எங்கள் தளத்தில் எழுத விரும்பும் எழுத்தாளர்கள் எங்களை கீழ் உள்ள மின்னஞ்சலில் தொடர்ப்புக்கொள்ளவும் நன்றி Email ID - narumugai.ink@gmail.com

இவள் வசந் ‘ தீ ‘ --- 11

இதுவரை வசந் ‘தீ ‘

எதிர்பாராதவிதமாக நிச்சயக்கப்பட்ட திருமணம் தடைபட முறைப்பையன் இலக்கியனுக்கு வசந்தியை திருமணம் செய்து கொடுக்கின்றார்கள். திருமணம் ஆன முதல் நாளே வசந்தி சொன்ன நிபந்தனை கேட்டு இலக்கியன் வெகுண்டெழுகின்றான்.மோதல் ’தீ ’ –11“ என்ன பேச்சு பேசுற ? புரிஞ்சுதான் பேசுறியா இல்லை புத்தி கெட்டு போயிருச்சா ? கல்யாணம் கட்ட மறுத்து மண்டபத்தை விட்டு கோழைதனம்மா வெளியேறினவனை மறக்காம, உன்னை கட்டிகிட்ட என்னை வெறுத்து அவன்தான் வேணும்னு ஒத்த கால்ல நிக்கறியா ? “

“ யார் என்ன சொன்னாலும் கவலையில்லை ? எனக்கு பிடிச்சிருக்கு கேக்கறேன். இதுல என்ன தப்பு இருக்கு ? “

“ புரிஞ்சுதான் பேசுறியா இல்லை புரியாம பேசுறியா ? “ மறுபடி சொல்றேன் . உன்னை அத்தனை பேர் முன்னாடி கேவலப்படுத்தி உன்னை மறுத்து மண்டபத்தை விட்டு வெளியேறினவன் அவன். சரி, அந்த சமயத்துல என்னை கேட்டாங்கல்ல, அப்பவே வேணாம்னு சொல்லியிருக்கலாம்ல. ஒண்ணும் சொல்லாம இப்ப வந்து புதுசா என்னமோ நிபந்தனைன்னு விளங்காத ஒண்ணை கேட்டா என்ன அர்த்தம் ? “

” மறுபடி சொல்றேன் , ஒரு பொண்ணு விருப்பப்படறது தப்பா ? அப்படி நான் என்ன தப்பா கேட்டுட்டேன் ? “

இலக்கியன் திரும்பி ஒரு பார்வை பார்த்தான். இரு கைகளாலும் தலையில் அடித்துக் கொண்டான்.

“ இந்தா பாரு, ஒரு மனிதனுடைய வாழ்க்கையில் மூணு நிலைதான் வாழ்க்கை. ஒண்ணு பிறப்பு , இண்ணொன்னு திருமணம் கடைசி இறப்பு. இதுல அவன் தெளிவா உணரக்கூடியது கல்யாணம் மட்டும்தான். மத்த இரண்டும் அவனால உணரமுடியாதது, அதாவது கல்யாணம் மட்டும்தான் அவன் வாழ்க்கையில எல்லாரும் வாழ்த்த அவன் உடல் , மனசு சந்தோசமா இருக்கற நேரம். அதையும் நாசமாக்கிட்டேயே. உன்னையும் என்னையும் பெத்தவங்க அப்புறம் மத்தவங்க ஏன்ன நினைப்பாங்க ? காறி துப்ப மாட்டாங்களா ? இனிமே நான் எப்படி வெளியே தலை காட்ட முடியும் ? “

” நான் மறுபடி சொல்றேன். நமக்குள் நடக்கும் இந்த ஒப்பந்தம் அதாவது நிபந்தனை யாருக்கும் தெரியக் கூடாது. இல்லையென்றால் நான் வீட்டை விட்டு வெளியேறி விடுவேன். அவமானம் உங்களுக்கும் உங்கள் குடும்பத்திற்கும்தான். சற்று யோசித்துப் பாருங்கள். ஒரு பெண்ணுக்கு திருமணம் நிச்சயம் செய்து பின் திடீரென மாப்பிள்ளையை மாற்றினால் அந்தப் பெண்ணின் மனது என்ன பாடுபடும் ? பத்திரிக்கையில் ஒருவன் பக்கத்தில் ஒருவனா ? “

“ தன்னுடைய பெண்ணுக்கு நல்ல வாழ்க்கை அமைய ஒரு பெற்றோர் நினைப்பது தவறா ? “

“ யார் என்ன சொன்னாலும் பரவாயில்லை , யாருக்கு என்ன நடந்தாலும் பரவாயில்லை. எனக்கு என் வாழ்க்கைதான் முக்கியம் “

“ உன் வாழ்க்கையை நீ நரகமாக்கி கொள்வது நியாயமா ? “

“நரகமோ அல்லது சொர்க்கமோ எதுவாயிருந்தாலும் நான் பார்த்துக் கொள்கின்றேன்” .

“ இது நடைமுறைக்கு ஒத்து வராதது “.

“ நான் என்ன தப்பாக கேட்டு விட்டேன் ? கல்யாணம் செய்தவனை ஏமாத்தி விட்டு ஓடி விட்டேனா ? அல்லது காணாமல் போய் விட்டேனா ? என்ன் தப்பு செய்தேன் ? “

“ நீ என்னை கெட்டவனாக மாற்றி விட்டு மற்றவர்கள் முன் நல்லவளாக மாறுவதுதானே உன் திட்டம் ? “

“ சொர்க்கமோ அல்லது நரகமோ அதை நான் பார்த்துக் கொள்கின்றேன். இப்போது நீங்கள் செய்ய வேண்டியது ஒன்றுதான்..”

பேசிவிட்டு சற்று மூச்சு வாங்கினாள் வசந்தி. இலக்கியன் அவளை உற்று நோக்கினான்.

“ என்னுடைய இந்த ஆசை உங்களுக்கு விபரீதமாக இருக்கலாம், வித்தியாசமாக இருக்கலாம், வேடிக்கையாக கூட இருக்கலாம். ஏன் மற்றவர்களுக்கு விநோதமாகபடலாம், முரண்பாடாக இருக்கலாம். அதைப்பற்றி எனக்கு கவலையில்லை. என்க்கு என்னுடைய ஆசைதான் முக்கியம் “.

இலக்கியன் அவளை கூர்ந்து பார்த்தான்.

‘சில பெண்கள் சுதந்திரம் என்ற பெயரில் தனக்குத்தானே தலையில் மண்ணை இல்லை இல்லை தீயை அள்ளித் தலையில் போட்டுக் கொள்கின்றார்கள். உரிமை எது சுதந்திரம் எது என தெரியாமல் குழப்பிக் கொள்கின்றார்கள். எப்படி இருக்க வேண்டிய இரவு இப்படி மாறிவிட்டதே ? என்ன பெண் இவள்.. இப்பொழுது நான் இவளிடம் மாட்டிக் கொண்டேன். கல்யாணத்துக்கு வேடிக்கை பார்க்க வந்தவனை காவு கொடுத்து விட்டார்களே . இவளை எப்படி சரிகட்டுவது ? மற்றவர்களை எப்படி சமாளிப்பது ? இதற்கு என்ன வழி ? ‘

எதுவும் பேசாமல் தன்னைப் பார்த்து ஏதோ யோசித்துக் கொண்டிருந்தவனை வசந்தி பார்த்து தவித்தாள். இலக்கியனிடமிருந்து எப்பொழுது பதில் வரும் என காத்திருந்தாள்.

இலக்கியன் அவள் முகத்துக்கு முகம் பாரத்து சொல்ல ஆரம்பித்தான்.

“ நீ கல்யாணம் ஆன முதல் நாளே எனக்கு ஒரு நிபந்தனை விதித்திருக்கின்றாய். நான் அதற்கு கட்டுபடுகிறேன். ஆனால் நான் உனக்கு ஒரு நிபந்தனை போடுகிறேன். அதற்கு சம்மதித்தால் மட்டுமே உன்னுடைய ஆசை நிறைவேறும்.

இலக்கியன் சொல்ல ஆரம்பித்தான். வசந்தி திகைத்தாள்.

அந்த நிபந்தனை என்ன ?காத்திருங்கள் ……வசந்தி வருவாள்….
 
Top