எங்கள் தளத்தில் எழுத விரும்பும் எழுத்தாளர்கள் எங்களை கீழ் உள்ள மின்னஞ்சலில் தொடர்ப்புக்கொள்ளவும் நன்றி Email ID - narumugai.ink@gmail.com

பெண்மையே பேசு ❤

அகச்சிறையில் ஆயிரம் ஆசைகளை
பூட்டி...!
தாரமாய் ஒருவனை மடி தாங்கி
தொப்புள் கொடி அறுப்பில்,
ஒரு உயிரை உலகுக்களித்து!
அவன் முதல் பாசறையாய்!
அறியாமை எனும் இருள் அகற்றி!
நல்லாசானாய்!
அவனை வழி நடத்தி...!
தோய்ந்து போகும் போது
தோல் கொடுக்கும் நல் தோழியாய்...!
அவன் வெற்றியின் போது
தட்டி கொடுக்கும் சகோதரியாய்...!
அவன் சாதனையின் வழித்துணையாய், ஏணிப்படியாய்
மாறிய பெண்ணே....,
அடுப்பங்கரையையே அடைக்கலமாக, தந்து...!
பொட்ட புள்ள என்ன தெரியும்?
என்று கேட்போர் முன்...!
துணிந்து பேசு!
பெண் இல்லாத ஒரு துறை உண்டோ?
இப்பூவுலகில்..!
பெண்ணின் சக்தி எளிமையானது
என்ற எண்ணத்தை துறந்து!
எண்ணிப்பாறடா!
உன்னை...!
இப்பிறப்பை உனக்ளித்த
மகா சக்தி நாமடா என்று..!
 
Top