எங்கள் தளத்தில் எழுத விரும்பும் எழுத்தாளர்கள் எங்களை கீழ் உள்ள மின்னஞ்சலில் தொடர்ப்புக்கொள்ளவும் நன்றி Email ID - narumugai.ink@gmail.com

பெண்மையே பேசு

admin

Administrator
Staff member
டுப்பங்கரையை அகிலமாக்கியவளே அடுத்தடி வைத்து அதை
அங்கம் மட்டும் ஆக்கிக்கொள்......

அழகுனது உடன்பிறப்பு தான் உருவோடு விடாது அதை உனது அர்த்தமாக்கிக்கொள்......

வீரமுனது விரல் நுனி
தான் வேண்டும் வேலையில் வெகுண்டையெழுந்துகொள் ……

உனக்கேற்றதொரு உடை போட்டுக்கொள் அது உன் வாழ்வை வினவாக்காத விடையாக்கிக்கொள் .....

ஆணுக்காக தான் அவதரித்தாய் அவனுக்கு அடங்கிக்கிடக்கவல்ல அவனோடிணைந்து ஆளுவதற்கேயாடி துணையாய் நிற்கவொரு தோழனை தேடு தோழனவனையே துணையோடு நாடு .....

பிள்ளைபேரதை பெருமையோடரடி அம்மாவானதை ஆடிப்பாடி அன்னையெனமாறி
அரவணைத்தாளடி .....

ஆணுக்கு அளவோடு அக்கறைகாட்டி அவனுக்கே ஆணிவேராகி
அதிஷ்டமாகடி ….

யாவருக்கும் யதார்த்த யாசகம் செய்யடி பாட்டியானதும் பாரம்பரியம் பாடடி ……

உன் கதை உன் வசமென உணரடி உலகம் உன்வரலாறு உரைக்குமடி

- அஸ்வினி மகேந்திரன்
 
Top