எங்கள் தளத்தில் எழுத விரும்பும் எழுத்தாளர்கள் எங்களை கீழ் உள்ள மின்னஞ்சலில் தொடர்ப்புக்கொள்ளவும் நன்றி Email ID - narumugai.ink@gmail.com

மௌனப்பெருவெளி

Gurulakshmi

Moderator
*மௌனப்பெருவெளி*

அண்டம் தாண்டி
அமைதியில் இயங்கும்
அணுக்கள் பல உண்டாம்
ஆர்ப்பரித்து வியந்திடவே

கோட்டில் இயங்கிடும்
கோள்களோ கோடான
கோடி இங்கு உண்டாம்
தொலைநோக்கி தாண்டியும்

காண்பதெல்லாம் வியந்திட
விண்ணில் மின்னும்
விண்மீன்கள் உண்டாம்
கண் அகன்று பார்த்திட

காலம் கணித்து
சொன்னோர் பலர்
திசை மாறிடும் பல
கோள்கள் கொண்டு

மெய்ஞானம் கொண்டு உனை
மெய்யுணர்ந்தோர் சிலர்
மௌனப்பெருவெளி - நீ
ஒரு புரியா புதிர்...


- Gurulakshmi
 
Top