எங்கள் தளத்தில் எழுத விரும்பும் எழுத்தாளர்கள் எங்களை கீழ் உள்ள மின்னஞ்சலில் தொடர்ப்புக்கொள்ளவும் நன்றி Email ID - narumugai.ink@gmail.com

பெண்மையே பேசு

admin

Administrator
Staff member
பெண்மையை பேசு


பெண்மையை பேசிட இயலுமா

எங்கனம் பேசுவேன் பெண்மையே!

பெண்மையே நீ மென்மை அல்லவா

முதலில் மென்மையாக பேசு!


பெண்மையே பேசிடு மென்மையாய் பேசிடு!

பிறகு கொஞ்சம் வன்மையாக பேசிடு!


நீ மென்மையாக பேசியதால் இராவணன் உத்தமனானான்.

நீ வன்மையாக பேசியதால் கோவலன் நல்லவனானான்..


உன் மொழியே ஆணுக்கு சிலசமயம் இலக்கணம் ஆகியது..


நாளுக்கு நாள் மாறி வரும் நாகரீக உலகில்

பெண்மையே நீ

மென்மையாக பேசு..


ஒவ்வொரு முறையும் உன்னை

நாசம் செய்யும் இனத்துக்கு எதிராக

வன்மையாக பேசிடு..


மேடையில் உனக்காக இட ஒதுக்கீடு கேட்கும் அரசியல் முதலைகள்

ஒருபக்கம்..

நீ தனியாக நடந்திடும் போது குறுக்கிடும் நாய்கள்

ஒருபக்கம்..

பேசிடு அவர்களுக்கு எதிராக மிக வன்மையாக பேசிடு..


ஓடி விளையாடு பாப்பா

என்ற

முண்டாசுக் கவிஞன்

கண்ட பெண்மையே

உன்னை நாசம் செய்யும் ஆண்களுக்கு எதிராக

உரக்கப் பேசிடு!

உறுபுலியைப் போல் பேசிடு!


பெண்மையை உண்மையாக பேசு..

இனி நீ சொல்லுவாய்' இனிமேல்தான்

நீ சொல்லுவாய்..

உனக்காக பேசிடும் உள்ளங்கள் இருக்குது என்று..


உரக்க பேசு!

சில சமயம் உரிமை பேசு!


உன்னை வாழ்த்த மேடைகள் ஆயிரம்..

கரகோஷம் எழுப்ப கைகள்

கோடி வந்து சேரும்..


உன் எதிரி கோரத் தாண்டவம் ஆடினாலும்..

காலம் நேரம் பாராது

கடந்து வா..

சாஸ்திரங்களை சாக்கு போக்குகளை பேசும் சதிகாரர்களை

பார்த்து பேசு

சற்றே வன்மையாக

பேசிடு!


உண்மையாக பேசிடு! வன்மையாக பேசிடு!

உரத்து பேசிடு!

உரிமைக்காக பேசிடு

பெண்மையே பேசு!


அலெக்ஸ் ராசரட்னம்
பிரான்ஸ்.
 
Top