அத்தியாயம்11
காலையில் தன் தோழி அருள்மொழியிடம் பேச துவங்கியவர், சற்று பேசிவிட்டு தன் அன்றாடம் செய்யும் வேலைகளை செய்து கொண்டிருந்தார்.
பிள்ளைகளுக்கு காலை உணவு கொடுத்து விட்டு. பின் அவர்களுக்கு மத்திய உணவு செய்யும்பொழுது தனக்கும் சேர்த்தே செய்து கொள்வார் . அவர்கள் கல்லூரி சென்றபின் அழுக்கு துணிகளை துவைத்து அதை உலரவைப்பது, வீட்டை சுத்தம் செய்து, தனக்கும் மத்திய உணவை எடுத்துக்கொண்டு பின் தங்களின் அலுவலகத்திற்கு சென்றுவிடுவார். ஆம் இவர் கணவன் இறந்தபின் அவர்தான் கவனித்து வருகிறார்.
தொழிலை கணவர் துவங்கிய சமையம் அவருக்கு உறுதுணையாக இருந்தார். கணவர் தொழிலில் முன்னேற்றம் தோல்வி என்று வீட்டிற்கு வரும்பொழுது அந்த இரண்டையும் லாவகமாக கையாளுவார் . கணவனின் தோல்வியில் அவரை துவண்டு போகாமல் பார்த்துக்கொள்வார் . ஒரு மனைவியாக கணவருக்கு எல்லாவித சந்தோஷத்தை முகம் சுழிக்காமல் வாரி அல்லி தந்தவர். தேவியின் மனதிற்கே அவர் இன்னும் ஓடி ஓடி உழைத்து அவரை கண்ணில் வைத்து பார்க்க விரும்பினார் கணேசன். இரண்டு பிள்ளைகள் பிறந்து அவர்களை பெரிய அளவில் படிக்கவைத்து அவர்களுக்கு விருப்பமுள்ள வேலைகள் அவர்கள் செய்ய வேண்டும் என்றெல்லாம் கணவனும் மனைவியும் ஆசை பட்டனர் .
இன்று தேவி தொழிலை கையில் எடுத்து அதில் லாபம் சம்பாதிப்பதற்குள் நிறைய நஷ்டம் அடைந்துவிட்டார். கணவரின் தோல்வியை கையாண்ட தெரிந்தவருக்கு அவரின் தோல்வியை முறியடித்து வருவதற்கு அவர் மிகவும் கஷ்டப்பட்டார் . பிசினஸ் செய்யும் ஒரு பெண்மணியால் என்ன சாதிக்க முடியும் அதுவும் கணவனை பறிகொடுத்து இரு பிள்ளைகளையும் வைத்துக்கொண்டு தனியாக சாதிக்க முடியுமா என்ற வார்த்தையை அவர் மாற்றி காட்டினார் .
முடியாது என்ற வார்த்தையை அவருடைய அகராதியிலிருந்து நீக்கியவர்.
தனியாக இருக்கும் இவருக்கு வராத தொந்தரவு இல்லை . மறுமணம் அவருக்கும் இஷ்டம் இல்லாத ஒன்று . காதல் கணவனுடன் தெகிட்ட தெகிட்ட வாழ்ந்தவர் . இரு பிள்ளையை பெற்று, காதலையும் அனுபவித்து , கல்யாண வாழ்க்கையையும் பார்த்துவிட்டவருக்கு . மறுமணம் பற்றிய எண்ணம் கிஞ்சித்தும் இல்லை. அவருடைய எண்ணம் எல்லாம் தற்பொழுதைய வாழ்வாதாரத்தை உயர்த்துவது, பிள்ளைகளின் படிப்பு இவை மட்டுமே.
தேவி தன் இரு பிள்ளைகளையும் கரை சேர்க்க அவள் பட்ட கஷ்டம் அதுவும் கணவரை இழந்த இவரோ வாழ்வில் முன்னிற்கு வர படாது பாடு பட்டார் . அவரின் பிள்ளைகளின் சிரிப்பு முகத்தை பார்த்து, வரும் கஷ்டத்தையும் துக்கத்திலும் சகித்து கொண்டார். கணவன் இன்றி தனியாக பிள்ளைகளை வளர்ப்பது இந்த சமுதாயத்தில் மிகக்கடுமையான ஒரு சவாலாகவே இருந்தது அவருக்கு. துவண்டு போகாமல் பிள்ளைகளுக்காக சமூகத்தில் சில சாக்கிடைகளை தாண்டி வந்தவர் .
கணேசன் இறக்கும் சமையம் வினுவிற்கு வயது ஒன்று . அவன் தந்தையின் பாசம் அறியாதவன் .
கணவரும் அவருடைய நண்பரும் சேர்த்து ஆரம்பித்த தொழில் இப்பொழுது அவருடைய பங்கினை அவரே சிறப்பாக செய்து வருகிறார். தொழிலில் ஏதேனும் சந்தேகமோ அல்லது புது வாகனம் வாங்கும் முடிவையோ இவர் என்றும் நீலமேகத்திடம் ஆலோசனை பெற்றபின் தான் அதை செயல் படுத்துவார். அவரும் தன் கூட பிறவா சகோதரியாக தேவிக்கு எல்லாவித உதவியும் செய்வார்.
நீலமேகமும் அவருடைய மனைவி அருள்மொழியும் அவர்களுடனே விழுப்புரம் வந்து தங்கிக்கொள்ள சொல்லி எவ்வளவோ கேட்டு பார்த்தார்கள், தேவி சம்மதிக்க வில்லை .
தேவியின் பிறந்த வீடும் புகுந்த வீடும் அவர்களுக்கு உதவி செய்ய முன்வரவில்லை.
தானே தன்காலில் நின்று பிள்ளைகளை நன்கு படிக்கவைத்து இப்பொழுது சொல்லிக்கொள்ளும் அளவிற்கு நடுத்தரத்திற்கும் சற்று மேலே தங்களின் வாழ்க்கை தரத்தை உயர்த்தி உள்ளார். சொந்த வீடு அதுவும் போர்டிகோ மாடலில் . ட்ராவேல்ஸ் கார் போக தங்களுக்கென்று சொந்த கார் ஒன்று வீட்டு வாசலில் நிற்கும்.
இவை அனைத்தும் தேவி, தான் சொந்த முயற்சியில் சேர்த்துவைத்தார். இவர் எப்பொழுதும் சொல்லும் வார்த்தை அண்ணன் இல்லாமல் நாம் இவ்வளவு தூரம் வந்திருப்பது சாத்தியம் இல்லை .
இவர் என்றும் நீலமேகத்துக்கு நன்றி கடன்பெற்றவர் .
நீலமேகம் தொழில் விஷயமாக சென்னை வரும்போதெல்லாம் தன் மனைவியையும் உடன் அழைத்து வந்துவிடுவார். பிள்ளைகளிற்கு அத்தை மாமா என்ற உறவும் கிடைக்க பெற்றதில் மிகவும் சந்தோசம் அடைந்தார்.
அதிலும் வினு ஒரு படி மேல் போய் நீலமேகத்தின் காலையே சுற்றி சுற்றி வருவான் தந்தையின் பாசம் பெறாத பிள்ளை ஆயிற்றே.
------------------------------------------------------------------------------
வினோத் வீட்டிற்குள் நுழைத்த சமையும் அவனின் தாயார் அருள்மொழி இடம் தொலைப்பேசியில் பேசிக்கொண்டிருப்பதை கண்டவன் . அவரிடத்தில் இருந்து தொலைப்பேசியை வாங்கியவன்
"என்ன அத்தை எப்படி இருக்கிங்க "
"நான் நல்லா இருக்கேன் தம்பி , நீங்க எப்படி இருக்கிங்க"
"நா சூப்பர் ஓ சூப்பர் , ஆமாம் நீங்க இப்படி போன் ல ஆத்து ஆத்துன்னு ஆத்துரத்துக்கு நேரில் வந்து பேசலாம் "
அருகில் இருந்த தேவி "அப்படி கேளுடா இவங்க பண்ணின காரியத்துக்கு நேருல இருந்தாங்க அவளோதான் . "
என்று கொந்தளிக்க ஆரம்பித்து விட்டார் .
"என்ன அத்தை இப்படி அம்மா பேசுறாங்க என்ன ஆச்சு "
"அது ஒன்னும் இல்ல தம்பி நம்ப தேஜு இருக்காள, அவ சென்னைல இருக்குற இன்ஜினியரிங் காலேஜ்ல படிக்க போறா "
சர்வ சாதாரணமாக சொன்னார் . அதை கேட்டு அதிர்ந்தவன்
"எது, நம்ப தேஜு வா , என்ன அத்தை சொல்லறீங்க ?"
"ஆமாம் பா , அங்கதன் இவளுக்கு சீட் கெடச்சிற்கு , அதான் நானும் மாமாவும் வந்து அவளை அங்க சேர்க்கலாமென்று இருக்கிறோம் "
அருள்மொழி சொன்ன செய்தியில் மிகவும் சந்தோசம் அடைந்தவன்
"நெஜமாவா சொல்றிங்க , சின்ன குழந்தையில் பார்த்தது , அவ காலேஜ் போற அளவுக்கு பெரிய பொண்ணாய்ட்டாளா ?"
"அட ஆம்மாம்பா நம்ப வினை வயசுதான் அவளுக்கும் "
"ஆம்மால , சரி எப்போ வரீங்க இங்க "
"இன்னிக்கு மாமாவும் தேஜும் அட்மிஷன் போட வந்தாங்க , அங்க வீட்டுக்கு வரதா சொன்னாங்க , அதான் நான் அம்மா கிட்ட பேசிக்கிட்டு இருந்தேன் "
"சூப்பர் அத்தை ....
அவன் பாதி பேச்சிலே தேவி அவனிடம் இருந்து தொலைப்பேசியை வாக்கியவர்
"எல்லாத்தையும் நீயே பேசின நான் என்னத்ததான் பேற்றது, இப்படிக் கொடு கொஞ்சம் "
"அப்போ இவளோ நேரம் நீங்க இதப்பத்தி பேசலியா "
"போடா அப்படி வந்துட்டான்,"
"டேய் வினோத்து காலைல மேல துணி காய போட்டேன்டா, கொஞ்சம் போயிட்டு எடுத்துட்டு வாயேன் "
அவனுக்கு வேலையை ஏய்த்துவிட்டு தொலைபேசியில் அவர் அருள்மொழியிடம் பேசத்துடங்கினார்
" இம்ம் இப்போ மேல சொல்லு , நீங்க எப்போ சென்னை வரீங்க , உங்களுக்கு எங்க ஏரியால வீடு பாக்கட்டுமா ?"
அவர் பேசிக்கொண்டிருந்தனர் வாசலில் அழைப்பு மணி அடித்ததும் அருள்மொழியிடம் தான் பிறகு பேசிக்கொள்கிறேன் என்று பேசியை வைத்துவிட்டார்
அவர் வாசல்வரை சென்று யார் என்று பார்த்தவர் அங்கு அழகு சிலைக்கு உயிர் வந்தது போல் ஒரு உயிர் சிலை நின்றிருப்பதை கண்டவர் மெய்சிலுத்துவிட்டார் . கூடவே நீலமேகமும் நின்றிருப்பதை கண்டவர் வந்தது யார் என்று உணர்ந்து உள்ளம் சந்தோஷத்தில் நிறைந்து அவரை வரவேற்றார்.
"வாங்க அண்ணா, வாம்மா பாப்பா "
"பாப்பாவா, அத்தை நான் ஒன்றும் பாப்பா இல்ல நான் காலேஜ் போகப்போறேன் இப்போ "
அவளுடைய சிணுங்கல் அவருக்கு ஐந்து வயதுக் குழந்தை சிணுங்கல் போலவே இருந்தது, அதில் சிரித்தவாறு
"சரி சரி முதலில் உள்ள வா "
என்று உள்ளே அழைத்து சென்றார்
"தேஜு அத்தையை எதுத்து பேசாத"
நீலமேகம் பெண்ணை அதட்டினார்
"விடுங்க அண்ணா , எனக்கு ஒரு பொண்ணு இருந்தால் இப்படி பேசமாட்டாளா , அவ அவளாவே இருக்க விடுங்க"
என்று தேவி சொல்லி முடித்ததும் அவரை இருகக்கட்டி அனைத்தவள் அவரிடம்
"அத்தை நீக்க எனக்கு இன்னொரு அம்மா மாதிரி , இம்ம்ம் இல்லை இல்லை அந்த அருளுக்கு பேரிலேதான் அருள் என்கிட்ட ரொம்ப ஒஸ்ட்டா நடந்துக்கும் எப்போவும் இத பண்ணாத அத பண்ணதானு , யு ஆர் சோ ஸ்வீட் அத்தை "
அவளின் பேச்சில் சிரித்தவாறு
"சரி வா வந்து உட்காருங்க குடிக்க ஏதாச்சும் எடுத்துட்டு வரேன்,"
கிட்சேனுக்குள் சென்றவர் அவர்களுக்கு குடிக்க குளிர்பானம் தயார் செய்து எடுத்து வந்தார் . அச்சமையும் மாடியில் துணி எடுக்க சென்ற வினோத் வீட்டுக்குள் நுழைந்ததும் அவர்களைக்கண்டு அதிர்ச்சியில் உறைந்தான் . பல வருடம் கழிந்து இப்போதுதான் பார்க்கிறான் அவர்களை.
" வாங்க மாமா , எப்படி இருக்கிங்க"
நீலமேகத்தைப் பார்த்து கேட்டான்
"நான் நல்லா இருக்கிறேன் தம்பி நீக்க எப்படி இருக்கிங்க "
"நானும் நல்லா இருக்கேன் மாமா, இப்போ வந்துடுறேன் இந்த துணிய வெச்சிட்டு வரேன் "
என்று துணியை தன் அம்மாவின் அறையில் வைத்துவிட்டு வந்தான் ,
அதற்குள் தேவியும் அவர்களுக்கு குடிக்க குளிர்பானம் எடுத்துவந்தார்
"இந்தாங்க அண்ணா , பாப்பா நீங்களும் எடுத்துக்கோங்க "
"ஏன் அத்தை, பாப்பா கூப்பிடாதிங்க இப்போதானே சொன்னேன், எனக்கு என்னோட பெயர் தவிர வேற எப்படி கூப்பிட்டாலும் பிடிக்காது "
"அசோ அப்படி இல்லமா உன்ன அப்படியே கூப்பிட்டு பழகிட்டேன்னா அதன் இனிமெட்டு நான் உன்ன தேஜுனே கூப்பிடுறேன் போதுமா"
பாப்பா என்ற அழைப்பில் வினோத் சிரித்து விட்டான். அதை கண்டவள்
"நீக்க ஏன் சிரிக்குறிங்க , என்ன பார்த்தால் பாப்பா மாதிரியா இருக்கு"
அதற்கு விநோத்தோ அவளை மேலும் கீழும் பார்த்து விட்டு
"கண்டிப்பா இல்லை , அஞ்சடி பீப்பா மாதிரி இருக்க "
அவனின் நக்கல் பேச்சில் காண்டானவள், தேவியை பார்த்து முறைத்து
"இதுக்குத்தான் சொன்னேன் இப்படி கூப்பிடாதிங்கனு , பாருங்க உங்க பையனை "
வந்ததும் அவனைப்பற்றிய புகார் தெரிவிக்க ஆரம்பித்தாள் .
"டாய் வினோத் இப்போதான் அவங்க வந்துருக்காங்க, வந்ததும் அவகிட்ட வம்புக்கு போகாத வந்து உட்கார் "
என்று தன் மகனை தன் அருகில் உட்கார வைத்தார் தேவி.
"சொல்லுங்க அண்ணா இப்போதான் உங்களுக்கு எங்க வீடு விலாசம் தெரிஞ்சுதா இல்ல எங்க நினைப்பு வந்ததா ?"
"ஏம்மா சொல்ல மாட்ட உன்ன அங்குட்டு வா வானு நானும் அருளும் எவ்வளோவோ கூப்பிட்டு பாத்துட்டோம் , நீதான் அந்த சம்பவத்துக்கு பிறகு அங்க வராதே இல்ல, அங்கேயும் கணேசன் கூட ஆரம்பித்த கிளை நல்லா மக்களிடம் வரவேற்பு. இப்போது விழுப்புரத்தில் நம்ப ட்ராவெல்ஸ் வண்டிதான் எல்லாத்துக்கும்.
முன்னமாதிரி இங்க வர நேரம் கிடைக்கலமா , அதன் உன்னையும் உன் பிள்ளைகளையும் பார்க்க வர முடியலை "
"இம்ம்ம் புரிகிறது அண்ணா, எனக்கு அங்க வர கூடாதென்று ஒன்றும் இல்லணா நான் அங்க வந்தா தேவை இல்லாமல் அந்த சின்னராசு மூஞ்சில முழிக்க வேண்டி வரும் அதான். இருந்தாலும் நீக்க ஒருவர் மட்டும் தான் எங்களுக்கு குடும்பம் எல்லாம், அதான் உரிமையில் கேட்டுட்டேன் "
தன் தாயின் கவலை என்னவென்று இவனுக்கு தெரியுமே . தன் தாயின் இடது கரத்தை பற்றியவன் முடிந்தவற்றை பேசாமல் இரு என்று தாயிடம் முகத்தை சுழித்து கொண்டான் .
இதனை கவனித்த நீலமேகம் பேச்சை மாற்றும் பொருட்டு
"சரி மா , நம்ப தேஜு கௌன்சிலிங்ல சென்னை காலேஜ்ல தான் சீட் கெடச்சிற்கு , அதான் பொண்ண இங்க சேர்க்கலாம்னு வந்திருக்கேன் , நீ என்ன சொல்லற "
"இதில் நான் என்ன சொல்றது அண்ணா, நல்ல காலேஜ் , நல்ல குரூப் தான் , இங்க ஒரு பிரச்னையும் இல்ல, சரி நீங்க எப்போ வரீங்க , நா இங்க உங்களுக்கு வீடு பாத்து கொடுக்கடும்மா ?"
"இல்லமா அதைப்பற்றி நேரில் பேசத்தான் வந்தேன் , இவளை நான் ஹாஸ்டல்ல தான் சேர்க்க முடிவு பண்ணிட்டேன் "
"என்ன அண்ணா சொல்லறீங்க , நீக்க இங்க வரலாம்ல"
"என்ன மா நீயும் நிலைமை தெரியாத பேசுற, அங்க பிசினுஸ் இருக்குமா , அதுவும் இல்லாமல் அப்பாகும் அம்மைக்கும் வயசு ஆகிறது, அருள் மட்டும் தான் தனியா பாத்திட்டு இருக்கா அவர்களாலேயும் இங்க வரமுடியாது "
என்று அவருடைய பொறுப்புகளை தேவியிடம் சொல்லி கொண்டவரின் முகத்திலும் கவலை ரேகை ஓடிக்கொண்டிருந்தது தன் பெண்ணை தன் அருகில் வைத்து கொள்ளமுடியாமல் இப்படி வெளிஊரில் அனுப்பி படிக்கவைக்க வேண்டிய நிலைமையை நினைத்து.
அவருக்கும் இவள் ஒற்றை பெண் பிள்ளை . ஆண் பிள்ளை இல்லை என்ற குறை ஏதும் அவருக்கு என்றும் இருந்தது இல்லை . தேஜு அவருக்கு மிகவும் செல்லமான பெண்.
குறை இல்லை என்றாலும் அவளிடத்தில் அவருக்கு ஏகப்பட்ட பயம் ஏன் என்றால் அவள் அனைவரிடமும் சகஜமாக பேசுபவள் , யாருகோ பிரசச்னை என்றல் தன் பிரச்சனை போல் ஓடிச் சென்று பஞ்சாயத்து பண்ணிவிடுவாள் . இப்படி பட்டவளை பெற்றவருக்கு பயம் என்பது வரவேண்டிய ஒன்று தான். அவளின் நியாயம் சிலருக்கு அநியாயம் ஆகா தெரியும் அதைப்பற்றி எல்லாம் அவள் கவலைப்படாதே இல்லை.
படிப்பில் கெட்டிக்காரி,பன்னிரண்டாம் வகுப்பில் அதிகம் மதிப்பெண் பெற்றதால் சென்னை கல்லூரியில் அவளுக்கு இடம் கிடைத்து உள்ளது.
பெற்றவருக்கு இவளை நினைத்து என்றும் சந்தோஷம் தான்.
இந்த சந்தோஷம் நிலைக்குமா? அவளின் நியாயம் எல்லா இடத்திற்கும் பொருந்துமா ?
தொடரும்