எங்கள் தளத்தில் எழுத விரும்பும் எழுத்தாளர்கள் எங்களை கீழ் உள்ள மின்னஞ்சலில் தொடர்ப்புக்கொள்ளவும் நன்றி Email ID - narumugai.ink@gmail.com

அக்னி சிறகே

admin

Administrator
Staff member
பெண்ணாய் பிறந்த என்னை
இந்த உலகத்தில்
யாருக்கும் பிடிக்கவில்லை....

இருந்தும்
உயிர் வாழ்ந்தேன்
இந்த ஜகத்தினில்....

பெற்றோர்களுக்காக
அயராது உழைத்தேன்...

என் இளையவர்களின் ஆசையை
என்னால் முடிந்த வரை
மனதார நிறைவேற்றினேன்....

உழைத்து உழைத்து
என் கால்கள்
மறுத்து விட்டன...
மனமும் சேர்ந்து தான்...

பிறகு....

திருமணம் என்னும் வேலி
என்னைச் சூழ்ந்தது....

பற்பல கனவுகள் எல்லாம்
மண்ணோடு மண்ணாய்ப் போயின....

என் கணவருக்காக....
கணவரின் குடும்பத்திற்காக....
இங்கேயும் அயராது உழைத்தேன்....

அப்போதும் நற்பெயர்
கிடைக்கவில்லை.

தினம் தினம்
வசை பேச்சுக்களை வாங்கி...

விதவிதமான பட்டங்களை
அவர்கள்....
எனக்கு கொடுத்த போது
என் காதுகள்
செவிடாகி போயின....

மனம் துவண்டு இருந்த
போது தான்....

என் வயிற்றில் முளைத்தது
ஒரு உயிர்....

என்னுடைய கவலையின்
மருந்தாய் இருந்தது
அந்த உயிர்....

என் உயிரோடு
என் பயணம்
சில நாட்கள்
இனிதாய் தொடர....

யாருக்கும் பிடிக்காத என்னை
அந்த புற்றுநோய்க்கு
பிடித்து விட்டது போல....

மார்பகப் புற்றுநோய்
என்னுள் நுழைந்து...

என் ஜீவனை
ஆட்டிப் படைத்தது...

தினம் தினம்
புற்றுநோயின்
செல்கள் வளர....

என்னுள் வலி
உயிர் போய்க்
கொண்டிருந்தது....

ஏன் இந்த நோய்???

நான் என்ன
மது அருந்தினேனா...
இல்லை....
புகையை தான்
ஊதித் தள்ளினேனா....

எதற்காக
இந்த நோய்???
என்று ஒவ்வொரு நிமிடமும்
அந்த இறைவனிடம் கேட்கிறேன்....

காரணம்
இல்லாமல்
நோயில் சிக்கித்
தவிக்கிறேன்...

புற்றுநோய் செல்கள்
என்னை கொன்றாலும்....

நான் நித்திம்
வருந்துவது...
என்னுள் தோன்றிய
உயிருக்காக
மட்டுமே....

என் பிள்ளைக்காக
எந்த நோயுடனும் போராட
நான் தயாரே!!!!


மார்பகப் புற்றுநோய் உள்ள
ஒரு பெண்ணின்
மனநிலையை என்னால் முடிந்த
அளவு ஒரு கவிதையாக
கொடுக்க முயற்சித்தேன்.
 
Top