'பெண்மையே பேசு'
பெண்ணை
பேசக்கூறினானோ...?
பெண்ணாய்
பேசக்கூறினானோ...?
பெண்ணவளைப் பேசக்கூறினானோ...?
நான் கூறினேன்
பெண்ணே பேசு
மை கொண்டு பேசு...
மேடையேறி பேசட்டும்
கேட்போர் வாசல் கடக்க
மறப்பர்...
கூவியே பேசட்டும்
கூச்சல் என்றே செவி அடைப்பர்...
பெண்ணியம் பாட
பின்னோடு வரும் கூட்டம்
அதுவே மிதிக்கும்
பெண்ணையும் புகழ் மாலை சூடியும்...
சரிநிகராய் வேண்டாம்
சரிசமமாய் வேண்டாம்
சந்தையில் வஞ்சகப் புகழ் பாடவும் வேண்டாம்
பேசு நீயும்
பெண்ணாய்
பெண்மை மாறாய்
மை கொஞ்சம் சேர்ப்பாய்
உனக்காய் என்றும்
உன் வீட்டில் தொடங்கிடு
உன் சுற்றம் உணரட்டும்
பின்னே பரவட்டும்
நாடும் விளங்கட்டும்
பெண்ணை
பேசக்கூறினானோ...?
பெண்ணாய்
பேசக்கூறினானோ...?
பெண்ணவளைப் பேசக்கூறினானோ...?
நான் கூறினேன்
பெண்ணே பேசு
மை கொண்டு பேசு...
மேடையேறி பேசட்டும்
கேட்போர் வாசல் கடக்க
மறப்பர்...
கூவியே பேசட்டும்
கூச்சல் என்றே செவி அடைப்பர்...
பெண்ணியம் பாட
பின்னோடு வரும் கூட்டம்
அதுவே மிதிக்கும்
பெண்ணையும் புகழ் மாலை சூடியும்...
சரிநிகராய் வேண்டாம்
சரிசமமாய் வேண்டாம்
சந்தையில் வஞ்சகப் புகழ் பாடவும் வேண்டாம்
பேசு நீயும்
பெண்ணாய்
பெண்மை மாறாய்
மை கொஞ்சம் சேர்ப்பாய்
உனக்காய் என்றும்
உன் வீட்டில் தொடங்கிடு
உன் சுற்றம் உணரட்டும்
பின்னே பரவட்டும்
நாடும் விளங்கட்டும்
Last edited: