எங்கள் தளத்தில் எழுத விரும்பும் எழுத்தாளர்கள் எங்களை கீழ் உள்ள மின்னஞ்சலில் தொடர்ப்புக்கொள்ளவும் நன்றி Email ID - narumugai.ink@gmail.com

பெண்மையே பேசு

admin

Administrator
Staff member
விண்ணில் வலம் வந்த நீ
மண்ணில் வலம் வரமாட்டாயா??

பலகலை பயின்ற நீ
கலை இழந்து விடுவாயா??

அறிவியல் அறிந்த நீ
அறியாமை இருளில் தவிப்பாயா??

தொழில்நுட்பம் கற்ற நீ
தொழில் தொடங்க மாட்டாயா??

வழக்கை வாதாடும் நீ
விதிகளை மீறி வாழ்வாயா??

கவிதை எழுதிய நீ
காவியம் படைக்க மாட்டாயா??

தள்ளி நின்ற நீ
துணிந்து நில் பெண்ணே!!

பாரதியின் புதுமை பெண்ணாக
படிகள் தாண்டி தடம்
பதிக்க வா பெண்ணே!!!

- கி. காரோலின்மேரி
 
Last edited:
Top