எங்கள் தளத்தில் எழுத விரும்பும் எழுத்தாளர்கள் எங்களை கீழ் உள்ள மின்னஞ்சலில் தொடர்ப்புக்கொள்ளவும் நன்றி Email ID - narumugai.ink@gmail.com

பெண்மையே பேசு

admin

Administrator
Staff member
பேரன்பும் பெருங்கருணையும்
பெய்யென பெய்யும்
பெண்மையே பேசு

பேராண்மையும் பெருந்தன்மையும்
பெட்டியில் பூட்ட அல்ல
பெண்மையே பேசு

கல்வியும் கலவியும்
சுயவிருப்பமென்று
சுதந்திரமாய் பேசு

வீரமும் விவேகமும்
ஆணுக்கு மட்டுமன்று
அனைவருக்குமென்று பேசு

வெற்றியும் வெளிச்சமும்
வேண்டுமென்று உழைத்து
உன்னுரிமையை உரக்க பேசு

சத்தமின்றி உனைச்சீண்டும்
சண்டாளர்களைச் சாடி
சமத்துவம் பேசு

சலுகையால் உனைச்
சாய்க்க எண்ணுவோரிடம்
சமூகநீதி பேசு

பெண்ணும் ஆணும்
பேரில் மட்டுமே பேதமென்று
பெருமையாய் பெண்மை பேசு

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

Thanks and Regards
UmaMaheswari Manoraj
"LEADERS change ideas in to actions and actions in to SUCCESS"
 
Top