எங்கள் தளத்தில் எழுத விரும்பும் எழுத்தாளர்கள் எங்களை கீழ் உள்ள மின்னஞ்சலில் தொடர்ப்புக்கொள்ளவும் நன்றி Email ID - narumugai.ink@gmail.com

மௌனப் பெருவெளி

Lathananth

Moderator
மௌனப் பெருவெளி

லதானந்த்

பிறந்த போதினில் மழலைப் பேச்சு

இறக்கும் வரையிலும் என்றும் பேச்சு

துறந்த நிலையிலும் வார்த்தை போதனை

இறக்கும் வரையில் இறைமேல் கீர்த்தனை!

பேச்சே இல்லாப் பெருவெளி தேடினால்

மூச்சே நிற்கும் முந்தைய நொடிவரை

கீச்சு மூச்சென்று பேச்சின் அரவம்

காய்ச்சிய இரும்பாய்க் காதினில் வீழும்!

ஊசிப் போன சொற்களைத் தவிர்த்து

ஓசைகள் இல்லாப் பெருவெளி கண்டு

ஆசைகள் நீங்கி அதனுள் அமிழ்ந்து

நாசியில் சுவாசம் நன்றாய்த் தோன்றுக!

உணர்வுகள் கொட்ட ஓசைகள் வேண்டா;

கனவுகள் பேச ஒலிகளும் உண்டா?

நனவில் உள்மன ஆழம் நீந்திட

தினசரி வார்த்தைகள் வீணே யன்றோ!
காமம் தோய்ந்த கட்டில் சத்தம்

தேகம் உரசிடும் சிற்சில ஓசைகள்

மோதிடும் உதடுகள் முனகிடும் ஒலிகள்

காத தூரம் கேளா தொழிக!

ஞானம் தந்திடும் நல்லிசை மௌனம்

கானம் தானது; ஒலியிலை ஆனால்!

ஊனம் மனதில் உள்ளோர் தமக்கு

என்றும் கிட்டாச் செல்வம் மௌனம்!

இறையொடு பேசிட இதுவே செம்மொழி

கறையெதும் இல்லாக் கவின்மிகு நல்மொழி

உரைநடை, செய்யுள், நாடகம் நீக்கிய

மறைபொருள் நிகர்த்த மௌனப் பெருவெளி!


************

அன்புடையீர்,

மேலே இருக்கும் கவிதை என்னுடைய சொந்தப் படைப்பு என்றும் இதுவரை வேறெங்கும் வெளியாகவில்லை எனவும் உறுதியளிக்கிறேன்.

என்னுடைய மின்னஞ்சல் lathananth@gmail.com


எனது முகவரி:

லதானந்த்,

(டி.ரத்தினசாமி)

உதவி வனப் பாதுகாவலர் (ஓய்வு),

27, மூன்றாவது குறுக்குத் தெரு,

முத்துநகர்,

துடியலூர்,

கோயமுத்தூர் 641034


அன்புள்ள,

லதானந்த்

22.01.2022
 
Last edited by a moderator:

Fa.Shafana

Moderator
கடைசி 6 வரிகள் மிக அருமை ஐயா..
அதிலும் "ஊனம் மனதில் உள்ளோர் தமக்கு என்றும் கிட்டாச் செல்வம் மௌனம்" ??????
 

Kavisowmi

Well-known member
மௌனப் பெருவெளி

லதானந்த்

பிறந்த போதினில் மழலைப் பேச்சு

இறக்கும் வரையிலும் என்றும் பேச்சு

துறந்த நிலையிலும் வார்த்தை போதனை

இறக்கும் வரையில் இறைமேல் கீர்த்தனை!

பேச்சே இல்லாப் பெருவெளி தேடினால்

மூச்சே நிற்கும் முந்தைய நொடிவரை

கீச்சு மூச்சென்று பேச்சின் அரவம்

காய்ச்சிய இரும்பாய்க் காதினில் வீழும்!

ஊசிப் போன சொற்களைத் தவிர்த்து

ஓசைகள் இல்லாப் பெருவெளி கண்டு

ஆசைகள் நீங்கி அதனுள் அமிழ்ந்து

நாசியில் சுவாசம் நன்றாய்த் தோன்றுக!

உணர்வுகள் கொட்ட ஓசைகள் வேண்டா;

கனவுகள் பேச ஒலிகளும் உண்டா?

நனவில் உள்மன ஆழம் நீந்திட

தினசரி வார்த்தைகள் வீணே யன்றோ!
காமம் தோய்ந்த கட்டில் சத்தம்

தேகம் உரசிடும் சிற்சில ஓசைகள்

மோதிடும் உதடுகள் முனகிடும் ஒலிகள்

காத தூரம் கேளா தொழிக!

ஞானம் தந்திடும் நல்லிசை மௌனம்

கானம் தானது; ஒலியிலை ஆனால்!

ஊனம் மனதில் உள்ளோர் தமக்கு

என்றும் கிட்டாச் செல்வம் மௌனம்!

இறையொடு பேசிட இதுவே செம்மொழி

கறையெதும் இல்லாக் கவின்மிகு நல்மொழி

உரைநடை, செய்யுள், நாடகம் நீக்கிய

மறைபொருள் நிகர்த்த மௌனப் பெருவெளி!


************

அன்புடையீர்,

மேலே இருக்கும் கவிதை என்னுடைய சொந்தப் படைப்பு என்றும் இதுவரை வேறெங்கும் வெளியாகவில்லை எனவும் உறுதியளிக்கிறேன்.

என்னுடைய மின்னஞ்சல் lathananth@gmail.com


எனது முகவரி:

லதானந்த்,

(டி.ரத்தினசாமி)

உதவி வனப் பாதுகாவலர் (ஓய்வு),

27, மூன்றாவது குறுக்குத் தெரு,

முத்துநகர்,

துடியலூர்,

கோயமுத்தூர் 641034


அன்புள்ள,

லதானந்த்

22.01.2022
அருமை...ஐயா..
 
மௌனப் பெருவெளி

லதானந்த்

பிறந்த போதினில் மழலைப் பேச்சு

இறக்கும் வரையிலும் என்றும் பேச்சு

துறந்த நிலையிலும் வார்த்தை போதனை

இறக்கும் வரையில் இறைமேல் கீர்த்தனை!

பேச்சே இல்லாப் பெருவெளி தேடினால்

மூச்சே நிற்கும் முந்தைய நொடிவரை

கீச்சு மூச்சென்று பேச்சின் அரவம்

காய்ச்சிய இரும்பாய்க் காதினில் வீழும்!

ஊசிப் போன சொற்களைத் தவிர்த்து

ஓசைகள் இல்லாப் பெருவெளி கண்டு

ஆசைகள் நீங்கி அதனுள் அமிழ்ந்து

நாசியில் சுவாசம் நன்றாய்த் தோன்றுக!

உணர்வுகள் கொட்ட ஓசைகள் வேண்டா;

கனவுகள் பேச ஒலிகளும் உண்டா?

நனவில் உள்மன ஆழம் நீந்திட

தினசரி வார்த்தைகள் வீணே யன்றோ!
காமம் தோய்ந்த கட்டில் சத்தம்

தேகம் உரசிடும் சிற்சில ஓசைகள்

மோதிடும் உதடுகள் முனகிடும் ஒலிகள்

காத தூரம் கேளா தொழிக!

ஞானம் தந்திடும் நல்லிசை மௌனம்

கானம் தானது; ஒலியிலை ஆனால்!

ஊனம் மனதில் உள்ளோர் தமக்கு

என்றும் கிட்டாச் செல்வம் மௌனம்!

இறையொடு பேசிட இதுவே செம்மொழி

கறையெதும் இல்லாக் கவின்மிகு நல்மொழி

உரைநடை, செய்யுள், நாடகம் நீக்கிய

மறைபொருள் நிகர்த்த மௌனப் பெருவெளி!


************

அன்புடையீர்,

மேலே இருக்கும் கவிதை என்னுடைய சொந்தப் படைப்பு என்றும் இதுவரை வேறெங்கும் வெளியாகவில்லை எனவும் உறுதியளிக்கிறேன்.

என்னுடைய மின்னஞ்சல் lathananth@gmail.com


எனது முகவரி:

லதானந்த்,

(டி.ரத்தினசாமி)

உதவி வனப் பாதுகாவலர் (ஓய்வு),

27, மூன்றாவது குறுக்குத் தெரு,

முத்துநகர்,

துடியலூர்,

கோயமுத்தூர் 641034


அன்புள்ள,

லதானந்த்

22.01.2022

இவ்வழகிய கவிதையில் உலகையே மறந்தேன் தோழரே... சிறப்பு! மிக சிறப்பு
 
Top