவேயில்ல எனக்கு. இங்க வரவே தான் மனசுல ஒரு உந்துதல், சோ அங்க இருந்த கம்பெனிய என் ஃப்ரெண்ட்டுக்குக் கொடுத்துட்டு இத எடுத்தேன். அம்மா நேம் அண்ட் உன் நேம்ல ஃபர்ஸ்ட் லெட்டர் யூஸ் பண்ணி கம்பெனி நேம் வெச்சேன்.
நீ வேற கல்யாணம் பண்ணி இருந்தா
உன்ன நினைக்கிறதே தப்புத் தானேன்னு ஒரு எண்ணம் வரும் தான் ஆனா என்னால, உன்ன நினைக்காம இருக்கவும் முடியாது.
பெயர் வெச்சதோட சரி
ஏனோ தானோன்னு இருப்பேன். கம்பனிப் பக்கமும் போகமாட்டேன்.
டெய்லி அம்மாகிட்ட திட்டும் வாங்குவேன்.
ஆனா ஒருநாள் நான் ஆபீஸ் வந்தேன்,
ஸ்டாப் எல்லாரையும் மீட் பண்ணேன்.
ரெண்டு மூனு பேர் லீவ்ன்னு மிஸ்ஸானாங்க"
யோசனையாக அவன் சொல்ல,

"ஆமா அம்முவுக்கு உடம்பு சரியில்லாம வன் வீக் லீவ்ல இருந்தேன்.
திரும்ப ஆபீஸ் போனப்போ நீங்க வந்தத சொன்னாங்க"

"இதுவர ஒரு பிடிப்பில்லாத லைஃப்.
ஆனா இப்போ தான் நீங்க இருக்கீங்களே, இதுக்கப்புறம் தீயா வேலை செஞ்சு கம்பெனிய டெவலப் பண்ணி என் பொண்ணு கைல கொடுக்குறேன் பாரு"

உற்சாகத்துடன் சொன்னவன்
காப்பியைக் குடிக்க,
அவனையே விழியெடுக்காது பார்த்திருந்தாள் மதுமதி.

அடுத்த வாரம் மதுமதியின் பிறந்தநாளன்று
கோவிலில் வைத்து தாலி கட்டியவனை அணைத்துக் கொண்ட அம்ரிதாவின்
முகம் எல்லையில்லா மகிழ்ச்சியை
வெளிப்படுத்தியது.

"என்னோட மனசுல இருந்த நம்பிக்கை தான்ப்பா உங்கள அங்க இருக்க விடாம‌ இங்க வர வைச்சிருக்கு"

நிறைவான புன்னகையுடன் சின்னவள் சொல்ல
நிறைந்து விட்டது கண்ணீர் மற்ற மூவரின் கண்களிலும்.
 

Fa.Shafana

Moderator
Last edited:
பொக்கிஷம் நீ....
பெட்டகம் நான்.....

நினைவில் தொலைத்து
நிஜத்தில் பெற்று
நிம்மதியாய் இன்று ....
நம் காதல்💕💕💕💕💕.....

திருமணம் முன்
தாயாய் நீ மாறிட
தந்தையாய் நான் இன்று மாற
தம்பதிகளாய் நம்மை மாற்றிட
தேவதையாய் வந்தாள்.... அம்மு 🤩
தவமாய் தவமிருந்த நம் காதலை
தடையில்லாமல் சேர்த்து வைத்த
தங்கத் தாமரை _ என் மகள்..... 💐💐💐
 

Fa.Shafana

Moderator
பொக்கிஷம் நீ....
பெட்டகம் நான்.....

நினைவில் தொலைத்து
நிஜத்தில் பெற்று
நிம்மதியாய் இன்று ....
நம் காதல்💕💕💕💕💕.....

திருமணம் முன்
தாயாய் நீ மாறிட
தந்தையாய் நான் இன்று மாற
தம்பதிகளாய் நம்மை மாற்றிட
தேவதையாய் வந்தாள்.... அம்மு 🤩
தவமாய் தவமிருந்த நம் காதலை
தடையில்லாமல் சேர்த்து வைத்த
தங்கத் தாமரை _ என் மகள்..... 💐💐💐
Wow.. என்ன அழகான வரிகள்!
நன்றிகளும் அன்புகளும் சகோதரியே! ❤️
 
Top