எங்கள் தளத்தில் எழுத விரும்பும் எழுத்தாளர்கள் எங்களை கீழ் உள்ள மின்னஞ்சலில் தொடர்ப்புக்கொள்ளவும் நன்றி Email ID - narumugai.ink@gmail.com

பெண்மையே பேசு

admin

Administrator
Staff member
பெண்ணே!
பெண்ணாக
பிறப்பெடுத்து விட்டேனே
கண்ணீரும் மௌனமும் தான்
கிடைத்த
வாழ்க்கை என்று எண்ணி
உன் வாழ்வில் ஏமாந்து
விடாதே
பெண்மேயே பேசு!
பெண்களுக்கா பேசு!

பெண்ணின் தியாகத்திற்கு
நிகர்
பூலோகத்தில் எதுவுமில்லை.
மகளாக, தாயாக,
மனைவியாக, தலைவியாக
அவள் ஏற்கும்
பாத்திரங்கள்
அளவிட முடியாதவை!

மௌனம் என்பது
பெண்களுக்கு பெரிய ஆயுதம் மௌனித்திரு - ஆனால்
உன் விழிகளை
நீரோடையாக்காதே
உன் பார்வையை
நெரிப்பாக்கி விடு
உலகத்தை நிமிர்ந்து பார்
உன் பார்வைக்கு புலனாகும்
பல உண்மைகள்!

கலாசாரம் மறந்து போன
பெண்களாலோ
கருணையிலா கயவர்களின் பார்வையாலோ
பல துன்பங்கள்
பெண்களுக்கு பாரினிலே
பேசு மனமே பேசு
பெண்மேயே பேசு!

வலிமை கொண்ட
கரங்கள் சில வையகத்தில்
பெண்களை
காகிதங்களாக கசக்கி
எறிகிறார்களே
குரல் கொடு பெண்ணே!
பெருகி வரும் துன்பங்களை
வென்று
பிறப்பின் தாத்பரியத்தை
புரிந்து வாழ்!

பாட்டுக்கவி பாரதி
பெண்களைப் போற்றிய
அடிமையில்லா வாழ்வை
அகலத்தில் விதைத்திட
பெண்மேயே பேசு!
துணிந்து நில் அப்போதே
தலை நிமிர்ந்து நடக்க முடியும்
உனக்கு.
ஆசைகள் பல கோடி கனவுகள் காண்பதற்கல்ல
அவை உன்னை உலகறிய
செய்வதற்கே
உலகை இயக்கும் பெண்ணே
காத்துக் கொள் உன்னை..
உனக்கு நீயே கவசம்
பார் போற்றட்டும் உன்னை!!

நன்றி
 
Top