எங்கள் தளத்தில் எழுத விரும்பும் எழுத்தாளர்கள் எங்களை கீழ் உள்ள மின்னஞ்சலில் தொடர்ப்புக்கொள்ளவும் நன்றி Email ID - narumugai.ink@gmail.com

பெண்மையே பேசு

admin

Administrator
Staff member
நித்தம் பலர் பார்வையால்
என்னை கேட்கும் கேள்வி..
சில பார்வை அருவெறுப்புடன்
சில பார்வை கேலியுடன்
சில பார்வை பரிகாசத்துடன்
சில பார்வை பரிதாபமாய்
என பார்வை பலவாய்
இருந்தும் அது கேட்கும்
கேள்வி ஓன்றே...
அக்கேள்விக்கு பதிலாய்..
என் பெண்மையே பேசு
நான் உணர்ந்த
பெண்மையை உலகம் ஏற்க
மறுக்க உதாசினப்படுத்துவர்
என்று அறிந்தும் உயிரென
ஏற்றேன்
ஏனெனில் பெண்மை
என்னுள் பிறந்ததால்..
பெண்மை பெண்ணுக்கு
மட்டும் சொந்தமா
ஆணாய் பிறந்து என்னுள்
பிறந்த பெண்மையை நான்
ஏற்றால் அது தவறாகுமா..
என்
பெண்மையே பேசு..
 
Top