எங்கள் தளத்தில் எழுத விரும்பும் எழுத்தாளர்கள் எங்களை கீழ் உள்ள மின்னஞ்சலில் தொடர்ப்புக்கொள்ளவும் நன்றி Email ID - narumugai.ink@gmail.com

சுயம் நோக்கு

admin

Administrator
Staff member
தாயின் கருவிலே
உருகுலையும் சில உயிர்கள்
உருவெடுத்து உலகம் கண்ட
சில கணத்திலே மாண்டு
போகும் சில உயிர்கள்
உதிரம் தந்தவளாளே
உதறியெறியும் சில உயிர்கள்
இதற்கு இடையில் நீயும்
பிறந்தாய்...
நிரந்தரம் இல்லா
இவ்வுலகில்..
நித்திரையின் கனவில் வரும்
இன்பம் துன்பம் எல்லாம்...
நீ கண் விழித்தாள்
காணாமல் போய்விடும்...
உனக்கு ஏற்பட்ட
காயங்களைநீ மறந்துவிடு...
உன்னை காயப்படுத்தியவர்களை
நீ மன்னித்துவிடு...
பட்டை திட்டப்படும் வைரமே
ஜொலிக்கும்.
வலி கண்ட வாழ்வே உயரும்
நிழல் கூட இறுதி வரை
வராதா நிலையில்
வாழ்க்கை சொல்லும்
உன்னதம் உன் வாழ்கை
உன் கையில்
உன் சுயம் நோக்கு
அதுவே உன் வெற்றியின்
இலக்கு...
 
Top