எங்கள் தளத்தில் எழுத விரும்பும் எழுத்தாளர்கள் எங்களை கீழ் உள்ள மின்னஞ்சலில் தொடர்ப்புக்கொள்ளவும் நன்றி Email ID - narumugai.ink@gmail.com

பெண்மையே பேசு

admin

Administrator
Staff member
றக்கையை பரித்து
பற என கேலி சித்திரம்
போல் வாழும் இழி நிலை
மாறிட பெண்மையே
நீயே பேசு

தா என கேட்டு பேசாதே
என் உரிமை என
எடுத்துரைத்து பேசு

அடிமையாகவும்
வேண்டாம்
அடிமையாக்கவும்
வேண்டாம்
தலைகணமும்
வேண்டாம்
தலைகுனியவும்
வேண்டாம்
பெண்மையே
நீ நீயாய் இரு

உப்பாய்
ஓளிர்வாய்
உள்ளார்க்கு
எடுத்துக்காட்டாய்​
நீ நீயாய் இருந்து பேசு

பார் போற்றும்
பெண்மையே நீ பேசு....

-ஐஸ்வர்யா
 
Top