எங்கள் தளத்தில் எழுத விரும்பும் எழுத்தாளர்கள் எங்களை கீழ் உள்ள மின்னஞ்சலில் தொடர்ப்புக்கொள்ளவும் நன்றி Email ID - narumugai.ink@gmail.com

இவள் வசந் ‘தீ’ –3

இவள் வசந் ‘தீ’ –3​முன்கதை சுருக்கம்

வீட்டில் வசந்திக்கு திருமண ஏற்பாடுகள் நடந்து கொண்டிருக்க, சீர் வரிசையில் பத்து பவுன் குறைவது சம்பந்தமாக ராகவனும் , பத்மாவும் பேசிக்கொண்டிருக்க , வெளியே சென்றிருந்த வசந்தியும் , தங்கை நிஷாந்தியும் வீடு திரும்ப, வசந்தி கோபத்துடன் தந்தையை நோக்கி வருகிறாள்.இனி…. கோபத் ‘தீ’ –3தன்னை நோக்கி மகள் கோபமாக வருவதைக் கண்ட ராகவன் திகைத்து நிற்கின்றார். அம்மா பத்மாவும் தாங்கள் பத்து பவுன் நகை விஷயமாக பேசியதை மகள் கேட்டிருப்பாளோ என பயந்து நிற்கிறாள்.பொதுவாக ஆண் பிள்ளைகளின் கோபத்தை தணித்து விடலாம். ஆனால் செல்லமாக வளர்க்கும் பெண் பிள்ளைகளின் கோபம் , அவர்கள் பிடித்த முயலுக்கு வால் நீளம் என்ற பிடிவாதத்துடன் இருக்கும். யாராலும் சமாதனப்படுத்த முயற்சி செய்தால் அவர்கள் எதிரிகளாக மாறி விடுவார்கள். அதிலும் வசந்திக்கு கோபம் வந்தால் அவளை சமாதானப்படுத்துவதற்குள் சாப்பிட்டது எல்லாம் ராகவனுக்கு உடனே செரித்து விடும்.

“ என்னம்மா, கோபமா வர்றே. சந்தையில ஏதாவது பிரச்சனையா ?”

மேகலா கோபத்தில் வெடித்தாள்.

” இனி எவன் முகத்துல விழிக்க கூடாதுன்னு நினைச்சேனோ அவனே முன்னாடி வந்து நிக்கிறான். அந்த முகத்தை பார்க்க பிடிக்கலை. இதோட கடைசி. இனி அவன் வரட்டும். அவனை…”

பற்களை நறநறவென கடித்தாள் வசந்தி.பத்மா குழம்பினாள். பின் முகம் மலர்ந்தாள்.

“ இனி அவன்….ஓஹோ இனியவனைப் பார்த்தியா. அதுக்கு ஏமா இப்படி கோபிக்கற ?”

இனியவன் வேறு யாருமல்லா. வசந்தியின் முறைப்பையன். பத்மாவின் தம்பி மகன். பத்மாவிற்கும், அவளது தம்பிக்கும் அவர்கள் பெற்றோர் விட்டுப் போன சொத்தினால் ஆரம்பத்தில் எந்த பிரச்சனையும் இல்லை. ஆனால் பத்மா தம்பி ஏதோவொரு தொழில் தொடங்குகிறேன் என ஆரம்பிக்க , திடீர் நட்டத்தால் வறுமை சூழ தம்பி மனமுடைந்து இறந்து போக அவர்கள் குடும்பம் சரோஜாவுடன் மகன் இனியவனுடனும் நடுத்தெரு குடும்பமானது, பத்மா குடும்பம் நடுத்தர குடும்பமானது.. ( இனியவன் தன் பெயரை தமிழ் இலக்கியம் மீது கொண்ட ஆர்வத்தால் இலக்கியன் என பெயரை மாற்றிக்கொண்டான் என்பது தனி கதை }.பத்மா , தம்பியின் குடும்பத்திற்கு உதவி செய்ய நினைத்தாலும் வறட்டு பிடிவாதத்தாலும், பணத் திமிரிலும் ராகவன் உதவி செய்ய விடவில்லை. ராகவன் போலவே மகள் வசந்தியும் கொஞ்சம் பணத் திமிர் உள்ளவள்தான். இருவரிடமும் தம்பி குடும்பத்திற்காக பரிந்து பேசி தோற்றுப் போனாள் பத்மா. அவர்களும் இவர்கள் பக்கம் வருவதில்லை. சரோஜா தனது மகனை சிரமப்பட்டு வளர்த்து , இன்று அவன் ஒரு வாகனத் தொழிற்சாலையில் வாகன பழுது நீக்கும் பிரிவில் பணிபுரிகின்றான்.“அம்மா, அவன் உன்னோட தம்பி பிள்ளைதான். ஆனா எனக்கு மாப்பிள்ளை கிடையாது. நான் கட்டிக்க போறவருடைய மாத வருமானம் 80 ஆயிரம். ஆனா இவன் வெறும் 20 ஆயிரம் சம்பளத்திற்கு மாரடிச்சிகிட்டு இருக்கான்.”பத்மா குறுக்கிட்டாள்.

“ ஏய் , என்ன வாய் நீளுது. ஆயிரம் இருந்தாலும் அவன் உனக்கு முறைப்பையன். உனக்கு பிடிக்கலைன்னா ஒதுங்கி போக வேண்டியதுதானே., முறைப்பையன்னா முறைக்கறது இல்ல”.“ பத்மா , அவளை ஏன் சத்தம் போடுற, நமக்கும் அவங்களுக்கும் தொடர்பு விட்டு போச்சு. நீ எங்களுக்குத் தெரியாம அம்மாகிட்டேயும், மகன்கிட்டேயும் பேசிகிட்டுதான் இருக்க. நாம கஷ்டப்பட்டாலும் யாருகிட்டேயும் கை ஏந்தாம வைராக்கியமா வாழ்ந்து காட்றா உன் தம்பி பொண்டாட்டி. அதுக்காக நம்ம தகுதியை விட்டுக் கொடுக்க முடியுமா ?”“ அப்பா சரியா சொன்னீங்க, நீங்க என்னையும் , அப்பாவையும் பணத்திமிர் பிடிச்சவங்கன்னு நினைப்பீங்க. ஆனா அதுபத்தி எங்களுக்கு கவலை இல்லை. இன்னைக்கு பிணம் சுடுகாட்டுக்கு போகனும்னாலும் பணம் வேணும்”.“ என்னடி பெரிய மனுஷி மாதிரி பேசுற, நாம வாழ்ற வாழ்க்கை என் பெத்தவக வழி சொத்து . என் தம்பி துயர நேரம் அவன் குடும்பம் அந்த நிலைக்கு வந்துருச்சு .அதுக்காக இளக்காரமா பேசலாமா ?”.“ அம்மா , உன் பழைய கதையை சொல்ல ஆரம்பிச்சிட்டியா ? பழைய புராணம் தேவை இல்லை”.“ சரியா சொன்னம்மா. செருப்பை வீட்டுக்கு வெளியேயும், விளக்கமாற்றை வீட்டுக்கு பின்னாடியும்தான் வைப்பாங்க”பத்மா மனம் கசிந்தாள். மெதுவாக அவள் தயங்கி தயங்கி அந்த கேளவியைக் கேட்க வீடு இரண்டானது ,கலவரம் உண்டானது.

அந்தக் கேள்வி என்ன ?

காத்திருங்கள்…

வசந்தி வருவாள்…
 
Last edited:
Top