*எல்லையற்ற காதலே*
உயிர் தந்து
உலகம் காட்டினாய்
உன்னத உறவுகள் - பல
உணர்த்தினாய்
வாழ்வின் ஆதாரமானவன் - என்
வாழ்வின் அர்த்தம் தந்தவன்
வாகை சூடிட - எனை
வாஞ்சையாய் ஆரத்தழுவினாய்
பாசம் தனை மூலதனமாக்கி
படிகட்டுகள் பல கடந்திட
பட்டங்கள் பல பெற்றிட
நற்பண்புகள் கற்பித்தாய்
என் முதல் தலைவன் - நீ
வீட்டின் ராஜா ஆனதாலோ
இயல்பாய் அன்றி
இளவரசியென வளர்த்தாய்
கதைகள் பேசியதில்லை
கவிதைகள் படைத்ததில்லை
உன்னுடனான பொழுதுகள்
என்றும் என் நினைவுதனில்
கடுஞ்சொல் சாடியதில்லை
கட்டுப்பாடு விதித்ததில்லை
எல்லையற்ற காதலே
எம்தந்தை நீ தந்ததே...
- Gurulakshmi