எங்கள் தளத்தில் எழுத விரும்பும் எழுத்தாளர்கள் எங்களை கீழ் உள்ள மின்னஞ்சலில் தொடர்ப்புக்கொள்ளவும் நன்றி Email ID - narumugai.ink@gmail.com

மெளன பெருவெளி

bhuvanakumari

Moderator
மெளன பெருவெளி

அமைதியான
மனதிற்கு
மெளன பெருவெளி
சிந்தித்து
சீர் தூக்கி
அடுத்து
என்ன
என்று
திட்டம் தீட்டும்

அன்பு உறவு
இறந்து இழந்து
வாடும்
மனதிற்கு
மெளன பெருவெளி
உண்டாக்கும்
மனபாதிப்பு

பெரும் நஷ்டம்
பெரும் தோல்வியை
சந்தித்து
மனதிற்கு
மெளன பெருவெளி
பல நேரங்களில்
பட்ட வலிகளுக்கு
காயங்களுக்கு
மருந்தாகும்

தனிமைகள்
தரும்
மெளன பெருவெளி
சில நேரங்களில்
தவறான முடிவுகள்
சறுக்கல்கள்
போதை பழக்கங்கள்
தற்கொலைகள்

முதுமைகள்
சந்திக்கும்
மெளன பெருவெளி
பெருமூச்சுகள்
ஏக்கங்கள்
இயலாமைகள்

பதின்பருவ
மகன் / மகள்
சந்திக்கும்
மெளன பெருவெளி
சில நேரம்
விடலைபருவ
அச்சுறுத்தல்கள்

மெளன பெருவெளி
வரம்தான்
ஒருவரின்
மனதிடத்தை
பொறுத்து

கவிதையை
எழுதி முடிக்கும் போது,
'மெளன பெருவெளி'
என்னை பார்த்து
கேட்டது,
"மெளன பெருவெளி
எங்கே?"
அதுவே பதில்
தந்தது,
"அவரவர்
தம் கைபேசியோடு
இணைப்பாக
எனும்போது,
என் இடம்
எங்கே?"
 
Top