யாரோ கலைத்துப் போட்ட
கூட்டைப் பார்த்துப்
பரிதவிக்கிறது தேனீயின்
மௌனம்
வண்டிற்கு விரிந்து
கொடுத்த முதல் இதழை
வெறிக்கிறது பூவின்
மௌனம்
சிறகை விரிக்க முதல்
இறக்கைக்காக
காத்திருக்கிறது
கூட்டுப்புழுவின்
மௌனம்
முழுதாய் ஒளிந்து கொள்ள
இருளுக்காக
நகர்கிறது நிலவின்
மௌனம்
புலரும் பொழுதுகளில்
பறவைகளின்
கீச்சொலிகளால்
நிறைகிறது விடியலின்
மௌனம்
கடலின் கரை தழுவும்
நொடியில் கரைந்தே
போகிறது அலையின்
மௌனம்
மான் மயங்கும்
நிமிடத்திற்க்காக
அசையாமல்
நிதானிக்கிறது புலியின்
மௌனம்
முதல் மனித காலடியில்
முற்றாய் உருக்
குலைக்கிறது காட்டின்
மௌனம்
அறுத்தெடுத்த தொப்புள்
கொடி ஆறாமல்
சொல்கிறது தாயின்
மௌனம்
தலை கோதும் அப்பாவின்
விரலைத்
தேடுகிறது இரவின்
மௌனம்
நீண்ட உரையாடலின்
அலைபேசிச் சூட்டில்
அதிகரிக்கிறது நட்பின்
மௌனம்
தூரத்திலும் குறையாத
செல்லச் சண்டைகளில்
நீடிக்கிறது நேசத்தின்
மௌனம்
இப்படிப் பெருவெளியே
மௌனங்களால்
நிறைந்திருந்தால்
மௌனப்
பெருவெளிக்கென
எங்கே போவேன் நான்…
அப்படி எங்கேனும்
நீ நிறைந்திருந்தால்
எப்படி உனைச் சேர்வதென
இப்படிக் கொஞ்சம்
சொல்லியனுப்பேன்
உன்னோடு
பெருவெளியைப்
பகிர்ந்து கொள்ள
மாட்டேன்…
என் மௌனப்
பெருவெளியே
உன் மௌனத்தில்
கரைந்தே போவேன் நான்…
கூட்டைப் பார்த்துப்
பரிதவிக்கிறது தேனீயின்
மௌனம்
வண்டிற்கு விரிந்து
கொடுத்த முதல் இதழை
வெறிக்கிறது பூவின்
மௌனம்
சிறகை விரிக்க முதல்
இறக்கைக்காக
காத்திருக்கிறது
கூட்டுப்புழுவின்
மௌனம்
முழுதாய் ஒளிந்து கொள்ள
இருளுக்காக
நகர்கிறது நிலவின்
மௌனம்
புலரும் பொழுதுகளில்
பறவைகளின்
கீச்சொலிகளால்
நிறைகிறது விடியலின்
மௌனம்
கடலின் கரை தழுவும்
நொடியில் கரைந்தே
போகிறது அலையின்
மௌனம்
மான் மயங்கும்
நிமிடத்திற்க்காக
அசையாமல்
நிதானிக்கிறது புலியின்
மௌனம்
முதல் மனித காலடியில்
முற்றாய் உருக்
குலைக்கிறது காட்டின்
மௌனம்
அறுத்தெடுத்த தொப்புள்
கொடி ஆறாமல்
சொல்கிறது தாயின்
மௌனம்
தலை கோதும் அப்பாவின்
விரலைத்
தேடுகிறது இரவின்
மௌனம்
நீண்ட உரையாடலின்
அலைபேசிச் சூட்டில்
அதிகரிக்கிறது நட்பின்
மௌனம்
தூரத்திலும் குறையாத
செல்லச் சண்டைகளில்
நீடிக்கிறது நேசத்தின்
மௌனம்
இப்படிப் பெருவெளியே
மௌனங்களால்
நிறைந்திருந்தால்
மௌனப்
பெருவெளிக்கென
எங்கே போவேன் நான்…
அப்படி எங்கேனும்
நீ நிறைந்திருந்தால்
எப்படி உனைச் சேர்வதென
இப்படிக் கொஞ்சம்
சொல்லியனுப்பேன்
உன்னோடு
பெருவெளியைப்
பகிர்ந்து கொள்ள
மாட்டேன்…
என் மௌனப்
பெருவெளியே
உன் மௌனத்தில்
கரைந்தே போவேன் நான்…