எங்கள் தளத்தில் எழுத விரும்பும் எழுத்தாளர்கள் எங்களை கீழ் உள்ள மின்னஞ்சலில் தொடர்ப்புக்கொள்ளவும் நன்றி Email ID - narumugai.ink@gmail.com

❤காதல் கவிஞன் ❤

Eswaran

Member
❤ஒரு கவிஞன் உருவான கதை(கவிதை)❤


காணும் காட்சிக்களையெல்லாம் கவிதைகளாய் வார்த்தேனே...! பெண்ணே...!
உன்னை கண்டப்பின்னால்...! ???

பித்தனும் நானாக மாறிப்போனேனே...!
உன் கிள்ளை மொழி அழகால்...!


சிற்பியும் சிலையாகி போனான்...!
உன் சிகை அழகை கண்டப்பின்னால்...!

சித்திரங்களும் சிதறி ஓடியது...!
உன்னை வரைந்த ஓவியனைத் தேடி...!

கம்பன் வீட்டுக்கட்டுத்தறியும் கவிப்பாடுமாம்…!
நானும் உன்னால் கவிப்பாடும் சிறு சுடர் ஆனேனே...!


இப்படி மாயவனாய் மாறியபின்னும்…!
இன்னும் உன்னுள் ஆராயாத
பக்கங்கள் தான் எத்தனையோ...!

விவரிக்க முடியாத விவாதமே நீ...!
❤பெண்ணே❤

அன்புடன் ❤
மினிஷா சிவன் ❤??
 
Top