எங்கள் தளத்தில் எழுத விரும்பும் எழுத்தாளர்கள் எங்களை கீழ் உள்ள மின்னஞ்சலில் தொடர்ப்புக்கொள்ளவும் நன்றி Email ID - narumugai.ink@gmail.com

நறுமுகை கவிசொல் போட்டி கவிதையின் தலைப்பு: பெண்மையே பேசு

நறுமுகை கவிசொல் போட்டி

கவிதையின் தலைப்பு: பெண்மையே பேசு

பெண் சுமந்த கருவறை முத்துக்களாலே தரணி சுழல்கிறது பெண்ணே நீ இந்த பூமியின் ஆதாரமே...

பல வருட காலமாய் மறுக்கப்பட்ட சம உரிமைகள் புதைத்து வைத்த உணர்வுகள்...முடங்கி கிடக்கும் கனவுகள் ...

வாழ்வில் வலிகள் பொதுவானது ஆனால் பெண்களுக்கு வலிகளை வாழ்வென்று உருவாக்கியது ஏனோ மானிடர்களே...

பொங்கிவழிந்தோடும் கோபங்கள் மூடி கிடக்கும் வெற்றியின் வழிகள்...எல்லாவற்றையும் துகள்களாய் உடைத்தெறி

*தீ* ப்பொறியாய் திரண்டு அக்கினி குண்டலமாய் நீ எழுந்து வா பெண்ணே...

பெண்னென்றால் பூவிதழ் போல் மென்மையானவள் அல்ல பெரும் சக்தி என்று நீயே உணர்ந்திடு...

நீ போகும் வழியெங்கும் முட்செடிகள் பரவி கிடந்தால் முட்கள் மீது நடந்து பழகு...

காலமென்னும் பொக்கிஷம் வலிகளை அழித்து விடும் நீ சாதனைப் பெண்ணாய் தரணியில் திகழ்வாய்...

ஒருநாள் மட்டுமே
உன் உரிமைக்காக போராடாதே...தினந்தோறும் போராடு

நெருப்பாய் நீ இரு...தன்னம்பிக்கை எனும் கலையை கற்றிடு...தைரியமெனும் ஆயுதம் தரித்து பயமின்றி பெண்மையே பேசு.. .
எம்.வினோ மபாஸ்
 
Top