எங்கள் தளத்தில் எழுத விரும்பும் எழுத்தாளர்கள் எங்களை கீழ் உள்ள மின்னஞ்சலில் தொடர்ப்புக்கொள்ளவும் நன்றி Email ID - narumugai.ink@gmail.com

மௌனப் பெருவெளி

மௌனப் பரிபாஷை கொண்டு
உலகையும் வெல்லலாம்...
உயிரையும் கொல்லலாம்....

மௌனப் பெருவெளியில் தொலைந்து போவதும் சுகமே...
பிறர் தொலைய தேடுவதும் சுகமே...
வலியில்லா பிரசவங்கள் இயலாதது போலவே
இந்த மௌனப் பெருவெளியில் வலித்து பிரசவிக்கும் வார்த்தைகளும் சுகமே....!

ஏகாந்த தருணங்களில் இனிமையான இசையாகும்...
அனாதரவான நிலையில் அச்சப்படுத்தும் மாயையாகும்....
மனம் அலைகடலாகும் போது
அமைதிப்படுத்தும் ஆசானாகும்...
சந்தோஷ சரவெடிகளில்
மின்னிமறையும் புன்னகையாகும்....
சூழ்நிலை
பிரளயமாகவும் தோன்றும்...
ஆழ்கடலின் அமைதியாகவும் மாறும்...
எல்லாமே சாத்தியம்தான் இந்த மௌனப் பெருவெளியில் மட்டும்.....‌
 

Attachments

  • IMG_20220120_134049.jpg
    IMG_20220120_134049.jpg
    145.1 KB · Views: 0
Top