எங்கள் தளத்தில் எழுத விரும்பும் எழுத்தாளர்கள் எங்களை கீழ் உள்ள மின்னஞ்சலில் தொடர்ப்புக்கொள்ளவும் நன்றி Email ID - narumugai.ink@gmail.com

மெளனப் பெருவெளி

admin

Administrator
Staff member
டல் குளித்து
சிவப்புக் கதிரவன்

தலை துவட்டும் முன்பே

துயில் கலைத்தெழுந்து

நீராடச் செல்கிறாய்

நீஇமைப்பொழுதிலும்
கால் பொழுதில்

உன்

பார்வை உரசும்

சுகத்தீயில்

குளிர்காய்ந்து உவக்கிறது

என்

கள்ளமனம்உன்
செம்பாதம் பட்டுச் சிலிர்த்த

தடாகக் குளிர் நீர்

விட்டப் பெருமூச்சில்

எழுந்து கலைகின்றன

அரை வட்ட அலைகள்நீரில் இறங்கி
நீ

மூழ்கிக் குளிக்கையில்

வெட்கி மறைந்து

எட்டிப்பார்க்கும்

குளவாம்பல் கூட்டத்தோடு

கூட்டுக்களவாணிகளாய்

இணைகின்றன

என் கண்கள்வெண்பனி முத்துக்கள் தூவிய
மரகதப் புல்வெளியில்

நடை போட்டுத் திரும்பும்

உன்னோடு

விரல் கோத்து நடக்கிறது
ஆசைக்காதல்காத்திருந்து
உனை வரவேற்றுச் சிரிக்கும்

பாதையோரப் பூக்களோடு

தவமிருக்கும் எனை நோக்கி

இதழ் மலர்த்தி

நீ ஒளிர்வித்த
மென்னகையில்

உடைந்து போகிறது

இத்தனை நாள்

எதிரியாய் திரை போட்ட
மெளனப் பெருவெளி

--இராஜசேகரன்,
22-L, ஐ.பி.கோயில் தெற்குத்
தெரு,
திருவாரூர் - 610 001
கைப்பேசி: 9751941781
 
Top