எங்கள் தளத்தில் எழுத விரும்பும் எழுத்தாளர்கள் எங்களை கீழ் உள்ள மின்னஞ்சலில் தொடர்ப்புக்கொள்ளவும் நன்றி Email ID - narumugai.ink@gmail.com

மௌனப்பெருவெளி

admin

Administrator
Staff member
னக்கான மெளனங்கள் ஆழிப்பேரலையானது

என் மெளனங்கள்
கூர்வாளின்
கூர்மையைவிட
வீரியமானது

என் மெளனங்கள்
சிந்தையை சிலிர்க்க
செய்வது

என் மெளனங்கள்
ஏகாந்தத்தை ரசிக்க
வல்லது

என் மெளனங்கள்
எதிர்காலம் பற்றிய
கேள்வியானது

என் மெளனங்கள்
உன் புத்தியை
குடைந்திடும்
வல்லமை வாய்ந்தது

என் மெளனங்கள்
வெறுமையானது

என் மெளனங்கள்
ரணமானது

என் மெளனங்களின் காலப்பெருவெளிகளில்
கரை தேடி ஓடாதே
தொலைந்து போக கூடும்

ஏனெனில் மெளனங்கள்
வார்த்தைகளை விட
ஆயிரம் மடங்கு
வலிமையானது.....

-ஐஸ்வர்யா
 
Top