எங்கள் தளத்தில் எழுத விரும்பும் எழுத்தாளர்கள் எங்களை கீழ் உள்ள மின்னஞ்சலில் தொடர்ப்புக்கொள்ளவும் நன்றி Email ID - narumugai.ink@gmail.com

அக்னி சிறகே

admin

Administrator
Staff member
பாரதி காணாத
புதுமைப்பெண் !

நிமிர்ந்த நன்னடை
நேர் கொண்ட பார்வை
நிலத்தில் எவர்க்கும் அஞ்சாத
தன்மை
அநீதியை கண்டால் துடிக்கும்
நெஞ்சம்
பெண்ணியம் தவறாமல்
நடக்கும் எண்ணம்
ஆணுக்கு பெண்
நிகரென்றுரைக்கும்
வண்ணம்
சொல்லும் செய்கையும்
அதையே பிரதிபலித்து
சித்தம் சிதறாமல் சிந்தனை
தவறாமல்
சமூகம் மீது அளவில்லா
பற்றும்
குடும்ப பொறுப்பை
மறுக்காமல் ஏற்றும்
துறைகள் கடந்தும் துன்பம்
பொறுத்தும்
தூய நெறிதனின் மகிமையை போற்றியும்
கிரீடம் கனத்தாலும் தாங்கும்
தலை கணக்காமல்
கற்றதை கற்பிக்கும் பரந்த
மனமும்
நன்று அல்லாதை
நினைக்காத குணமும்
பணிவு அறிந்து துணிவு
புரிந்து
அடங்கும் தன்மையும் அடங்கா நேர்மையும்
நிறைந் சபையின் நாகரிகம்
ஏற்றும்
கவலை மறந்து சிரிக்கும்
உதடும்
கொடுஞ்சொல் பேசா நாக்கும்
பயம் அறியாது நோக்கும்
பார்வையும்
தீதில் நல்லதை பிரிக்கும்
புத்தியும்
பாவம் புரியாமல் கெடுதல்
நினையாமல்
தன்னலம் துறந்து பொதுநலம் அணைத்து
ஏற்றமும் தாழ்வும் ஏற்று நடந்து வாழ்வியல் முறையை
சித்தியுடன் கையாண்டு
அகிலம் போற்றும் வண்ணம்
மமுயன்று முன்னேறி
எவள் ஒருத்தி சிறகடித்து
பறக்கிறாளோ
அவளே பாரதி காணாத புதுமைப்பெண்ணாவள்...
 
Last edited:
Top