எங்கள் தளத்தில் எழுத விரும்பும் எழுத்தாளர்கள் எங்களை கீழ் உள்ள மின்னஞ்சலில் தொடர்ப்புக்கொள்ளவும் நன்றி Email ID - narumugai.ink@gmail.com

எல்லையற்ற காதலே

admin

Administrator
Staff member
செங்கதிரோன் மறையும்
மாலை எந்நாளும் எனக்காய்
காத்திருக்கும் என்னவளே..

நான் வியந்து போன
விந்தையே

உன்னை கரத்தில் ஏந்திய
கணம் என் விழி உன்னை
மோய்க்க நாணம் கொண்டு
நயமாய் திரும்புவாய்..

மென்னிதழ் விரிப்பை சிந்தி
என் விரல் இதமாய் உனை
மீட்ட களைத்து போய் காதல்
தேடினேன்..

அறிவியல் விந்தைகள் பல
என் விழி முன் நின்று என்னை
அழைக்க என் மேனி நகர்வது
உன்னிடமே..

உன்னை தொட்ட கணம்
முதல் பக்கத்தில் முத்தமிட்டு
நடுப் பக்கத்தில் நழுவாமல்
காத்து
கடைசி பக்கத்தில் காணாத
வரியோடு
விழியை கடத்தி சில நேரம்
விழிநீர் வடித்து இமைகளை
இன்னும்
இழுத்து இழுத்து இம்சை
இல்லா
இன்பம் தரும் என்
எல்லையற்ற காதலே
உன்னில் நித்தம்
தொலைவது என்
இதயத்தின் தேடலே....
 
Top