எங்கள் தளத்தில் எழுத விரும்பும் எழுத்தாளர்கள் எங்களை கீழ் உள்ள மின்னஞ்சலில் தொடர்ப்புக்கொள்ளவும் நன்றி Email ID - narumugai.ink@gmail.com

அக்னி சிறகு

Gurulakshmi

Moderator
*அக்னி சிறகு*

அக்னி சிறகொன்று
அகத்தினில் முளைத்திட
கனவு நோக்கி
கால்கள் தடம் பதித்திட

வளரும் பிள்ளை
ஓயாதிருப்பது போல்
வாழும் நாள் வரை
பயணம் தொடர்ந்திடு

உதிர்வது அறிந்தும்
மலரும் பூக்களாய்
உதிர்த்த இலைகள் துளிர்த்திட
தவமிருக்கும் விருட்சமாய்

வீழும் விதையும்
வேராகி வளர்வது போல்
மாறி வரும் பருவங்களில்
ஓயாது இயங்கும் பிரபஞ்சம் போல்

கல்லுக்குள் இயங்கும்
அணுக்களாய்
உனக்குள் எழும்
ஜுவாலையில்

பொக்கிஷமாய் பெற்ற பிறவிதனில்
ஓய்ந்து நீயும் சருகாகாதே
ஓய்தல் ஒழித்திடு
ஒய்யாரமாய் நடைபோட்டிடு

- Gurulakshmi
 
Top