எங்கள் தளத்தில் எழுத விரும்பும் எழுத்தாளர்கள் எங்களை கீழ் உள்ள மின்னஞ்சலில் தொடர்ப்புக்கொள்ளவும் நன்றி Email ID - narumugai.ink@gmail.com

எல்லையற்ற காதலோ

admin

Administrator
Staff member
ல்லையற்ற காதலோ

என்றேன்கண்ணா

ஆம் என்று மொழிந்தானோ?

கள்வன் அன்றோ

உன் கண்ணன்


ஆம் கள்வன்அன்றோ

களவாடிய என் கண்களோடு

எதை உரைத்தானோ

அறிகிலேன்


எல்லையற்ற காதலையோ

ஐயம் உதிக்கிறதே

எதற்கும் உள்மனதிடம் கேளேன்

என்றனர்


உள்ளமனதை வெவ்விக்

கொண்டு நாட்கள் ஆயிற்று

அது உள்ளதே அவன் வசமே

தானே என் செய்வேன்


இதழ் திறந்தால் கண்ணன்

பெயர் தானோ ?

உரைத்திடடி அவனிடம்

உணர்ந்து கொள்வானோ


உரைக்கவும் உணர்த்தவும்

சொல் மறந்து ஊண் மறந்து

மௌனப் பெருவெளியில்

எனதாவி திரியுதடி


ஆங்கும் அவனே தான் உடன்

வந்தானோடி ?

கண்ணே என்றானா

கணியமுதே என்றானோ

என்றென்னை கேலிசெய்தனள்


அதையறிய நான்

அவனியில் இல்லை

அவன் அண்மையில் என்

சுயம் மறந்தே சுதந்திரமாய்

இருந்தது


உன் பெண்ணியம்

நின்னை நிந்தனை செய்திடிலையோ

உன் சுதந்திரம் சுகமோ

என்றனள் வன்மையோடே


காதலின் பால்பேசும் போது

ஆண் பெண் இருபாலும்

தன்பால் பேசாது

காதல் சுயம் நோக்க

உன் சுயம் மறந்தே போம்

மௌனப் பெருவெளி மில்

உரையாடல் தேவையில்லை

உரைகல் உரைகளும் வேண்டுவதில்லை.

அக்னி சிறகாய் அனைத்தையும் எரித்திடும் எங்கள்

எல்லையற்ற காதல்

எங்கும் நிறையட்டும்

குன்றாமல் வளரட்டும்.

என் கண்ணன் காதலைப் போல


ஆகட்டும் அதுபோல

அனைவருக்கும் வாய்க்கட்டும்

என்றென்னை அனைத்துக்

கொண்டாளா(ன்)

- தீபாகோவிந்
 
Top