எங்கள் தளத்தில் எழுத விரும்பும் எழுத்தாளர்கள் எங்களை கீழ் உள்ள மின்னஞ்சலில் தொடர்ப்புக்கொள்ளவும் நன்றி Email ID - narumugai.ink@gmail.com

பெண்மையே பேசு

admin

Administrator
Staff member
றைவனின் ஆணைப்படி...

என் அன்னையின் கருவில்
பெண்ணாய் சிசுவாய் உருவானேன்...

ஈரைந்து மாதங்கள் மிகவும்
பாதுகாப்பான ஒரே இடம்..‌‌..
என் தாயின் கருவறை மட்டுமே...

கருவறையில் இருந்து
விடைபெற்று....

என்னுடைய அழுகுரலின்
வாத்திய சத்தத்தில்...
இந்த புவியில் ஜனித்தவள்...

என் தாயின் தயவால்....
எனக்கு கள்ளிப்பால்
உணவாக இல்லாமல்...
தாய்ப்பால் அளிக்கப்பட்டது...

பெண்ணாய் பிறந்த
ஒரே காரணத்தினால்....
என் தந்தையின்
கடுங் கோபத்திற்கு ஆளாகி...

ஒன்றும் புரியா வயதில்...
பொக்கை வாயில்
சிரிப்பை உதிர்த்து...
தந்தையிடம் சென்றேன்

அவரின் சுட்டெரிக்கும்
வாக்கியங்களை மட்டுமே
என்னால் பரிசாக
பெற முடிந்தது...

அன்பும்....
பாசமும்...
அரவணைப்பும்...
தந்தையின் கண்டிப்பு...
என எல்லாவற்றையும் சேர்த்து...
என் அம்மாவே கொடுத்தார்...

இருந்தும்....
மனம் ஏங்கியது
எனது அப்பாவின்
பாசத்திற்கு....

சில வருடங்களுக்கு பின்...

மீண்டும்
இறைவனின் ஆணைப்படி...
நான் இருந்த அதே
என் அன்னையின் கருவில்...

ஆணாய் சிசுவாய் உருவாகி....
பூமியில் பிறப்பெடுத்தான்...

இருவருமே....

இறைவனின் ஆணைப்படி தான்...
இந்த பூமியில் ஜனித்தோம்...

ஆணாய் பிறந்தவனோ....

என் தந்தைக்கு
ராஜகுமாரனாகி போனான்....

பெண்ணாய் பிறந்த நானோ...

யாரென்று தெரியாமல்
தவித்துக்
கொண்டிருக்கும்
அவலமான நிலை????
 
Top