எங்கள் தளத்தில் எழுத விரும்பும் எழுத்தாளர்கள் எங்களை கீழ் உள்ள மின்னஞ்சலில் தொடர்ப்புக்கொள்ளவும் நன்றி Email ID - narumugai.ink@gmail.com

பெண்மையே பேசு

admin

Administrator
Staff member
சித்து ருசித்த தருணங்களில் எல்லாம்
பூவாய் பேசினோம் மென்மை என்றார்கள்
அளந்து பேசினோம் கச்சிதம் என்றார்கள்
நிலவாய் பேசினோம் குளுமை என்றார்கள்
கண்களால் பேசினோம் நாணம் என்றார்கள்
புன்னகையில் பேசினோம் மழலை என்றார்கள்
ஒப்பனையில் பேசினோம் அழகி என்றார்கள்
ஒய்யாரமாய் பேசினோம் நளினம் என்றார்கள்
மணங்களில் பேசினோம் நந்தவனம் என்றார்கள்
வண்ணங்களில் பேசினோம் வானவில் என்றார்கள்
பார்வையில் பேசினோம் பாவை தேவை என்றார்கள்
மொழி தெரியாதே என்றோம் மெனக்கெடாதே என்றார்கள்
அவர்கள் தேவைகள் தீர்ந்த பின்னர்
இன்று மவுனங்களில் பேசுகிறோம்
மகிழ்ச்சி என்கிறார்கள்..
"பெண்மையை போற்றுவோம்!!"
அனைவரும் அறிந்ததே!!
அது "நிபந்தனைகளுக்கு உட்பட்டது"
சிலருக்கு மட்டுமே புரிந்தது!!
புரியாத கருமணிப் பள்ளத்தாக்குகளில்
தூரலாய் சாரலாய் சிறுமழையாய்
சிந்திய சிதறல்கள் எல்லாம்
கால்தடங்கள் பதித்துப் போகின்றன!!
வாட்டங்களில் உழன்று
சூறாவளிகளுடன் போராடி
உடைந்து நொறுங்கும் இதயச்சுவர்களில்
சேகரித்த வெம்மைகள் கூடி நின்று
வெள்ளாவி இட்டுக் கொண்டிருக்கின்றன
விழுங்கிய கார்மேகங்களிடம் இருந்து
ஒளிந்த முழுநிலவை மீட்பதற்கு!!!

சுடரி

வாய்ப்புக்கு
நன்றிகளுடன்,
அனிதா கோகுலகிருஷ்ணன்
 
Last edited:
Top