எங்கள் தளத்தில் எழுத விரும்பும் எழுத்தாளர்கள் எங்களை கீழ் உள்ள மின்னஞ்சலில் தொடர்ப்புக்கொள்ளவும் நன்றி Email ID - narumugai.ink@gmail.com

எல்லையற்ற காதலே..

Kavisowmi

Well-known member
எல்லையற்ற காதலே..

ஆயிரம் பேர் கூடியிருக்கும்
சபையில் எங்கோ ஓர் இடத்தில்
நீ இருக்க, என் கண்கள் உனை கண்டு சிரிக்க, அதே பார்வை
உன்னிடத்தில் இருந்து வருமே..
அங்கே தொடங்கிவிட்டது
உன் எல்லையற்ற காதல்..

சாலையில் நடக்கையில்
ஏதேதோ பேசினாலும்
கவனம் முழுக்க நான் நடக்கும்
பாதையில் தொடர்வதும்,
சமயத்தில் கரம் பற்றி
பாதுகாப்பை உறுதி செய்வதும்
காதலின் வெளிபாடு தானே!!

இளமையின் தேடல் முடிந்து,
கடமை முடிந்த கடைசி நேரத்தில்
ஓய்வாய் சாய்ந்து கதை பேச
இன்னும் நினைவுகள்
நிறைய இருக்கிறது
என் கண்ணாலனே!!
எல்லையற்ற காதலின்
சுவடுகள் நமக்குள்!!
 
Top