எங்கள் தளத்தில் எழுத விரும்பும் எழுத்தாளர்கள் எங்களை கீழ் உள்ள மின்னஞ்சலில் தொடர்ப்புக்கொள்ளவும் நன்றி Email ID - narumugai.ink@gmail.com

எல்லையற்ற காதலே

admin

Administrator
Staff member
விதைகளிமும் காவியங்களிலும் தான் காதல் என்று நினைத்திருந்தேன் நான் ..

இன்றைய சமூகம் மற்றும் இன்று வரும் படங்களில் காணும் காதலினால் நம்பிக்கையில்லை எனக்கு உண்மை காதலில் ..

அது ஒருவகை இனக்கவர்ச்சி என்றெண்ணியிருந்தேன் உன்னைக்காணும் வரை ..

எந்த வித சலனமுமின்றி என்னுள் நுழைந்தாய் நீ ..

ஒரு துளி அலங்காரமில்லை உன் முகத்தில் .. ஆடம்பரம் இல்லை உன் உடையில் .. திமிரில்லை உன் பேச்சில் ..
வன்மம் இல்லை உன் பார்வையில் ..
உன் அகத்தின் அழகு உன் முகத்தில் தெரிந்தது கண்ணம்மா ..

உண்மை காதல் இந்த இளைஞரிடம் இல்லை முக்கியமாக பெண்கள் மிகவும் மோசம் என்றெண்ணி இருந்த என் உச்சந்தலையில் அப்படியில்லை என்று ஓங்கி அடித்துச்சொன்னது உன் பெண்மை ..

எத்தனை மென்மையடி நீ ..
உன் பார்வை ஒரு வரம் ..
வார்த்தைகளை மெதுமெதுவே தேர்ந்தெடுத்து நீ பேசும் விதம் வசீகரம் ..
ஆடைகளில் உள்ள நேர்த்தி உன்மேல் உள்ள மதிப்பை பன்மடங்கு அதிகரிக்கிறது ..
ஆர்பாட்டமில்லா பேச்சிலும் புன்சிரிப்பிலும் நான் என்னை தொலைத்தேன் ..

உன்னை பார்த்துக்கொண்டே இருக்க ஆசை .. என் மனதில் உள்ள காதலை உனக்கு தெரிவிக்கும் தருணம் நாணத்தால் வெட்கி தலைகுனியும் பொழுது என் சீண்டல் பார்வை உன்னைத்தீண்ட ஆவலாக உள்ளது காதலியே ..

நெருங்கி வந்து என் காதலை சொல்ல வார்த்தைகள் அத்தனையும் சேகரித்தேன் இருப்பினும் உன் கண்ணியமான பெண்மை என்னைத்தடுக்கின்றது ..
மற்ற ஆடவர்களை போல தான் நீயுமென்று என்மேல் அமிலப்பார்வை வீசாதே கண்மணி ..

என் கண்களினால் காதல் மொழி கூறுகிறேன் காதலியே ..
புரிந்து நீ ஒரு புன்னகை செய் ..
நீ போதும் போதும் என்று கூறும் அளவிற்கு காதல் வசனம் பேசி என் காதலை உனக்கு உணர்த்துகிறேன் ..
காதல் மொழி பேச வருவாயா .. காலத்திற்கும் என் காதலில் கரைய சம்மதமா ?
மனம் முழுவதும் காதலை சுமந்து உன் ஓரப்பார்வைக்காக தவம் கிடக்கின்றேன் என்னுயிரே!
 

admin

Administrator
Staff member
கவிதை 2 :


து ஒரு சிறிய இடைவேளையா அல்லது நீண்டதொரு பிரிவா

எதிர்பாராத பல திருப்பங்கள் நம்வாழ்வையே புரட்டிப்போட்டுவிடும் ..
பல விஷயங்கள் நல்ல மாற்றங்களாக அமையும் ஒரு சிலவே நம்மை வேரோடு சாய்த்துவிடும் ..

உன் விஷயத்தில் இவையனைத்தும் நடந்தனவே என் ரகசிய ஸ்நேகிதனே ..

உன் வருகை என்னுள் பெரிய மாற்றத்தை ஏற்படுத்தியது ..
என் வாழ்வை புரட்டிப்போட்டது உன் சந்திப்புகள் ..
நான் வேரோடு சாய்ந்தேன் உன் பக்கம் ..

உன் பார்வையின் அர்த்தங்கள் புரியவில்லை இன்றும் எனக்கு ..
அதில் உள்ளது சந்தோஷமா அல்லது சந்தேகமா ..

எதுவாயினும் உன் பார்வைகளுக்கு கோடானகோடி நன்றிகள் ..

உயிர்த்தெழுந்தேன் நான் பலமுறை ..
புதுப்பித்தது என் வாழ்வு..
அடுத்து எப்பொழுது கிடைக்கும் உன் பார்வையின் வரம் என காக்க தொடங்கினேன் ..

நின் செயல்களின் அர்த்தம் நானறியேன் ..
எனக்கு சாதகமானதாக எடுத்துக்கொள்ள துடித்தது என்னிதயம் ..

சரியா தவறா என்று இன்று வரை என்னுள்ளே மிகப்பெரிய போராட்டம்..

உனை காணும்பொழுதுகளில் சரி என்றது இந்த பேதை மனது ..
வேண்டாம் இவை உனக்கு நல்லதல்ல என்று இடித்துரைத்து மனசாட்சி என்னும் கடவுள் ..

இவை அனைத்துக்கும் நடுவில் தத்தளித்து கொண்டிருக்கிறேன் ஸ்நேகிதனே ..

அடுத்த முறை சந்திப்போமா அல்லது இதுவே கடைசி முறையா என்று ஒவ்வொரு முறையும் கலங்கியிருக்கிறேன் ..

இவையனைத்தும் நீயறிவாய ?
எப்படி சொல்லி புரிய வைப்பேன் உனக்கு ? காலம் உனக்கு பதில் சொல்லுமா
அல்லது காலன் அழைத்து செல்லும்வரை என்னுள்ளேயே புதைந்து கிடக்குமா ?

இனியொரு முறை பார்வை பரிமாற்றம் நடக்குமா.. அல்லது இது நீண்டதொரு பிரிவா..

என்னைப்போலவே நீயும் என்னை ஒரேயொரு முறை ஓரு நொடியேனும் நினைப்பாயா ..அல்லது நேரில் கண்டால் மட்டுமே எனையறிவாயா ?

வாழ்வில் ஒருமுறையேனும் உன்னுடன் உன் கண் நோக்கி பேசி விட ஆசை ..

பார்ப்போம் காலம் நமக்கென்ன விதித்திருக்கிறதென்று ..
 
Top