எங்கள் தளத்தில் எழுத விரும்பும் எழுத்தாளர்கள் எங்களை கீழ் உள்ள மின்னஞ்சலில் தொடர்ப்புக்கொள்ளவும் நன்றி Email ID - narumugai.ink@gmail.com

மௌன பெருவெளி

admin

Administrator
Staff member
ண்கள் பேசும்போது
அன்பின் ஆழத்தை
மெளனமாய் சொல்கிறது.
காதல்.

கடிகார முட்களில்
நிமிடத்தின் பெருமையை
மெளனமாய் சொல்கிறது
காலம்.

மானுடம் வாழ
மரங்கள் வேண்டுமென்று
மெளனமாய் சொல்கிறது
இயற்கை.

இருளுக்குப் பின்னே
விடியல் உண்டென்று
மௌனமாய் சொல்கிறது
காலை.

முயன்றால்
முளைத்து எழலாம் என
மௌனமாய் சொல்கிறது விதைகள்.

பறப்பதற்கே சிறகுகள்
பறந்து வா என
மௌனமாய் சொல்கிறது
பறவைகள்.

சேமிப்பின் அவசியத்தை
செவிக்குள்ளே சொல்வதுபோல்
மெளனமாய் சொல்கிறது
எறும்புகள்.

விழுந்தாலும்
ஓடச் சொல்லி
மெளனமாய்ச் சொல்கிறது
அருவி.

பேசிக் கொண்டே
இருக்கச் சொல்லி
மெளனமாய்ச் சொல்கிறது
மனம்.

மௌனங்கள் எல்லாம்
அமைதியாய் பேச
மௌனத்தைத் தேடியே
மௌனமானேன் நான்.

அமைதிப் பெருவெளி
எங்கேனும் உண்டென்றால்
அங்கே அமைதி கொள்ள
ஆசையாய் ஏங்குது மனம்.

மௌனமாய் சொல்லுங்கள்
மௌனப் பெருவெளி
எங்கே உள்ளதென்று.
 
Top