எங்கள் தளத்தில் எழுத விரும்பும் எழுத்தாளர்கள் எங்களை கீழ் உள்ள மின்னஞ்சலில் தொடர்ப்புக்கொள்ளவும் நன்றி Email ID - narumugai.ink@gmail.com

பெண்மையே பேசு

இயல்புக்கு மாறான அழுத்தத்தில், இயல்பாய் இருப்பதாய் காட்டிக்கொள்வதொன்றும் அத்தனை சிரமமில்லை - இருப்பினும் பெண்மையே பேசு...!
வாழும் வாழ்க்கையில் நடப்பதெல்லாம் பார்த்தால் யாரோவாக இருந்து விடுதல் நலம் என்று நினைக்கும் நேரங்களில் பெண்மையே பேசு...!
மௌனமாக கடந்து விட்டால்,
ஊமையாக இருக்க வைத்து விடுவார்களோ என்றெண்ணும் தருணங்களில் பெண்மையே பேசு...!
பெண்ணியம் பேசும் பெண்களுக்கும் பெண்மை உண்டு என பலருக்கு உணர்த்த பெண்மையே பேசு...!
 
Top