எங்கள் தளத்தில் எழுத விரும்பும் எழுத்தாளர்கள் எங்களை கீழ் உள்ள மின்னஞ்சலில் தொடர்ப்புக்கொள்ளவும் நன்றி Email ID - narumugai.ink@gmail.com

அக்னி சிறகே..

Kavisowmi

Well-known member
அக்னி சிறகே..


நீ இன்றி

உலகம்

இயங்காது..

பெண்ணே!!ஆக்கும் சக்தி.

அழிக்கும் சக்தி

உனக்குள் உண்டு

இரண்டுமே!!


உனை கட்டி

போட நினைத்தால்

தட்டி எழும்

திறன் உண்டு

உனக்குள்!!


போராட்டம்

ஒன்றும் புதிது

அல்லவே உனக்கு..

எங்கோ ஏதோ

ஒரு இருளில்

எதிர் காலம்

தொலைந்து

சமையல் அறையில்

ஒடுக்கப்பட்டவள்

மெல்ல எழுந்து

இன்று உலகை

ஆழ்கிறாய்!!


ஆசிரியராய்,

வழக்கறிஞராய்,

மருத்துவராய்.

விஞ்ஞானியாய்.

மந்திரியாய்

இன்னும் என்ன?

உன் அக்னி சிறகு

என்றோ விரித்து

விட்டாய் !!


இனி என்றும்

உனக்கு

தோல்வி கிடையாது.

உலகெங்கும்

உன் அக்னிசிறகை

விரித்து பறந்திடு

பெண்ணே உலகம்

இனி உன் காலடியில்!!!
 
Top