எங்கள் தளத்தில் எழுத விரும்பும் எழுத்தாளர்கள் எங்களை கீழ் உள்ள மின்னஞ்சலில் தொடர்ப்புக்கொள்ளவும் நன்றி Email ID - narumugai.ink@gmail.com

இயற்கை என்னும் பேரழகி

Eswaran

Member
யாரிவள்…!
காரிகையா…!
கார்மேகமா…!

அவளை ரசித்த பெரும்வெள்ளத்தில் சிறுதுளியாய் நானும்…!

அவளை வர்ணித்த கவிஞர்களில் கடைக்கோடியில் நிற்கும் கடைக்குட்டியாய்…!

மண் தாண்டி…
விண்ணையும் தலை தாழ்த்த வைக்கும் தாரகையாம்...!

மேற்ப்பூச்சு இல்லா பூலோக மேனகையாம்…!

சலசலக்கும் சருகுக்கும்
சங்கீதம் கற்று தந்தவளாம்…!

ஆர்ப்பரிக்கும் அருவிக்கும் அழகை பரிசளித்தவளாம்…!

கடலுக்கும் காற்றோடு சேர்ந்து விளையாடும்
அலை விளையாட்டை சொல்லி கொடுத்தவளாம்…!

பொன் கொடுத்தும் வாங்க முடியா பொக்கிஷம் அவளே…!

❤இயற்கை என்னும் பேரழகி❤

அன்புடன்
❤மினிஷா சிவன் ❤
 
Top