எங்கள் தளத்தில் எழுத விரும்பும் எழுத்தாளர்கள் எங்களை கீழ் உள்ள மின்னஞ்சலில் தொடர்ப்புக்கொள்ளவும் நன்றி Email ID - narumugai.ink@gmail.com

நறுமுகை கவிசொல் போட்டி தலைப்பு: எல்லையற்ற காதலே...!

இசைபாடும் கருவிழிகள் கொண்ட எந்தன் காதலனே கவியொன்று புனைந்திட வந்தேன் மன்னவன் உன்னிடமே ...!

காலம்தனில் அன்பெனும் உணர்வில் என் காதல் பயணம் அழகாய் தொடர அறுசுவை பண்டங்களோ இன்று தீன்சுவை இனிக்கிறது...

வாழ்வெனும் நந்தவனம் அழகானது என் காதலனே உந்தன் நினைவில் பாடிய கவியை எண்ணி நாணம் கொள்கிறேன்

அடடா உந்தன் காதல் பார்வையில் சிக்கி தடுமாறி போகிறேன் உந்தன் சீண்டலில் மெய்மறந்து போகிறேன் ...

எத்தனை துன்பங்கள் காயங்கள் என்னை நெருங்கினாலும் எல்லாமே இன்பமாகும்...

உன் அன்பெனும் பொக்கிஷம் என்னோடு உள்ளவரை தரணியை கூட வென்றிடுவேன் என்னவனே...

பதினான்கு வருட காதல் எனும் பந்தத்தில் அழகாய் நாம்
சின்ன சின்ன சண்டைகள்
கோபங்களோடு உறவாடுகிறோம்...

இன்று கடல் கடந்த தேசத்தில் நீ இருந்தாலும் எம் உண்மைக் காதல் என்றும் மரணிக்காது என்ற உந்தன்


சத்திய வாக்கிலே என் விழிகள் கலங்கியதே... உந்தன் காதலை எண்ணி வியந்தே போகிறேன் ...

காதல் என்ற கலையிலே நேசமெனும் உறவை ஆழமாய் விதைத்த எம் காதல் எம்போதும்
எல்லையற்ற காதலே ...!
எம்.வினோ மபாஸ்
 

Fa.Shafana

Moderator
அழகான கவிதை..
கடல் கடந்து எல்லை தாண்டிப் போனாலும் மாறாத நேசம்??????
 
Top